டாடா டாமோ பிராண்டின் முதல் காரான சி-க்யூப் மாடலின் முதல் தரிசனம்!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாமோ (TAMO) என்ற பெயரில் புதிய பிராண்ட் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த பிராண்டின் கீழ் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பல புதிய கார்களை தயாரித்து, அறிமுகம் செய்ய உள்ளதாக, டாடா மோட்டார்ஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதன் முதல் மாடலான சி-க்யூப் காரினை முதல் முறையாக மும்பையில் காட்சிப்படுத்தியுள்ளது.

டாடா டாமோ சி-க்யூப் காரின் முதல் தரிசனம்!

புதிய தொழிநுட்பம் கொண்ட கார்களை தயாரிக்கும் முயற்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த டாடா நிறுவனம் "டாமோ" என்ற பிராண்டினை உருவாக்கியது. இதன் முதல் ஹேட்ச்பேக் மாடலான சி-க்யூப்பினை மும்பையில் நடந்த ‘ஃப்யூச்சர் டீகோடட் 2017' என்ற நிகழ்ச்சியில் பார்வைக்கு வைத்தது.

டாடா டாமோ சி-க்யூப் காரின் முதல் தரிசனம்!

புதிய சி-க்யூப் கார் 3 கதவுகளுடன் முற்றிலும் புதிய டிசைனில் வெளிவந்துள்ளது. இதில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எல்ஈடி ரியர் வியூ கண்ணாடிகள் உள்ளது. சி-கியூபில் அட்டகாசமான தோற்றத்தில், ஓஇசட் ரேசிங் அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளன.

டாடா டாமோ சி-க்யூப் காரின் முதல் தரிசனம்!

உலகத் தரம் வாய்ந்த டிசைனில் வெளிவந்துள்ள சி-க்யூப் வரும் மார்ச்-7ஆம் தேதி ஜெனிவாவில் நடக்க இருக்கும் 87வது மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகப்படுத்த உள்ளது டாமோ நிறுவனம்.

டாடா டாமோ சி-க்யூப் காரின் முதல் தரிசனம்!

டாமோ பிராண்ட் மூலம் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது. புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை உருவாக்குவதற்காக இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

டாடா டாமோ சி-க்யூப் காரின் முதல் தரிசனம்!

சி-க்யூப் கார்கள் இந்திய சந்தையில் 2018ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டாமோ சி-க்யூப் காரின் முதல் தரிசனம்!

இக்கார்கள் ரெனால்ட் க்விட் மற்றும் மாருதி ஆல்டோ கார்களுக்கு போட்டியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் இக்கார் அறிமுகப்படுத்தபட்ட பின்னரே மற்ற விவரங்கள் தெரியவரும்.

முன்னதாக டாடா அறிமுகப்படுத்திய டியாகோ ஹேட்ச்பேக் காரின் படங்கள்: 

English summary
The Tata TAMO C-Cube Concept has been revealed at Microsoft India's Future Decoded 2017 event.
Story first published: Wednesday, February 22, 2017, 10:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark