அடுத்த ஆண்டிற்குள் 9 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

Written By:

அடுத்த ஆண்டிற்குள் 9 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் மஹிந்திரா முனைப்பு காட்டி வருகிறது.

Mahindra SUV
 

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500வை சேர்த்து இரு ஆண்டுகளில் 9 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில், ஏற்கனவே இருக்கும் மாடல்களுக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்குவதுடன், புதிய மாடல்கள் பலவற்றையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொலிரோ, குவான்ட்டோ எஸ்யூவிகளுக்கு புதுப்பொலிவு கொடுத்து விரைவில் களமிறக்க உள்ளது மஹிந்திரா. அத்துடன், எஸ்101 மற்றும் யு301 ஆகிய புத்தம் புதிய எஸ்யூவி மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

பல்வேறு விலைப்பட்டியலில் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தி அனைத்து விதமான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

அதாவது,எஸ்யூவி வாங்க விரும்பும் எந்தவொரு பட்ஜெட் வாசிகளையும், தமது ஷோரூம்களுக்குத்தான் போக வேண்டும் என்ற நிலையை உருவாக்க அந்த நிறுவனம் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
All these new products will be launching between 2015 to 2016 in India. The new XUV 500 is their first of nine products that will be among their new line up of vehicles.
Story first published: Saturday, May 30, 2015, 12:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark