உலக சுற்றுச்சூழல் தினம்.. கார்களுக்கு இலவச புகை பரிசோதனை முகாம்

இந்த தினத்தை முன்னிட்டு முன்னணி கார் நிறுவனங்கள் இலவச புகை பரிசோதனை செய்து தருவதாக அறிவித்துள்ளன.
மஹிந்திரா நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் கார்களுக்கு இலவச புகை பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாமில் புகை பரிசோதனைக்கு சான்றிதழும் சியாம் அமைப்புடன் இணைந்து மஹிந்திரா வழங்குகிறது. மேலும், காரில் அதிக புகை வராமல் இயக்குவதற்கான பராமரிப்பு முறைகள் பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு தர இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் இலவச புகை பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை இந்த முகாமுக்கு கொண்டு சென்று புகை பரிசோதனை செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








