பஜாஜ் வெளியிடும் புத்தம் புதிய டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ, புதிய டிஸ்கவர் 110 மாடல் பைக்கை வெளியிட தீவிர கதியில் தயாராகி வருகிறது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

டிஸ்கவர் 110 மாடல் அறிமுக விழாவில் டோமினோர் 400 மற்றும் மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் சிரீஸ் பைக்குகளையும் பஜாஜ் வெளியிடவுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

டிஸ்கவர் மாடலில் 110சிசி திறன் பெற்ற பயணிகள் ரக மோட்டார் சைக்கிள் வெளிவருவது இது இரண்டாவது முறை.

அதேபோல பயணிகள் வாகன விற்பனையில் இந்த மாடல் பைக் பஜாஜின் 6வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

டிஸ்கவர் 110 பைக், பிளாட்டினா 100 மற்றும் டிஸ்கவர் 125 மோட்டார் சைக்கிளுக்கு இடைப்பட்ட தயாரிப்பாக இருக்கும். எனினும் இதனுடைய மொத்த ஸ்டைலிங்கும் டிஸ்கவர் 125சிசி மாடலை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

2018ம் ஆண்டில் வெளிவரும் மேம்படுத்தப்பட்ட டிஸ்கவர் 125 மற்றும் 110 மாடல் பைக்குகள் இரண்டும் மேட் பிளாக் நிறத்தில் அலாய் சக்கரங்களை பெற்றிருக்கும்.

Trending On Drivespark Tamil:

2018 ஸ்விஃப்ட் தெறிக்கவிட வருகிறது பீஜோ 208 கார்... தற்போது தீவிர சோதனையில்..!!

தொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு..?? விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!!

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

இவற்றுடன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சில்வர் நிறத்திலான சைடு பேனல்கள் மற்றும் புத்தம் புதிய கிராஃபிக்ஸ் வேலைபாடுகளுடன் வடிவமைப்பட்டுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

டிஸ்கவர் 110சிசி திறன் பெற்ற மாடல் என்பதால், பஜாஜ் நிறுவனம் பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை வைத்து மட்டுமே தயாரித்துள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

அதன்படி பார்த்தால், இந்த பைக்கில் எலெக்ட்ரிக் ஸ்டார்டர், ஹேண்டில் - என்ட் வெயிட்ஸ் மற்றும் கேஸ் சார்ஜிடு செய்யப்பட்ட டூயல் ஷாக் அப்ஸபர் உள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

மேலும் டிஸ்கவர் 125 மாடலில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது அதேபோல 110 மாடல் பைக்கில் டிரம் பிரேக் செட்டப் பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் உள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் 110சிசி திறன் பெற்ற ஏர் கூல்டு, டிடிஎஸ்-ஐ எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 8.5 பிஎச்பி பவர் மற்றும் 9.5 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

இந்த எஞ்சினுக்கு அதிக எரிவாயு கொள்ளவு உள்ளது என பஜாஜ் தெரிவித்துள்ளது மேலும் இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல் பைக் ரூ.50,500 (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்கவர் 125 மற்றும் 110 மாடல்களுக்கான பெரிய வித்தியாசம் என்று பார்த்தால் அது டயர் தான்.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

டிஸ்கவர் 110 சிசி பைக்கை விட டிஸ்கவர் 125சிசி மாடலில் டயர்கள் சற்று குறைந்த தடிமானத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. மத்தபடி இரண்டு மாடல்களிலும் பெரியளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை.

Trending On Drivespark Tamil:

2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..!!

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

டிஸ்கவர் ரேஞ்ச் பைக்குகளுக்கு இணையாக பஜாஜ் நிறுவனம் டோமினோர் மற்றும் அவென்ஜர் சிரீஸ் பைக்குகளையும் மேம்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

பஜாஜ் 2018 டோமினோர் 400 மாடல் பைக், சிவப்பு மற்றும் நீலம் என கூடுதலாக இரண்டு நிற தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல அவென்ஜர் 220 மற்றும் 150 மாடல் பைக்குகளையும் பஜாஜ் புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் மேம்படுத்தியுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

பயணிகள் ரக என்ட்ரி-லெவல் மோட்டார் சைக்கிளில் டிஸ்கவர் 110சிசி பைக் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பவர் ஸ்டார்ட் அம்சங்களை பெற்றிருப்பது அதற்கான வரவேற்பை அதிகரிக்கும்.

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்

இந்திய சந்தையில் புதிய டிஸ்கவர் 110 பைக் ஹீரோ ஃபேஷன், ஃபேஷன் எக்ஸ்-ப்ரோ மற்றும் டிவிஎஸ் விக்டர் 110 பைக்குகளுக்கு போட்டியாக அமையும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Read in Tamil: Bajaj To Introduce Discover 110 In India Launch Details And Price Revealed. Click for Details...
Story first published: Saturday, January 6, 2018, 10:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark