ரூ.11,600 கோடியை ஏப்பம் விட்ட நிரவ் மோடியிடம் ரூ.10 கோடி மதிப்புக்கு சொகுசு கார்கள்!

By Saravana Rajan

"கடன்பட்டோர் நெஞ்சம் போல் கலங்கினான், இலங்கை வேந்தன்!" என்று கடன் வாங்குவோரின் நிலையை எந்தளவு கவலைக்குரியது என்பதை உவமையாக கூறுவதுண்டு. ஆனால், இக்காலத்தில் பல்லாயிரம் கோடி கடனை பெற்றுக் கொண்டு, கண்ணில் அகப்படாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதும், அங்கு ஆடம்பரம் குறையாமல் வாழ்வதும் வா(வே)டிக்கையாக உள்ளது. இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் வைர வியாபாரி நிரவ் மோடி.

ரூ.11,600 கோடியை ஆட்டையை போட்ட நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,600 கோடியை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு இப்போது வெளிநாட்டில் இருந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் வைர வியாபாரி நிரவ் மோடி. இந்த நிலையில், அவர் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது அமலாக்கத்துறை. அதன் ஒரு பகுதியாக, அவருக்கு சொந்தமான சொகுசு கார்களை மொத்தமாக பறிமுதல் செய்து நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ரூ.11,600 கோடியை ஆட்டையை போட்ட நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!

பெல்ஜியம் நாட்டில் தொழில் செய்து வந்த நிரவ் மோடி, இந்தியாவிற்கு வந்து தனது உறவினருடன் சேர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டார். ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தை ஸ்தாபித்து வைர வியாபாரத்தில் இந்தியாவின் முக்கிய புள்ளியாக விளங்கினார்.

ரூ.11,600 கோடியை ஆட்டையை போட்ட நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!

இந்த நிலையில், வங்கியில் அவர் செய்த பல்லாயிரம் கோடி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், அவர் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் இந்த சொகுசு கார்களின் மூலமாகவே அம்பலத்திற்கு வந்ததுள்ளது. மொத்தம் 7 விலை உயர்ந்த கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அந்த கார்களின் விபரங்களை இங்கே வழங்கி இருக்கிறோம்.

01. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

01. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் இல்லாத பெரும் பணக்காரர்களா... நிரவ் மோடியிடமும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் இருக்கிறது. இந்த கார் ரூ.5.25 கோடி விலை மதிப்புடையது. இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் ரோல்ஸ்ராய்ஸ் கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ரூ.11,600 கோடியை ஆட்டையை போட்ட நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!

இந்த காரின் சிறப்பம்சங்கள் என்று சொன்னால், சக்திவாய்ந்த வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த 6.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 560 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. செயற்கைகோள் சிக்னல் வழிகாட்டுதலில் இயங்கும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

 02. போர்ஷே பனமிரா

02. போர்ஷே பனமிரா

மிகத் தனித்துவமான ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வரும் போர்ஷே நிறுவனத்தின் 4 கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் செடான் ரகத்தை சேர்ந்த மாடல்தான் போர்ஷே பனமிரா. இந்த கார் ரூ.2 கோடி விலை மதிப்புடையது. இந்த கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டது. எனினும், மிகச் சிறப்பான சொகுசு அம்சங்களையும், வடிவமைப்பாலும் கவர்கிறது.

03. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350 சிடிஐ

03. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350 சிடிஐ

உலகின் மிகச் சிறந்த சொகுசு எஸ்யூவி கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் க்ளாஸ் எஸ்யூவியும் முதன்மையானதாக விளங்குகிறது. இந்த எஸ்யூவி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை நெருங்கும் விலையில் கிடைக்கிறது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சம், இதில் இருக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின். அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆஃப்ரோடு ஆசையையும் தீர்க்கும் தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது.

04. மெர்சிடிஸ் சிஎல்எஸ் க்ளாஸ்

04. மெர்சிடிஸ் சிஎல்எஸ் க்ளாஸ்

கடந்த தலைமுறை மெர்சிடிஸ் சிஎல்எஸ் சொகுசு கார் ஒன்றும் நிரவ் மோடியிடம் உள்ளது. இந்த கார் ரூ.70 லட்சம் விலை மதிப்புடையது. இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. செயல்திறன், சொகுசு அம்சங்களில் கலக்கலான கார் மாடலாக இருக்கிறது.

 05. டொயோட்டா ஃபார்ச்சூனர்

05. டொயோட்டா ஃபார்ச்சூனர்

கம்பீரத்தை விரும்பும் பெரும் பணக்காரர்கள் வீட்டை அலங்கரிக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒன்றையும் வாங்கி பயன்படுத்தி வந்தார் நிரவ் மோடி. இந்த கார் ரூ.30 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் இந்த காரின் சிறப்பம்சங்கள்.

06. டொயோட்டா இன்னோவா

06. டொயோட்டா இன்னோவா

நடுத்தர வர்க்கத்தினரின் சொகுசு கார் மாடலாக வலம் வரும் டொயோட்டா இன்னோவா பெரும் பணக்காரர்களிடமும் நன்மதிப்பை பெற்ற மாடல். நிரவ் மோடியிடம் கடந்த தலைமுறை மாடல் டொயோட்டா இன்னோவா கார் இருக்கிறது.

