எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி இந்தியாவில் களமிறங்குகிறது... க்ரெட்டாவுக்குதான் எத்தனை போட்டி!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் விரைவில் இந்தியாவில் களமிறங்க உள்ளது. முதல் மாடலாக தனது இசட்எஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த SAIC நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய கார் மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், எம்ஜி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு பெருத்த வரவேற்பு இருப்பதை மனதில் வைத்து, எம்ஜி பிராண்டில் முதல் மாடலாக இசட்எஸ் என்ற எஸ்யூவி மாடலை களமிறக்க முடிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டுதான் இந்த எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

இந்த புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியானது வெளிநாடுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் அங்கு கிடைக்கிறது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

மற்றொரு 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது, டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

இசட்எஸ் எஸ்யூவிக்கு அடுத்ததாகவும் ஒரு எஸ்யூவி மாடலையே எம்ஜி மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அது ஜிஎஸ் என்ற எஸ்யூவி மாடல். எம்ஜி ஜிஎஸ் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் போன்ற மாடல்களுக்கு நிகரான ரகத்தை சேர்ந்தது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

வெளிநாடுகளில் எம்ஜி ஜிஎஸ் மாடலானது 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 165 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

எம்ஜி ஜிஎஸ் எஸ்யூவியின் மற்றொரு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்குகிறது எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி... க்ரெட்டா போட்டியாளர்!

குஜராத் மாநிலம், ஹலோலில் இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஆலையை கடந்த ஆண்டு செப்டம்பரில் எம்ஜி நிறுவனம் கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த ஆலையில்தான் எம்ஜி கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.இந்த ஆண்டு மத்தியில் முதல் எம்ஜி கார் மாடல் இந்த ஆலையில் உற்பத்தி துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
ET Auto reports that company's first product in the Indian market could be the ZS SUV. The report states that the first MG model would be a Hyundai Creta rival and it might be the ZS or GS SUV.
Story first published: Saturday, January 27, 2018, 10:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark