பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

டிஎஸ்-7 சொகுசு ரக காரை இந்தியாவில் வைத்து தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது பிஎஸ்ஏ குழுமம். ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ கார் உற்பத்தி குழுமம் மீண்டும் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

இந்த நிலையில், தனது கீழ் செயல்படும் டிஎஸ் பிராண்டின் சொகுசு ரக கார்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக, டிஎஸ் பிராண்டின் டிஎஸ்-7 சொகுசு ரக க்ராஸ்ஓவர் கார் மாடலை இந்தியாவில் வைத்து பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

தற்போது ஹரியானாவிலுள்ள மானேசர் பகுதியில் இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் வர இருக்கிறது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

முன்புறத்தில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் மற்றும் க்ரோம் பாகங்களுடன் அசத்தலாக இருக்கிறது. குறிப்பாக, ஆடி எஸ்யூவி கார்களை போன்ற முக அமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது. அதேசமயத்தில், டிஎஸ் பிராண்டின் தனித்துமான டிசைன் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

இந்த காரில் 12.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல திரையுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. செமி ஆட்டோனாமஸ் டிரைவிங், 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஃபோக்கல் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

தவிரவும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியுடன் வருகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஹீட்டடு இருக்கைகள் இடம்பெற்றிருக்கும்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

இந்த காரில் 8 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் கீப்பிங் அசிஸ்ட், நைட் விஷன் கேமரா உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

புதிய டிஎஸ்-7 சொகுசு காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வெளிநாடுகளில் கொடுக்கப்படுகின்றன. இந்த காரில் கொடுக்கப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 131 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

இதன் மற்றொரு1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 181 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஒரு மாடலிலும், 225 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

இந்த காரில் 130 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 180 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வெளிநாடுகளில் கிடைக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

இவை தவிர்த்து, 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின் மோட்டார் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் மாடலிலும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் 200 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதன் மின் மோட்டார் மட்டும் தனித்து 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மொத்தமாக 300 பிஎஸ் பவரை அளிக்கும். எலெக்ட்ரிக் மோடில் மட்டும் 64 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

பிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்-7 சொகுசு ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை!

புதிய டிஎஸ்-7 க்ராஸ்ஓவர் சொகுசு கார் மாடலானது 2020 ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு அடுத்ததாக இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.

Source: Zigwheels

Most Read Articles
மேலும்... #டிஎஸ்
English summary
Groupe PSA is conducting road testing of DS7 Crossback in India. It is expected to launch second half next year.
Story first published: Thursday, September 26, 2019, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X