இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

இந்தியாவில் கேல்டுஸ்டோன் மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ்சை உருவாக்கியுள்ளனர். இனி பெரு நகரங்களில் இந்த பஸ்தான் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.

By Balasubramanian

இந்தியாவில் கேல்டுஸ்டோன் மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ்சை உருவாக்கியுள்ளனர். இனி பெரு நகரங்களில் இந்த பஸ்தான் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இந்த பஸ் குறித்து முழு தகவல்களை கீழே காணலாம்.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

கோல்டுஸ்டோன் மற்றும் சீன ஆட்டோமொபல் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ்சை தயார் செய்துள்ளனர். இந்த பஸ்சிற்கு இபஸ் கே6 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

சுமார் 6 மீட்டர் நீளம் உள்ள இந்த பஸ், உயர்ந்த பிளோர்களையும், முழு பேட்டரி சார்ஜில் 200 கி.மீ. ஓடும் வகையில் உள்ள பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை பீடர் பஸ்சாக பயன்படுத்த முடியும்.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

இந்தியாவில் அதிக ஜன நெருக்கடி உள்ள பகுதிகளில் இந்த பஸ்சை எளிதாக பயன்படுத்த முடியும். முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பஸ் நேபால் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

முன்னர் குறிப்பிட்டது போல இந்த பஸ் முழு பேட்டரி சார்ஜில் 200 கி.மீ. வரை ஓடும். அதற்கு ஏற்றார் போல் இதில் லித்தியம் இயான் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை பிஒய்டி நிறுவனமே தயாரிக்கிறது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

இந்த பஸ்சில் எலெக்ட்ரிக் பவருடன் செயல் படகூடிய பேட்டரி மோட்டார் 241 பிஎச்பி பவரையும், 1500 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பஸ் அதிகபட்சமாக 80 கி.மீ. வேதத்தில் செல்லக்கூடியது. இது கமர்ஷியல் வாகனங்களுக்கு இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமாகும்.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

இந்த பஸ்சில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த கோல்டு ஸ்டோன் பிஒய்டி இபஸ் கே6 பஸ்சில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் உள்ளது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

இந்த பஸ்சின் பேட்டரி 4 மணி நேரத்தில் முழு பேட்டரியும் விரைவாக சார்ஜ் ஏறிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பஸ்சில் பயன்படுத்தப்படும் 30 சதவீதமாக பாகங்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது விரைவில் 70 சதவீதமாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பிஓய்டி நிறுவனம் இந்தியாகவிலேயே பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

மேலும் பஸ்சின் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட சில முக்கியமான பாகங்களை தயாரிக்க உள்ளுர் ஒப்பந்ததாரர்களை அந்நிறுவனம் எதிர்நோக்கி வருகிறது.

இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....

இது குறித்து அந்நிறுவன செயல்இயக்குநர் நாக சத்தியம் கூறுகையில் :" இந்தியாவில் எலெக்ட்ரிக் பீடர் பஸ்களுக்கான தேவை இருக்கிறது. குறிப்பாக பெரு நகரங்களில் இதன் பயன் அதிக அளவில் இருக்கும். மேலும் அரசும் எலெக்டரிக் வாகனங்களை ஊக்கவிக்கிறது. மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் நகர பேருந்துகளாக இதை இயக்க முடியும். மேலும் இது டீசல், சிஎன்ஜி வாகனங்களை விட சுற்றுசுழலை மிக மிக குறைவாகவே மாசுபடுத்துகிறது." என கூறினார்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Electric Urban Bus With Over 200 km Range Launched In India By Goldstone BYD. Read in Tamil
Story first published: Wednesday, June 6, 2018, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X