மலிவு விலையில் யூஸ்டு நானோ கார்கள்:வாங்கலாமா?

கார் வாங்கும் அளவுக்கு கையில் பணம் இல்லை; மனைவி அலுவலகம் செல்ல பட்ஜெட் விலையில் ஓர் கார் வாங்க வேண்டும்; காலம் கெட்டு கிடக்கும் நிலையில் மகள் கல்லூரிக்கு பாதுகாப்பாக சென்று வர லோ பட்ஜெட்டில் ஓர் கார் வாங்கினால் தேவலாம்," என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான தேர்வு நானோ கார்.

அதிலும், தற்போது பயன்படுத்தப்பட்ட நானோ கார்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. அதுசரி, யூஸ்டு நானோ கார் வாங்குவதால் என்னென்ன பயன்களை பெறலாம் என்பது பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். காசு கொடுத்தாலும் இந்த கார் வேண்டாம் என்பவர்களுக்காக அல்ல; வெயிலில், மழையில் நனையாமல் குடும்பத்தினரை காரில் அழைத்துச் செல்ல கனவு கண்டு கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கான செய்தியாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

4 பேர் தாராளமாக அமர்ந்து செல்வதற்கான அதிக இடவசதி கொண்டது. அதிக மைலேஜ், குறைந்த டர்னிங் ரேடியஸ் கொண்ட கார் என்பதால் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக எளிது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்ற கார். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்(180மிமீ) கொண்டது. பேஸ் மாடலை தவிர சிஎக்ஸ், எல்எக்ஸ் மாடல்களில் ஏசி வசதி இருக்கிறது.

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவு

குறைந்த பராமரிப்பு கொண்ட கார் என்பதால் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் தனது மனைவி, மகளுக்கு வாங்கினால் கூட சர்வீஸ் செலவு பர்சை பதம் பார்த்துவிடாது. சாதாரணமாக ஹேட்ச்பேக் கார்களில் கிளட்ச்சை சர்வீஸ் செய்வதற்கு ரூ.6,000 வரை செலவாகும். ஆனால், நானோ காரில் கிளட்ச் சர்வீஸ் செய்வதற்கு ரூ.1,600 மட்டுமே செலவாகும். இதேபோன்று, அனைத்து சர்வீஸ் பணிகளுக்கும் குறைந்த பராமரிப்பு கொண்ட காராக கூறலாம்.

மலிவு விலை

மலிவு விலை

உதாராணத்திற்கு, 2011ம் ஆண்டு மத்தியில் வாங்கிய நானோ காரின் பேஸ் மாடல் தற்போது யூஸ்டு மார்க்கெட்டில் ரூ.70,000 விலையிலேயே கிடைக்கிறது. 2011 இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 2012மாடல் நானோ கார் சற்று விலை கூடுதலாக இருக்கும். இந்த காரின் எஞ்சின் கூடுதல் பவர், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மேம்படுத்தப்பட்டு வந்தது. ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் சிறந்த பயன்படுத்தப்பட்ட நானோவை வாங்கலாம். இந்த காரை வாங்குவதில் ஒரு முக்கிய சாதகமான அம்சம் இருக்கிறது. அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

வாரண்டி

வாரண்டி

ஆம், நானோ காருக்கு 60,000 கிமீ அல்லது 4 ஆண்டுகளுக்கான வாரண்டியை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. எனவே, இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து நானோ கார்களும் வாரண்டியில் இருக்கிறது. எனவே, கண்ணை மூடிக்கொண்டு மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் நானோவை வாங்க முடியும். ஏனெனில், இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் 24,000 கிமீ வரை ஓடியிருந்தால் கூட நமக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி கிடைக்கும்.

டயர்கள்

டயர்கள்

18,000 கிமீ., ஓடிய நானோவை வாங்கும்போது அதன் டயர்களை பரிசோதிக்க வேண்டும். மிக மோசமாக தேய்மானம் அடைந்திருந்தால் டயரை மாற்ற வேண்டியிருக்கும். நானோவின் ஒரு டயர் ரூ.2,250 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

பயன்படுத்தப்பட்ட நானோ கார் வாங்கும்போது அதன் எஞ்சினை சோதித்து கொள்ளுங்கள். எஞ்சின் பெல்ட் சரியாக இயங்குகிறதா என்பதையும் கவனியுங்கள்.

வரலாறு முக்கியம்

வரலாறு முக்கியம்

2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட நானோ கார்களில் செல்ஃப் மோட்டார் பிரச்னை இருந்தது. இதனை டாடா மோட்டார்ஸ் இலவசமாக மாற்றிக் கொடுத்தது. எனவே, சர்வீஸ் புத்தகத்தில் செல்ஃப் மோட்டார் மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், காரில் ஏதெனும் பெரிய அளவில் தொழில்நுட்பப் பிரச்னைகள் இருந்துள்ளதா என்பதையும் சர்வீஸ் புத்தகத்தில் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது.

நெடுஞ்சாலைக்கும் ஏற்றதா?

நெடுஞ்சாலைக்கும் ஏற்றதா?

நகர்ப்புறங்கள் தவிர நெடுஞ்சாலைக்கும் ஏற்ற கார்தான் நானோ. மணிக்கு 85 கிமீ வேகத்தில் எந்த சிரமமும் இல்லாமல் செல்லும்.

மைலேஜ்

மைலேஜ்

நகர்ப்புறத்தில் 14.5 கிமீ வேகத்திலும், நெடுஞ்சாலையில் 19.5 கிமீ மைலேஜையும் தரும்.

உங்க கருத்து என்ன?

உங்க கருத்து என்ன?

மேற்கண்ட தகவல்கள் நடுத்தர பிரிவினரின் கார் தாகத்தை தீர்க்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். நானோ காரை வாங்கலாமா என்பது குறித்து வாசகர்களும் தங்களது கருத்தை பிற வாசகர்களுக்கு கருத்துப் பெட்டியில் தெரிவிக்கலாம்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X