07. ஹோண்டா சிஆர்-வி

07. ஹோண்டா சிஆர்-வி

நிரவ் மோடியிடம் ஹோண்டா சிஆர்- வி எஸ்யூவி மாடலும் இருந்துள்ளது. இந்தத கார் ரூ.28 லட்சம் மதிப்புடையது. இந்த காரையும் நிரவ் மோடியின் பிடியிலிருந்து அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

பேன்ஸி எண்

பேன்ஸி எண்

நிரவ் மோடியின் அனைத்து கார்களுமே ஃபேன்ஸியான பதிவு எண் பெறப்பட்டு இருக்கிறது. இதற்கும் பல லட்சங்களை செலவாகி இருக்கும்.

கார்கள் மதிப்பு

கார்கள் மதிப்பு

நிரவ் மோடியின் வீட்டியிலிருந்து கைப்பற்றப்பட்ட கார்கள் அனைத்தும் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.10 கோடி என தெரிய வந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், அவருக்கு சொந்தமான பிற இடங்களிலும் உள்ள அவருக்கு சொந்தமான கார்கள் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Source: News18

இந்தியாவின் முன்னணி சிஇஓ.,க்கள் பயன்படுத்தும் கார்கள்!!

பெரும் பணக்காரர்கள் தங்களது அந்தஸ்தை காட்டுவதற்காக விலை உயர்ந்த கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்களின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ.11,600 கோடியை ஆட்டையை போட்ட நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!

ரூ.10 கோடி மதிப்புடைய குண்டு துளைக்காத பாதுகாப்பு கொண்ட புதிய பிஎம்டபிள்யூ சொகுசு காரை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பயன்படுத்துகிறார்.

இந்தியாவின் முன்னணி சிஇஓ.,க்கள் பயன்படுத்தும் கார்கள்!!

குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்குதல்களில் சேதமடையாத சேஸி, அடிப்பாகம் மற்றும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பாடியும் அதேபோன்று குண்டு துளைக்காத விசேஷ ஸ்டீலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவையும் இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றது.

இந்த கார் தவிர்த்து மேபக், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கார்களை தனது அன்டிலியா வீட்டு கராஜில் அடுக்கி வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. மேலும், இவருக்கான ஓட்டுனரின் சம்பளமும் தலை சுற்ற வைக்கிறது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மஞ்சள் நிற லம்போர்கினி அவென்டெடார் சூப்பர் காரை வைத்துள்ளார். இது தவிர போர்ஷே மற்றும் மெர்சிடிஸ் கார்களும் அவரிடத்தில் உண்டு.

குமார் மங்களம் பிர்லா

குமார் மங்களம் பிர்லா

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் பிரிமியம் செடான் காரில்தான் சென்று வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் இந்த காரும் ஒன்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஸிம் பிரேம்ஜி

அஸிம் பிரேம்ஜி

இந்த பட்டியலில் சற்று விதிவிலக்கானவர் விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி. எளிமையை விரும்பும் இவர் தற்போது டொயோட்டோ கரோல்லா மற்றும் பென்ஸ் உள்ளிட்ட கார்களை பன்படுத்துகிறார்.

பென்ஸ் காருக்காக காத்திருக்காமல் சில வேளைகளில் ஆட்டோ ரிக்ஷாவிலும் பயணிக்கும் சுபாபவம் கொண்டவர்.

சுனில் பார்தி மிட்டல்

சுனில் பார்தி மிட்டல்

பார்தி ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தற்போது மெர்சிடிஸ் எஸ்-500 செடான் காரைத்தான் பயன்படுத்தி வருகிறார். இதுதவிர, இவரது வீட்டு கேரேஜில் ஏராளமான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சுபாஷ் சந்த்ரா

சுபாஷ் சந்த்ரா

ஸீ டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் சந்த்ரா மெர்சிடிஸ் வயானோ 3.5 எம்பிவியை பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் பிளாஸ்மா டெலிவிஷனும், அதற்கு டிஷ் ஆன்டெனாவும் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

தமிழகத்தை சேர்ந்தவரும், எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஷிவ் நாடார் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆடம்பர காரை வைத்துள்ளார். இதுதவிர, அவரிடம் மெர்சிடிஸ் 500எஸ்இஎல் காரும் உள்ளது.

விசி.பர்மன்

விசி.பர்மன்

நாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான டாபர் குழுமத்தின் தலைவர் வி.சி.பர்மன் மெர்டிசிஸ் கொம்பரஸர் காரை வைத்துள்ளார். இதுதவிர, ஸ்போர்ட்ஸ் கார்களையும் இவர் வைத்திருக்கிறார்.


ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கார் ஆர்வலர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவரது கராஜில் ஃபெராரி, மஸராட்டி என பல விலை உயர்ந்த கார்கள் அலங்கரித்து வருகின்றன.

