20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கார்களின் விற்பனையில் வெற்றிக்கரமாக 20 வருடங்களை 40 லட்ச மாதிரி கார்களின் விற்பனையுடன் நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகியின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காராக ஆல்டோ சுமார் 20 வருடங்களாக விற்பனையில் உள்ளது. இந்த இருபது வருடங்களில் பலமுறை பல மாதங்களில் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ள இந்த ஹேட்ச்பேக் கார் இத்தனை ஆண்டுகளில் 40 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

நேர்த்தியான தோற்றத்தில் கவர்ச்சிகரமான வண்ண தேர்வுகளுடன் கிடைக்கும் இந்த கார் விற்பனையில் இத்தகைய மைல்கல்லை அடைந்திருப்பதில் ஆச்சிரியப்படுதவதற்கு பெரியளவில் எதுவும் இல்லை. ஆனால் காரை வாங்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது முதல் காராக அதனை வாங்கியிருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

கடந்த 20 ஆண்டுகளில் பல அப்கிரேட்களை இந்த ஐந்து-இருக்கை பட்ஜெட் ஹேட்ச்பேக் காரில் மாருதி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதேபோல் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஏற்ற விதத்திலான பாதுகாப்பு உபகரணங்களும் மாருதி ஆல்டோவில் வழங்கப்படுகிறது. அதிக எரிபொருள், சுறுசுறுப்பான இயக்க பண்பு மற்றும் குறைவான பராமரிப்பு என மாருதி நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த காரில் உள்ளன.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

தற்சமயம் ஸ்மார்ட்ப்ளே தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் இருக்கை பயணிகளுக்கான காற்றுப்பைகள், மின்னணு ப்ரேக்-விசை விநியோகத்துடன் ஆண்டி லாக் ப்ரேக்குகள், ரிவர்ஸிங் சென்சார்கள், அதிவேகம் எச்சரிக்கை, இரு நிறங்களில் உட்புற கேபின் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக இந்த காரில் வழங்கப்படுகின்றன.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

ஆல்டோவின் இந்த புதிய சாதனை குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தா கூறுகையில், ஆல்டோ, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா பயணிக்கும் வழியை மாற்றியுள்ளது. இது கடந்த 16 ஆண்டுகளாக நம்பர் 1 விற்பனையான காராக இடம்பிடித்து பலரது இதயங்களை வென்றுள்ளது.

மேலும் அதன் அற்புதமான மதிப்பு முன்மொழிவு மூலம் இந்திய கார் வாங்குபவர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என கூறினார். 2019-20 காலக்கட்டத்தில் மட்டும் மொத்த வாடிக்கையாளர்களில் 76 சதவீதத்தினர் மாருதி ஆல்டோவை தங்களது முதல் காராக வாங்கியுள்ளனர்.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

இந்த சதவீதம் இந்த ஆண்டு 84 சதவீதமாக அதிரித்துள்ளது. முதல் 10 லட்சம் என்ற மைல்கல்லை விற்பனையில் 4 ஆண்டுகளில் பதிவு செய்த மாருதி ஆல்டோ அடுத்த 10 லட்சத்தையும் அடுத்த நான்கு ஆண்டுகளில் பெற்றுவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இதன் விற்பனை 40 லட்சத்தை கடந்தது.

முதல் பத்து லட்த்திற்கு பிறகுதான் ஆல்டோவின் விற்பனை மிகவும் வேகமாக சூடுப்பிடித்தது என்று கூற வேண்டும். இதனால் இந்தியா மட்டுமின்றி தென் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் தற்சமயம் இந்த மாருதி கார் விற்பனையில் உள்ளது.

20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ... பட்ஜெட் காராக தொடரும் ஆதிக்கம்...

அதுமட்டுமில்லாமல் ஆல்டோ தான் இந்தியாவின் முதல் பிஎஸ்6 பட்ஜெட் காராகும். பெட்ரோல் என்ஜின் உடன் 22.05kmpl ஆகவும், சிஎன்ஜி என்ஜின் உடன் 31.56 km/kg ஆகவும் ஆல்டோ ஹேட்ச்பேக் காரின் எரிபொருள் திறன் உள்ளது. மாருதி நிறுவனம் ஆல்டோ கார்களை 1,900 நகரங்களில் 2,390 டீலர்ஷிப் மையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Alto Completes 20 Years In India With 40 Lakh Unit Sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X