அடுத்த ஆண்டு வருகிறது ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் செடான் கார்!

By Saravana

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடான் கார்களுக்கு இருக்கும் வரவேற்பு நீங்கள் அறிந்ததே. இதனால், ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் அவசரம், அவசரமாக இந்த செக்மென்ட்டில் புதிய மாடலை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வரிசையில், விரைவில் ஃபோர்டு நிறுவனம் தனது ஆஸ்பயர் காருடன் களமிறங்க உள்ளது. அதற்கு அடுத்ததாக, ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் புதிய காம்பேக்ட் செடான் காருடன் இந்த மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது.

Volkswagen Vento

முழுக்க முழுக்க இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெப்பத்தை மனதில் வைத்து இந்த புதிய மாடலை ஃபோக்ஸ்வேகன் உருவாக்கி வருகிறது. ரூ.5 லட்சத்திற்கும் சற்று கூடுதலான விலையில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மாடல் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என கருதப்படுகிறது. ஏனெனில், ஃபோக்ஸ்வேகனின் கட்டுமானத் தரம், டிசைன் போன்றவைக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.

அவர்கள் இந்த மாடலைத் தவிர்த்து வேறு எந்த மாடலுக்கும் செல்ல மாட்டார்கள் என்பதால், நிச்சயம் ஒரு நல்ல விற்பனை எண்ணிக்கையை இந்த புதிய மாடல் மூலம் பெற முடியும் என்று ஃபோக்ஸ்வேகன் நம்புகிறது.

Most Read Articles
English summary
Compact sedans are a growing trend in India and every manufacturer wants to enter this segment. Volkswagen India will also be entering the compact sedan by 2016.
Story first published: Monday, June 1, 2015, 9:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X