மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் பெட்ரோல் மாடல்... நமக்கு 50-50 சான்ஸ்?

மஹிந்திரா நிறுவனத்தின் பெயரையும், புகழையும் சர்வதேச அளவில் மணம் பரப்பி வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் பெட்ரோல் மாடல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியாவின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக வலம் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 தற்போது டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் பெட்ரோல் மாடலையும் மஹிந்திரா உருவாக்கியி சோதனை செய்து வருவது தெரியவந்துள்ளது. பேரார்வத்தை ஏற்படுத்தினாலும், இந்த மாடல் உங்கள் கையில் கிடைக்குமா? வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

சாங்யாங் ஒத்துழைப்பு

சாங்யாங் ஒத்துழைப்பு

மஹிந்திராவும், அதன் கீழ் செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனமும் இணைந்து இந்த புதிய பெட்ரோல் எஞ்சினை உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

பெட்ரோல் மாடல் தயாரிப்பு உறுதியானாலும், அது ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், இந்தியாவில் பெட்ரோல் எஸ்யூவி மாடல்களுக்கு மவுசு மிக குறைவு. ஆனால், சர்வதேச அளவில் பெரும்பாலும் பெட்ரோல் மாடலுக்குத்தான் மவுசு.

அறிமுகம்

அறிமுகம்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ரஷ்ய மார்க்கெட்டுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்ஸ் குறைவு

சான்ஸ் குறைவு

இந்தியாவில் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்வதற்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கின்றன. இதற்கு எரிபொருள் விலை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ஒருவேளை உள்நாட்டிலும் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.10 லட்சத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The XUV500 has always been sold in India with a diesel mill and manual transmission. Now for the very first time Mahindra engineers will be developing a petrol powered engine in its SUVs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X