இந்த ஆண்டில் அறிமுகமான டாப் கார் மாடல்கள்: சிறப்பு தொகுப்பு

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பரபரப்புடன் துவங்கிய இந்த ஆண்டு, ஆட்டோமொபைல் துறையின் சுறுசுறுப்பான ஆண்டு என்றும் கூறலாம். இதுவரை இல்லாத அளவாக ஏராளமான கார் மாடல்கள் அடுத்தடுத்து மார்க்கெட்டுக்கு வந்தன.

மாருதியின் புதிய குட்டிக் கார் முதல் பிஎம்டபிள்யூவின் 3 சீரிஸ் வரை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மிக முக்கியமான கார் மாடல்களின் விபரங்களுடன் இந்த சிறப்பு தொகுப்பை வழங்குகிறோம்.

2012 கார் மாடல்கள்

2012 கார் மாடல்கள்

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ்

நிசான் மைக்ராவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலான பல்ஸ் ஹேட்ச்பேக் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி அறிமுகம் செய்தது ரெனோ. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது. 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு நகர்ப்புறங்களில் 14 கிமீ மைலைஜையும், நெடுஞ்சாலைகளில் 18 கிமீ மைலேஜையும், 63 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 கே9கே எஞ்சின் பொருத்தப்பட்ட டீசல் மாடல் லிட்டருக்கு 23.08 மைலைஜையும் தரும் என்கிறது ரெனோ. டாப் ஸ்பீட் மணிக்கு 160 கிமீ வேகம்.டாப் என்ட் மாடலில் மியூசிக் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களுடன் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.4.35 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.6.96 லட்சம் முதலும் கிடைக்கிறது.

மாருதி ஸ்விப்ட் டிசையர்

மாருதி ஸ்விப்ட் டிசையர்

வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் கூடிய ஸ்விப்ட் டிசையர் என்ட்ரி லெவல் காம்பெக்ட் செடான் காரை பிப்ரவரியில் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது. பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களிலும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. 86 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 19.1 கிமீ மைலைஜையும், ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.4 கிமீ மைலைஜை தரும் என்கிறது மாருதி. அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கும் இந்த காரின் பெட்ரோல் மாடல் சென்னையில் ரூ.5.76 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ7.09 லட்சம் முதலும் ஆன்ரோடு விலையிலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.6.76 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

சிறிய மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் மாருதி வேகமாக வளர்ந்து வரும் யுட்டிலிட்டி மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட எர்டிகா என்ற முதல் எம்பிவி காரை ஏப்ரலில் அறிமுகம் செய்தது. மாருதியே எதிர்பாராத அளவுக்கு பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. 93 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் புதிய கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 88.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.02 கிமீ மைலைஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.77 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி தெரிவிக்கிறது. அலாய் வீல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் உள்ளிட்ட ஏராளமான நவீன அம்சங்களை கொண்டிருக்கிறது. நேர் போட்டியாளரான டொயோட்டா இன்னோவா ரூ.9 லட்சம் விலை முதல் கிடைக்கும் நிலையில், சென்னையில் இந்த காரின் பெட்ரோல் மாடல் ரூ7.27 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ8.95 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா குவான்ட்டோ

மஹிந்திரா குவான்ட்டோ

யுட்டிலிட்டி மார்க்கெட்டில் எந்த ரகத்திலும் இடைவெளி இருக்கக்கூடாது என்று முன்ஜாக்கிரதையுடன் மஹிந்திரா அறிமுகப்படுத்திய மினி எஸ்யூவிதான் குவான்ட்டோ. 7 இருக்கைகளை கொண்ட இந்த புதிய மினி எஸ்யூவியில் எண்ணிலடங்கா சிறப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்திருக்கிறது மஹிந்திரா. 100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் குவான்ட்டோ லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜ் செல்லும் என்கிறது மஹிந்திரா. ரூ.7.03 லட்சம் முதல் கிடைக்கிறது.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

யுட்டிலிட்டி மார்க்கெட்டில் மஹிந்திராவின் விஸ்வரூபத்தை கண்டு அசங்காத டாடா ஆர்ப்பாட்டமில்லாமல் தனது புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை அறிமுகம் செய்தது. 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவுடன் வந்திருக்கம் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூயிவில் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டிகோர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆரியாவின் மறுவடிவமைப்பு கொண்ட சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷனையும் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் பொருத்தியுள்ளது டாடா. ரூ.9.95 லட்சம்ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டன்

மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டன்

மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவின் சாங்யாங் பிராண்டில் வந்திருக்கும் முதல் கார் ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவி. மிடுக்கான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி போட வந்திருக்கும் ரெக்ஸ்டன் 2.7 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 162 பிஎச்பி ஆற்றலுடன் கூடிய மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷனும், 184 பிஎச்பி ஆற்றலுடன் கூடிய எஞ்சின் மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலிலும் கிடைக்கிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் ரூ.17.67 லட்சத்திலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.19.67 லட்சத்திலும் மஹாராஷ்டிர எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