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எஸ்யூவியையும் தனது கராஜில் இணைத்துள்ளார் ரத்தன் டாடா. அந்த நீல வண்ண நெக்ஸான் காருடன் ரத்தன் டாடா எடுத்துக்கொண்ட படமும் இணையதளங்களில் வெளிவந்துள்ளன.

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் தயாரிப்பில் முனைப்பு காட்டி வரும் இவ்வேளையில், அந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக டாடா நெக்ஸான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி என்ற பெருமையும் நெக்ஸானுக்கு உண்டு.

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்திருக்கும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டீசல் மாடல் என்பது தெரிய வந்துள்ளது. இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

இந்த எஸ்யூவி லிட்டருக்கு 23.9 கிமீ மைலேஜ் தரும் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். இந்த எஸ்யூவியில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதுதவிர, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும். ரூ.7.20 லட்சம் என்ற மிக சவாலான விலையில் டீசல் மாடல் கிடைக்கிறது.

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

டாடா நெக்ஸான் போன்றே, ஏற்கனவே தனது சொந்த நிறுவனத்தின் சில கார் மாடல்களை விரும்பி வாங்கி வைத்திருக்கிறார் ரத்தன் டாடா. அதில் எஸ்டேட் ரகத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா இண்டிகோ மரினா காரும் உண்டு.

ஃபெராரி கார்

ஃபெராரி கார்

ரத்தன் டாடாவிடம் ஃபெராரி கலிஃபோர்னியா ஸ்போர்ட்ஸ் காரும் உள்ளது. MH01 AL111 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரை மும்பையின் கடலோரச் சாலைகளில் தானே ஓட்டிச் செல்வதை முன்பு வழக்கமாக வைத்திருந்தார். இந்த காரில் 453பிஎச்பி பவரை வழங்க வல்ல 4.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிவிக்

ரத்தன் டாடாவிடம் ஹோண்டா சிவிக் செடான் காரும் உள்ளது. இந்த காரில் அலுவலகம் வரும்போது எடுக்கப்பட்ட படங்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமைக்கும் உரியது ஹோண்டா சிவிக். 10 தலைமுறைகளை தாண்டி விற்பனையில் தாக்குப் பிடித்து வருகிறது.

மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே

மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே

ரத்தன் டாடாவின் இல்லத்தின் கராஜிற்கு மதிப்பு சேர்க்கும் மாடல்களில் ஒன்று மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே. 1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகின் மிகவும் பாரம்பரிமிக்க ஸ்போர்ட்ஸ் செடான் கார் மாடல் இது என்பதும் ரத்தன் டாடாவை கவர்ந்த விஷயமாக இருக்கிறது.

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர்

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர்

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர் கார் மாடலும் ரத்தன் டாடாவிடம் உள்ளது. இந்த காரில் 320 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 4.6 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்

மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்

கடலோர சாலைகளில் கூரை இல்லாத அமைப்புடைய கார்களில் வலம் வருவதை ரத்தன் டாடா அதிகம் விரும்புகிறார். அதன்படி, அவரது கராஜில் அடுத்து இருக்கும் ஒரு கன்வெர்ட்டிபிள் மாடல்தான் மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல். இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 306 பிஎச்பி பவரை அளிக்க வல்லது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

உலகின் மிகவும் சிறந்த சொகுசு கார் மாடலாக வர்ணிக்கப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரும் ரத்தன் டாடாவிடம் உள்ளது. இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை வசியப்படுத்தும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஜாகுவார் எஃப் டைப்

ஜாகுவார் எஃப் டைப்

தனது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான எஃப்- டைப் கார் மாடலையும் ரத்தன் டாடா வாங்கி வைத்திருக்கிறார். உலகின் அழகிய கார் மாடல்களில் ஒன்றாகவும் பாராட்டப்படுகிறது. கன்வெர்ட்டிபிள் கார்கள் மீதான ரத்தன் டாடாவின் காதலுக்கு இந்த அழகியும் ஒரு சான்றுதான். இந்த காரில் 488 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர்

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர்

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர் ரத்தன் டாடா அதிகம் பயன்படுத்தும் கார் மாடல். செடான் காரின் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் காரின் செயல்திறனை பெற்றிருக்கிறது. இந்த காரிலும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 503 பிஎச்பி பவரையும், ,625என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு எஸ்யூவி மாடல்தான் ஃப்ரீலேண்டர். ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் ரத்தன் டாடாவை கவர்ந்துள்ளது.

க்றைஸ்லர் செப்ரிங்

க்றைஸ்லர் செப்ரிங்

ரத்தன் டாடாவிடம் க்றைஸ்லர் செப்ரிங் கார் மாடலும் உள்ளது. அவரது கராஜில் இருக்கும் தனித்துவமான கார் மாடல்களில் இதுவும் ஒன்று. தனது கராஜில் உள்ள பல கார்களை சொந்தமாக ஓட்டி பார்ப்பதில் ரத்தன் டாடா ஆர்வமாக இருப்பவர். பெரும்பாலான நேரங்களில் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை.

Tamil
English summary
Nirav Modi Luxury cars seized By ED
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more