Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பணி ஓய்வு நாளில் இப்படி ஒரு பரிசை இதுவரை யாருமே கொடுத்திருக்க மாட்டாங்க... அமெரிக்காவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி!!
விமானியின் கடைசி பணி தினத்தை படமாக்குவதற்காக இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று புகைப்படம் எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்களில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் (Southwest Airlines) நிறுவனமும் ஒன்று. இந்த விமான சேவை நிறுவனத்தில் கேப்டனாக பணியாற்றி, தற்போது ஓய்வு பெற்றிருக்கும் விமானியே டெட் ஓரிஸ். இவரையே இளைஞர் ஒருவர் அவரது பணி ஓய்வு தினத்திற்கு அவரே எதிர்பார்த்திராத ஆச்சரிய பரிசை வழங்கியிருக்கின்றார்.

அதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேப்டன் டெட் ஓரிஸ் கடைசியாக விமானத்தை டேக்-ஆஃப் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படத்தியிருக்கின்றார். ரையன் பேட்டர்சன் எனும் இளைஞரே இதனை பரிசாக வழங்கியவர் ஆவார்.

இவர் மிகுந்த சாதாரணமான புகைப்படங்களை மட்டுமே எடுக்கும் கலைஞனாக கடந்த 2015ம் ஆண்டு வரை இருந்து வந்திருக்கின்றார். அப்படியாக ஒரு நாள் புகைப்படங்களை எடுக்கும்போதே கேப்டன் டெட் ஓரிஸின் கண்களில் ரையன் பேட்டர்சன் சிக்கியிருக்கின்றார்.

அப்போது, ரையனின் புகைப்படத் திறனை மேலும் வளர்க்கும் வகையில் விமானங்களைப் பற்றிய சிறப்பு புகைப்படங்களை (Aviation Photograph) எடுக்குமாறு அவரின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றார். இதைத் தொடர்ந்தே, ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பறக்கும் விமானங்கள், ஒட்டுமொத்த விமான நிலையங்களையும் வானில் வட்டமடித்தவாறு படமெடுக்க ஆரம்பித்திருக்கின்றார் ரையன்.

இவ்வாறு, ரையன் தனது துறையில் வளர்ச்சியடைவதற்கு தற்போது ஓய்வு பெற்றிருக்கும் விமானி டெட் ஓரிஸின் ஊக்குவிப்பே காரணம் என அவர் கூறுகின்றார். எனவேதான், இவரின் பணி ஓய்வு தினத்தை மறக்க முடியாத தருணமாக மாற்ற, டெட் ஓரிஸ்க்கே தெரியாமல் அவரின் கடைசி விமானத்தை டேக்-ஆஃப்பினை சிறப்பு புகைப்படங்களாக ரையன் எடுத்து வழங்கியிருக்கின்றார்.

இதுகுறித்த தகவலை சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ வலைதளம் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது. விமானியன் கடைசி டேக்-ஆஃப் நிகழ்வை படமாக்குவதற்காக ரையன் 7 மணி நேரங்கள் பயணித்து அட்லாண்டாவிற்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னரே ஹெலிகாப்டரில் தன்னை முன்கூட்டியே பறக்குமடி அவர் செய்திருக்கின்றார்.

Image Courtesy: Southwest Airlines
இந்த கடின முயற்சியைத் தொடர்ந்தே சவுத்வெஸ்ட் 737 விமானத்தை டெட் ஓரிஸ் டேக்-ஆஃப் செய்யும் பிரத்யேக காட்சிகளை ரையன் ஹெலிகாப்படரில் இருந்தபடி கேமிராவில் படமாக்கியிருக்கின்றார். அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அந்த நாட்டு மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த விமானிகளையுமே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.