எஸ்யூவிகளில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

Written By:

கார் ஓட்டுனர்களுக்கு பிரத்யேக வசதிகளை அளிக்கும் ஆன்ட்ராய்டு ஆட்டோ என்ற பிரத்யேக சாஃப்ட்வேர் மஹிந்திரா எஸ்யூவி மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் மஹிந்திரா நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. அந்த வகையில், ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை தனது கார்களில் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

OAA
 

இதற்காக, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை பயன்படுத்தும் Open Automotive Alliance என்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளது. இதன்மூலம், ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை அளிக்கும் வாய்ப்பை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.

கார்களில் ஓட்டுனர்களுக்கு தேவையான வசதிகளை எளிதாக அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேர்தான் 'ஆன்ட்ராய்டு ஆட்டோ'. இந்த சாஃப்ட்வேரை முதலில் எக்ஸ்யூவி 500 மற்றும் ஸ்கார்ப்பியோ ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பிற மாடல்களிலும் இந்த சாஃப்ட்வேரை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர் மூலமாக, கூகுள் மேப் மற்றும் கூகுள் அப்ளிகேஷன்கள் உள்பட கூகுள் அளிக்கும் பல்வேறு வசதிகளை இந்த சாஃப்ட்வேர் மூலமாக வாகன ஓட்டுனர்கள் பெற முடியும். இது வாகன ஓட்டுனர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has now become the first Indian manufacturer to join hands with the Open Automotive Alliance, to work on Android platform in cars in India.er integration of Goo Open Automotive Alliance is a global alliance of vehicle manufactures whose goal is to bring Android platform to all vehicles. They will offer class leading edge technology through the this platform.
Story first published: Thursday, June 4, 2015, 9:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark