இண்டிகாவைவிட குறைவான விலையில் புதிய காரை வடிவமைக்கும் டாடா!

By Saravana

போல்ட், ஸெஸ்ட் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தவுடன் நிச்சயம் மார்க்கெட்டில் தனக்கு நிலையான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அடுத்ததடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் ஒன்றையும் வடிவமைத்து வருகிறது. நானோ காருக்கும், இண்டிகா காருக்கும் இடையிலான விலையில் அந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது.


குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

கைட்(KITE) என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய ஹேட்ச்பேக் காரை டாடா அழைக்கிறது. விலையிலும், டிசைனிலும் டட்சன் கோ, மாருதி ஆல்ட்டோ கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸன் என்ற மினி எஸ்யூவியின் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்படுகிறதாம்.

என்னாது நானோ டிசைனா...

என்னாது நானோ டிசைனா...

நானோ காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய ஹேட்ச்பேக் காரிலும் கையாளப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவே சிறிய டைட்டிலில் சிறிய ஜர்க்கை ஏற்படுத்திவிட்டது.

நானோவுக்கு உற்பத்திக்கு மாற்று...

நானோவுக்கு உற்பத்திக்கு மாற்று...

நானோ கார் உற்பத்தி செய்யப்படும் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள டாடா கார் ஆலையிலேயே இந்த புதிய காரும் தயாரிக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் கொண்ட இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு 1.5 லட்சம் கைட் கார்களை தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காரில் 1000சிசி.,க்கும் குறைவான சிசி கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிக மைலேஜ் தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

2016ம் ஆண்டில் இந்த புதிய ஹேட்ச்பேக் காரை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இது கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுவதால், டாடா மோட்டார்ஸ் மீண்டெழுவதற்கு முக்கிய பங்களிப்பை கொடுக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

Most Read Articles
English summary
Indian automobile giant Tata Motors had an array of vehicles on display at the 2014 Auto Expo held in New Delhi. The Indian manufacturer showcased its new Nano Twist along with a Bolt hatchback and Zest sedan. They had also displayed its concept vehicle the Nexon. Tata Motors has noticed the increase in popularity in small cars and is keen to introduce a new product in the market. They have given it the code name KITE.
Story first published: Tuesday, June 10, 2014, 9:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X