பைசா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெருமிதம்.. இது உண்மைதானா?

கோனா காரின் வியக்கை வைக்கும் பயன்பாடுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் தொடர்ச்சியாக காணலாம்.

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

தென் கொரிய நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், அதன் புத்தம் புதிய கோனா எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டின் மத்தியில் (ஜூலை மாதம்) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி ரக மின்சார கார் இதுவே ஆகும். அதுமட்டுமின்றி, ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த முதல் மின்சார காரும் இதுதான்.

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

எனவே, இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. தொடர்ந்து, இந்த கார் குறைந்த பராமரிப்பில் அதிக பலனை வழங்கும் வகையில் இருக்கின்றதால், இந்த வரவேற்பு நாளடைவில் ஏகபோகமானாதாக மாறிவிட்டது.

ஆனால், இதன் விலை மிக அதிகமாக இருப்பதன் காரணத்தால் இந்திய பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமடைந்து வருகின்றது. இதன் விலை இந்தியாவில் ரூ. 25.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

MOST READ: கொரோனா தடுப்பு பணிகள்... ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்கும் பிஎம்டபிள்யூ!

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

இந்நிலையில், தற்போது இந்த காருக்கு கிடைத்து வரும் வரவேற்பை இரு மடங்காக்கும் முயற்சியில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி, அப்கிரேட் செய்வது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது உள்ளிட்ட பணிகளை அது மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில், மேற்கத்திய நாடுகளில் கூடுதல் திறனுடைய பேட்டரி பேக்குடன் கோனா மின்சார கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

அதாவது, இந்தியாவில் தற்போது 39.2 கிலேவாட் திறன் கொண்ட கோனா விற்கப்பட்டு வரும்நிலையில் ஐரோப்பிய சந்தைகளில் 64 கிலோவாட் திறனுடைய கோனா விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கார் இந்தியாவில் கிடைக்கும் கோனாவைக் காட்டிலும் அதிக கிமீ ரேஞ்சை வழங்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இந்திய மாடல் கோனா ஒரு முழுமையான சார்ஜில் 452 கிமீ ரேஞ்சை வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்...

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

இந்நிலையில், ஊடக ஆய்வு பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார், 32 ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்தும் பூஜ்ஜியம் பராமரிப்பு செலவைக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது காருக்கு சார்ஜ் செய்ததைத் தவிர வேறு எந்த கூடுதல் செலவையும் கோனா எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

இதுகுறித்த தகவலை 'ஃபுல்லி சார்ஜட்' என்ற வெளிநாட்டு நிகழ்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராபர்ட் இதனை உறுதி செய்திருக்கின்றனர்.

இதனை உறுதி செய்கின்ற வகையில் இந்தியாவில்கூட இம்மாதிரியான ஓர் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. அதாவது, பெங்களூருவைச் சேர்ந்த ஓர் கோனா எலெக்ட்ரிக் கார் உரிமையாளர், இந்த காரின் மூலம் கோவை வர வெறும் 250 ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக தகவல் வெளியிட்டிருந்தார்.

MOST READ: பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடம் அறிமுகம்...

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

அதுமட்டுமின்றி 10 ஆயிரம் கிலேமீட்டர்கள் வரை கார் பயணித்தும், பராமரிப்பு செலவாக ஒரு ரூபாய்கூட ஆகவில்லை என்றும் ஆச்சரியமான தகவலை அவர் கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே வெளிநாட்டு ஹூண்டாய் கோனா பயனரான ராபர்ட்டும் இந்த பதிலை தெரிவித்துள்ளார். இவர், 30 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இந்த காரின்மூலம் பயணித்தும் ஒற்றை பைசாகூட தேய்மானத்திற்காக செலவு செய்யவில்லை என கூறியிருக்கின்றார்.

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

அதாவது, குறைந்த தேய்மானத்தின் காரணமாகவே இத்தகைய ரிசல்ட் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் கிடைத்திருப்பது தெரிய வருகின்றது. குறைந்த நகரும் பாகங்கள், குறைந்த உராய்வு, குறைவான வடிப்பான்கள், குறைந்தளவு ஆயில் பயன்பாடு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என ஹூண்டாய் நிறுவன சர்வீஸ் மையங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

MOST READ: எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் எஸ்யூவி அறிமுகம் எப்போது? - புதிய தகவல் வெளியானது!

1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா?

இதுவே வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினுடைய வாகனங்களை இத்தனை கிமீ-களுக்கு பயன்படுத்தியிருந்தால் செலவு ஏகபோகமானதாக மாறியிருக்கும்.

ஆனால், இது மின்சார காராக இருக்கின்ற காரணத்தால் குறைந்த பராமரிப்பு செலவில் அதிக பலனை அளித்து வருகின்றது.

இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் 136 பிஎச்பி மற்றும் 395 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் மின் மோட்டாரை பயன்படுத்தி வருகின்றது. இதற்கு தேவையான மின் திறன் 39.2kWh பேட்டரியில் இருந்து கிடைக்கின்றது. இதனை டிசி ஃபாஸ்ட் முறையில் சார்ஜ் செய்தால் வெறும் 1 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜை பெற்றுவிடும். இந்த காருக்கு போட்டியளிக்கும் விதமாக எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் மின்சார இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 21 லட்சம் ஆகும்.

Image Courtesy: fullychargedshow/YouTube

Most Read Articles

English summary
Hyundai Kona Electric Owner Gets Zero Maintenance In 32k KM's. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X