காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

இந்தியாவில் கார்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது மிகவும் சாதாரணமானது. ஆனால் இந்திய சட்டப்படி கார்களை மாடிஃபிகேஷன் செய்ய கடும் கட்டுப்பாடு உள்ளது. அதன் படி உங்கள் கார்களுக்கு எந்ததெந்த மாடிஃபிகேஷன் எல்ல

By Balasubramanian

இந்தியாவில் கார்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது மிகவும் சாதாரணமானது. ஆனால் இந்திய சட்டப்படி கார்களை மாடிஃபிகேஷன் செய்ய கடும் கட்டுப்பாடு உள்ளது. அதன் படி உங்கள் கார்களுக்கு எந்ததெந்த மாடிஃபிகேஷன் எல்லாம் செய்தால் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்பதை கீழே பார்ப்போம்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

ஸ்டிக்கர் ஒட்டுவது

இந்தியாவில் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது மிகவும் பிரபலமான ஒரு விஷயம். பலர் தங்கள் கார்களில் அதன் லுக்கிற்காக வித்தியாச வித்தியாசமாக வினயல் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். பலர் கார் முழுவதும் ஆங்ககாங்கே பல வித டிசைன்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது, காரின் மேல்பகுதி, ரூப், பானட், ஆகிய பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறுது.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

கார்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். அது காரின் ஒரிஜினல் கலரை பாதிக்காத வரை காரின் ஒரிஜினல் கலர் பாதிக்கப்படும் போது தான் அது சட்ட விதிமீறல் ஆகிறது. நீங்கள் காருக்கு கலநர் மாற்ற வேண்டும் என்றாலும் நீங்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அதற்கான சான்றை பெற வேண்டும்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

பெரிய டயர் பொருத்துதல்

ஸ்டிக்கர் போல சில எஸ்யூவி கார் வைத்திருப்பவர்கள் காரில்பெரிய அலாய் வீல் மற்றும் பெரிய ரக டயர்களை பொருத்துகின்றனர். இதன் மூலம் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் காருக்கான லுக் கிடைக்கிறது. இது இந்தியாவில் காரின் வீல்களை மாற்றுவது அனுமதிக்கப்பட்ட ஒன்று தான் நீங்கள் உங்கள் காரிலும் வீலின் சைஸை பெரிதாக மாற்றிக்கொள்ளலாம்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

பாடி கிட்ஸ்.

கார்களில் சில பாடி கிட்ஸை மாற்றுவது காரை இன்னும் சிறப்பான லுக்கிற்கு மாற்றி விடும். பாடிகிட்ஸை மாற்ற வெளிமார்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டவை. காரின் வடிவம் அதவாது சேஸிசை பாதிக்காமல் செய்யப்படும் எல்லா விதமான பாடிகிட்ஸூம் அனுமதிக்கப்படவை தான்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

சில கார் தயாரிப்பாளர்கள் தாங்களே டீலர்கள் மூலம் பாடி கிட்ஸ்சை விற்பனை செய்கின்றனர். அந்த வகையான பாடிகிட்ஸை மாற்றுவதற்கு ஏற்றார்போல் தான் காரும் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

சஸ்பென்ஸன்

உங்கள் காரின் சிறந்த பெர்பாமென்ஸிற்காக காரில் வழங்கப்படும் சஸ்பென்ஸனை மாற்றி வெளி மார்கெட்டில் வழங்கும் சஸ்பென்ஸை மாற்றி கொள்ளலாம். ஆனால் அதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது கிரவுண்ட் கிளியரன்ஸ் விஷயத்தில் தான்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

கார் விற்பனைக்கு வரும் போது வழங்கப்படும் கிரவுண்ட் கிளியரன்ஸில் இருந்து சிறிது மாற்றங்கள் இருக்கலாம் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் படி இருந்ததால் அது சட்ட விதிமீறல், அதே போல் ஸ்டெட் பிரெஸிஸ் அல்லது சஸ்பென்ஸன் பேடுகளை அமைக்கலாம் அதுவும் சட்ட விதிமீறல் இல்லை.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

ஆக்ஸிலரி லேம்ப்

உங்கள் காரின் ஹெட்லைட்டை மாற்றியமைப்பது என்பது சட்ட விதிமீறல் மற்றும் அல்ல உங்களுக்கும் ஆபத்தானது. ஆனால் ஹெட்லைட் தவிர வேறு ஆக்ஸிலரி லைட்களை அமைப்பது என்பது சட்ட விதிமீறல் இல்லை. இந்த லைட்டுகள் ஹெட்லைட்டிற்கு மேல் புறமாக அமைக்கப்பட வேண்டும். இந்த லைட்டை ஆஃப் ரோட்டில் தான் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பயன்படுத்துவது விதிமுறை மீறல் , அதே நேரத்தில் லைட்டை காரின் மேல் பகுதியில் பொறுத்துவதே சட்ட விதிமுறை மீறல்