2012 ஃபோர்டு ஃபிகோ

2012 ஃபோர்டு ஃபிகோ

அடுத்தடுத்து புதிய மாடல்களின் வரவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கும் விதமாக வடிவமைப்பில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஃபிகோ காரை ஃபோர்டு அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வந்தது. எஞபுதிய ஹெட்லைட், ஹெட்லைட்டுக்குள் வந்த இன்டிகேட்டர் விளக்குகள், எண்கோண வடிவ ஏர்டேம், மைல்டு கிரில் என முகப்பு மிக வசீகரமாக மாறியிருக்கிறது. 70 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 15.6 கிமீ மைலேஜையும், 69 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜையும் தரும் என்கிறது ஃபோர்டு.

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

நிசான் சன்னியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் ரெனோவின் ஸ்காலா. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது. 97 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு ரூ.5.93 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.9 கிமீ மைலைஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.6 கிமீ மைலைஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது. நிசான் சன்னியின் பேஸ் மாடல் ரூ.5.89 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், ஸ்கேலாவின் பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.6.99 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800

நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் குட்டிக் காரான ஆல்ட்டோ வரிசையில் மாருதி களமிறக்கிய புதிய குட்டிக் கார் ஆல்ட்டோ 800. வழக்கம்போல் ரூ.2.44 லட்சம் என்ற சவாலான விலையில் வந்திருக்கும் இந்த குட்டிக் கார் இதுவரை 50,000க்கும் அதிகமான புக்கிங்குகளை பெற்று அசத்தியிருக்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் 47.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 796 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 30.46 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என அராய் சான்று தெரிவிக்கிறது. டாப் என்ட் மாடலில் டிரைவர் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.2.44 லட்சம் விலையிலும், சிஎன்ஜி மாடல் ரூ.3.26 லட்சம் விலை முதலும் கிடைக்கிறது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் மாடல்களில் டஸ்ட்டரும் ஒன்று. காம்பெக்ட் எஸ்யூவி ரகத்தில் வந்த டஸ்ட்டர் பெட்ரோல் மற்றும் இரண்டு வித பவரை வெளிப்படுத்தும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. 104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 13.24 கிமீ மைலேஜ் தரும். 83 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் மாடல் லிட்டருக்கு 20.46 கிமீ மைலேஜையும், 108 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றொரு டீசல் மாடல் லிட்டருக்கு 19.01 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என்று ரெனோ தெரிவிக்கிறது. சென்னையில் டஸ்ட்டரின் பெட்ரோல் மாடல் ரூ.8.85 லட்சம் முதல் கிடைக்கிறது. 85 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடல் ரூ.9.85 லட்சத்திலும், 110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடல் ரூ.12.61 லட்சத்திலும் கிடைக்கிறது.

மஹிந்திராவின் புதிய வெரிட்டோ

மஹிந்திராவின் புதிய வெரிட்டோ

ரெனோவிடம் இருந்து பெறப்பட்ட வெரிட்டோவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் பல மாறுதல்களுடன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 15.7 கிமீ மைலேஜையும், 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 19.2 கிமீ மைலேஜையும் தரும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.5.27 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.6.26 லட்சம் முதலும் கிடைக்கிறது.

செவர்லே ஸ்பார்க்

செவர்லே ஸ்பார்க்

மாருதியின் புதிய ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் போன்ற புதிய மாடல்களால் செவர்லே ஸ்பார்க் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானது. இதையடுத்து, வடிவமைப்பில் மாறுதல்களுடன், கூடுதல் அம்சங்களுடன் கடந்த அக்டோபரில் புதிய ஸ்பார்க்கை செவர்லே விற்பனைக்கு விட்டது. 63 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்பார்க் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. சென்னையில் பேஸ் மாடல் ரூ.4.26 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 செவர்லே செயில் யுவா

செவர்லே செயில் யுவா

பிரிமியம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் சரியான மாடல்கள் இல்லாமல் விற்பனையில் பின்தங்கிய செவர்லே நவம்பரில் செயில் யுவா காரை அறிமுகம் செய்தது. சீனப் பிரிவு ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்பான செயில் யுவா அங்கு பெரும் வெற்றியை பெற்ற கையோடு இந்திய மார்க்கெட்டிலும் களமிறங்கியிருக்கிறது. 85 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 18.3 கிமீ மைலேஜையும், 77 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும் தரும் என்கிறது அராய் சான்று. சென்னையில் பெட்ரோல் மாடல் ரூ.5.26 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.6.92 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

நிசான் எவாலியா

நிசான் எவாலியா

யுட்டிலிட்டி மார்க்கெட்டின் வேகத்தை பார்த்த நிசான் தனது எவாலியா எம்பிவி காரை எதிர்பார்ப்புடன் செப்டம்பரில் களமிறக்கியது. டொயோட்டா இன்னவோவாவுக்கு நேரடி போட்டியாளரான எவாலியாவில் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் வந்திருக்கிறது. லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது. ரூ.8.49 லட்சம் முதல் கிடைக்கிறது.

