Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகராம்... 34 லட்ச ரூபாயை அசால்டாக வாரி இறைத்த இளைஞர்... வாயடைத்துபோன உறவினர்கள்...
ஜேம்ஸ் பாண்ட் ரசிகர் ஒருவர் ரூ. 34 லட்சத்தை குறிப்பிட்ட காரணத்திற்காக வாரி இறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தான் ஒரு தீவிர ரசிகர் என்பதைக் குறிப்பிட்ட செயலின் மூலம் குஜராத் மாநிலம், அஹமதாபாத் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் நிரூபித்துள்ளார். இந்த சுவாரஷ்ய சம்பவம்குறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டொயோட்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஃபார்ச்சூனர் காரும் ஒன்று. இந்த காரின் புதிய மாடலுக்கான பதிவெண்ணை வாங்கியதன் மூலமே இவர் மிகுந்த ஜேம்ஸ் பாண்ட் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. ஆமாங்க, நீங்க யூகித்தது சரிதான், புதிய காரின் பதிவெண்ணாக 007-ஐ அவர் பெற்றிருக்கின்றனர்.

இதனைப் பல லட்சங்கள் செலவில் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, அஹமாதபாத்தைச் சேர்ந்த ஆஷிக் படேல், ரூ. 34 செலவில் இந்த பதிவெண்ணை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 007 பதிவெண்ணைக் கொண்ட கார்களைதான் ஜேம்ஸ் கதாபாத்திரம் பயன்படுத்துவார்.

எனவே இந்த எண்ணுக்கு உலகளவில் பிரியர் இருக்கின்றனர். அத்தகைய இந்தியரே காரின் விலைக்கு இணையான தொகையில் பதிவெண்ணை வாங்கியிருக்கின்றார். ஆமாங்க புத்தம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலையே ரூ. 39.50 லட்சங்களாக இருக்கின்றது. இதற்கு இணையான விலையிலேயே பதிவெண்ணை ஆஷிக் படேல் வாங்கியிருக்கின்றார். இவரின் இந்த செயலால் அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்த பதிவெண்ணால் தற்போது ஆஷிக் படேலின் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் மதிப்பு 85 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்டதாக மாறியிருக்கின்றது. இந்த கார் ஜிஜே 01 டபிள்யூஏ 007 (GJ01WA007) என்ற காட்சியளிக்கும். இந்த பதிவெண்ணை ஆஷிக் படேல், ஏலத்திலேயே வென்றிருக்கின்றார். அண்மையில் இணையம் வாயிலாக 007 என்ற எண்ணிற்கான ஏலம் 25 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் தொடங்கியது.

பலரின் அணுகலை அடுத்து இதன் விலை. ரூ. 25 லட்சங்களாக உயர்ந்தது. கடைசியாக ரூ. 34 லட்சத்தில் ஆஷிக் படேல் வென்றார். அஹமதாபாத் ஆர்டிஓ அதிகாரிகளே எதிர்பார்த்திராத உச்சபட்ச ஏல மதிப்பாகும். இந்த பதிவெண் தனக்கு ராசியான எண் என்பதானலேயே இதனை தான் வாங்கியிருப்பதாக ஆஷிக் படேல் கூறியுள்ளார்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார்களில் டொயோட்டா ஃபார்ச்சூனரும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் ஆகிய அவை ஆகும்.

இக்கார், இந்தியாவில் ஃபோர்டு என்டீயோவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் அளிக்கின்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 28.66 லட்சங்கள் ஆகும். அதிகபட்ச விலையே 36.88 லட்சங்கள் ஆகும். இக்காரின் புதுப்பிக்கப்பட்ட விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.