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

எல்இடி லைட்கள்

காரின் முகப்பு பகுதியில் உள்ள ஹெட்லைட்டை வழக்கமான லைட்ட இல்லாமல் வேறு லைட் பொறுத்துவது சட்ட விதிமுறை மீறல் தான். ஆனால் சரியான ஹெட்லட் இருந்து பகல் நேரத்தில் எரியும் எல்இடி லைட்களை பொருத்துவது சட்டத்தில் அனுமதிக்கப்பட் ஒன்று தான். அதே போல் தான் பின் பக்கமு் பகல் நேர எல்இடிகள் அமைத்து கொள்ளலாம். அதே நேரத்தில் பின்பக்க டெயில் லைட்டின் கலரை மாற்றுவது சட்டப்படி குற்றம்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

சீட் கலர்

வாகனங்களில் நீங்கள் சீட் கலரை மாற்றவது, சீட்டிற்கு கவர் மாட்டுவது குற்றமில்லை. பலர் டோர்களின் உட்பகுதி, சீட், டேஷ்போர்டு, என எல்லோவற்றையும் ஒரு வித ரசனையோடு செய்ய ஆசைப்படுவார்கள் அதை அவர்கள் இஷ்டப்படி செய்யலாம். இதற்கு சட்டம் எந்த வகையிலும் தடையில்லை.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் உங்கள் காரில் ஏர் பேக் வசதி இருந்தால் அந்த ஏர் பேக் வெளிப்படும் இடத்தில் நீங்கள் லேதர் மூலம் இன்டீரியரை மாற்றினால் அந்த ஏர் பேக் வெளியேற லேட் ஆகலாம் அல்லது வெளியேறாமலே போகலாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

பியூயல் ஆல்ட்ரேஷன்

உங்கள் காருக்கு எல்பிஜி அல்லது சிஎன்ஜி பியலை மாற்ற வேண்டும் என நினைத்தால் நீங்கள் அதை மாற்றலாம் இதற்கு சட்டத்தில் என்ற குற்றமும் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு அங்கீகாரம் பெற்ற கிட்களையே மாற்ற வேண்டும். தரமில்லாத கிட்களை பொருத்தினால் விபத்து ஏற்பட கூடும். பியூல் ஆல்டரேஷன் செய்த பின் அதற்கான சான்றை வாங்க வேண்டியது கட்டாயம்

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

பாதுகாப்பு அம்சங்கள்

சிலர் கார் வாங்கும் போது அதில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் இருக்காது. கார் வாங்கி பின் வெளி மார்கெட்டில் அதை வாங்கி பொருத்தி கொள்வது சட்ட விதிமுறை மீறல் ஆகாது. ஆனால் இதற்காக எலெக்ட்ரிக்கல் மாடிஃபிகேஷன் செய்வதால் வாரண்டி கிடைக்காது. அனால் சட்டப்படி இது விதிமுறை இல்லை என்பதால் சட்ட ரீதியிலான பிரச்னைகள் வராது.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

சொகுசு அம்சங்கள்

சில கார்களில் பார்க்கிங் சென்சார் ரியர் வியூ கேமரா ஆகிய அம்சங்கள் இருக்காது. இந்த வகையான அம்சங்களை வெளி மார்கெட்டில் வாங்கி பொருத்தி கொள்வது சட்ட விதிமுறை மீறல் இல்லை. இது டிரைவரின் வசதிக்காக பொருத்தி கொள்வது. இது போன்ற நாம் வசதிக்காக செய்து கொள்வதில் சட்டவிதிமுறை மீறல்கள் இல்லை.

காரை இப்படி எல்லாம் மாடிஃபிகேஷன் செய்தால் போலீஸ்ல மாட்ட மாட்டீங்க..!

ரூப் ரேக்

ரூப் ரேக்களை காரில் பொருத்தி கொள்வது சட்ட விதிமுறை மீறல் இல்லை. ஆனால் எல்லோராலும் ரூப் ரேக்களை பொருத்த முடியாது. கார் பதிவின் போது ரூப் ரேக் பொருத்த அனுமதியளித்திருந்தால் மட்டும் அவர்கள் பொருத்த முடியும் அவ்வாறு அனுமதியில்லாதகாரில் பொருத்தப்பட்டால் அபராதம் செலுத்த நேரிடும் கவனம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. உல்லாச கப்பலான தமிழக அரசு பஸ்கள்... படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்!
  2. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
  3. மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?
  4. புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் அறிமுக தேதி விபரம் வெளியானது
  5. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!
Image Source:1,2,3,4,5,6,7
Most Read Articles
English summary
car modifications to make sure your vehicle doesn’t get SEIZED.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X