டாடா இன்டிகா இவி2

டாடா இன்டிகா இவி2

மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் தரும் டீசல் ஹேட்ச்பேக் கார் டாடா இண்டிகா இவி2. இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த அக்டோபரில் விற்பனைக்கு வந்தது. 69 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இண்டிகா இவி2 லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது. புதிய இண்டிகா இவி2 ரூ.4.01 லட்சம் முதல் கிடைக்கிறது.

 மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

52 புதிய மாற்றங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ரிட்ஸ் மாடலை மாருதி செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வந்தது. முதலில் டீசலிலும், பின்னர் பெட்ரோலிலும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரிட்ஸ் காரின் டீசல் மாடலில் கூடுதலாக இசட்டிஐ டாப் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் என பெயர் பெற்ற ரிட்ஸ் மைலேஜிலும் தன்னிறைவான கார். டீசல் மாடல் லிட்டருக்கு 23.2 கிமீ மைலேஜ் செல்லும் என அராய் சான்று கூறுகிறது. பெட்ரோல் மாடல் ரூ.4.32 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.5.31 லட்சம் முதலும் கிடைக்கிறது.

பென்ஸ் பி கிளாஸ்

பென்ஸ் பி கிளாஸ்

போட்டியாளர்களை ஒரு கை பார்க்க பென்ஸ் அறிமுகப்படுத்திய மாடல்தான் பி கிளாஸ். ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஏராளமான வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதிய சொகுசு கார் ரூ.21.49 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி க்யூ-3

ஆடி க்யூ-3

இளம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் க்யூ-3 என்ட்ரி லெவல் எஸ்யூவியை ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்தது ஆடி. அறிமுகம் செய்யப்பட்டு ஒரே வாரத்தில் முதல் லாட் புக்கிங் முடிந்து போனது. சிறந்த வடிவமைப்பு, நிறைந்த வசதிகள் கொண்ட இந்த காரில் ஏ4 என்ட்ரி லெவல் செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.0 டிடிஐ டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. க்யூ3 எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.26.21 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.31.49 லட்சத்திலும் விற்பனைக்கு செய்யப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ-ஜென் ஐ20

புதிய ஹூண்டாய் ஐ-ஜென் ஐ20

புதிய ஸ்விப்ட்டின் வருகையால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் புதிய ஐ20 காரை கடந்த மார்ச்சில் விற்பனைக்கு கொண்டு வந்தது ஹூண்டாய். புதிய ஐ20யில் ட்யூனிங் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்தியுள்ளது ஹூண்டாய். இந்த எஞ்சின் 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதேபோன்று 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது புதிய ஐ20. ஆட்டோமேட்டிக் மாடலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.4.74 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.5.97 லட்சம் முதலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.7.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மினி பிராண்டு கார்கள்

மினி பிராண்டு கார்கள்

பிஎம்டபிள்யூவின் அங்கமாக செயல்படும் உலக புகழ்பெற்ற பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான மினி பிராண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது. ஈடு இணையற்ற வடிவமைப்பு, தரமான கட்டுமானம் கொண்ட மினி பிராண்டின் மூன்று கார் மாடல்களை மினி பிராண்டு விற்பனை செய்கிறது. மினி கூப்பர் ரூ.24.90 லட்சத்திலும், மினி கூப்பர் எஸ் ரூ.27.90 லட்சம் விலையிலும், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் ரூ.29.99 லட்சம் விலையிலும், மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் ரூ.31.99 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 புதிய ஹூண்டாய் எலன்ட்ரா

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா

புளூயிடிக் டிசைன் கொண்ட புதிய எலன்ட்ரா எக்ஸிகியூட்டிவ் செடான் காரை கடந்த ஆகஸ்ட்டில் விற்பனைக்கு கொண்டு வந்தது ஹூண்டாய். புதிய எலன்ட்ராவின் வடிவமைப்பும், வசதிகளும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.149.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.12.5 லட்சம் ஆரம்ப விலையில் புதிய எலன்ட்ரா விற்பனை செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

மேம்படுத்தப்பட்ட 6ம் தலைமுறை 3 சீரிஸ் காரை கடந்த ஜூலையில் பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வந்தது. அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன் ஸ்போர்ட்லைன், கம்போர்ட் லைன் என்ற இருவித ரகங்களில் புதிய 3 சீரிஸ் வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திறங்கிய புதிய 3 சீரிஸ் காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.28.9 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 17, 2012, 12:37 [IST]
English summary
2012 was a very intresting year for Indian automobile industry. 2012 has seen almost every major car company in the country launch new models. Here are some top launches from 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+