Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தப்பி தவறி கூட டீசல் கார் வாங்கி விட கூடாது... பெட்ரோல் மாடல்தான் பெஸ்ட்... ஏன் என்பதற்கான காரணங்கள்...
டீசல் கார்களை விட பெட்ரோல் கார்கள் எந்த வகைகளில் எல்லாம் சிறந்தவை? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

புதிய கார் வாங்கும்போது, பெட்ரோல் இன்ஜினை தேர்வு செய்வதா? அல்லது டீசல் இன்ஜினை தேர்வு செய்வதா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும். இதில், நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். டீசல் கார்களை விட பெட்ரோல் கார்கள் ஏன் சிறந்தவை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யலாம்.

குறைவான விலை!
டீசல் கார்களை காட்டிலும் பெட்ரோல் கார்கள் விலை குறைந்தவை. எனவே பெட்ரோல் கார்களை வாங்குவதன் மூலம் கணிசமான தொகையை நீங்கள் சேமிக்க முடியும். அதேபோல் டீசல் கார்களை சர்வீஸ் செய்வதற்கு ஆகும் செலவை விட பெட்ரோல் கார்களை சர்வீஸ் செய்வதற்கு ஆகும் செலவும் கூட குறைவுதான்.

டீசல் குறைந்த விலையில் கிடைத்தது எல்லாம் அந்த காலம்!
பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் விலை உயர்ந்தவை. இருந்தாலும் டீசல் கார்களை பலர் தேர்வு செய்ய காரணமாக இருந்தது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடைப்பட்ட விலை வித்தியாசம்தான். முன்பெல்லாம் பெட்ரோலை விட டீசல் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த 2 எரிபொருள்களுக்கும் இடையே விலையில் பெரிய வித்தியாசம் இருக்கும்.

ஆனால் தற்போது அனைத்தும் மாறி விட்டது. பெட்ரோல் என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறதோ? கிட்டத்தட்ட அதே விலையில்தான் டீசலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 எரிபொருள்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் பெருமளவில் குறைந்துள்ளது. எனவே டீசல் கார்களை வாங்கினாலும், எரிபொருள் செலவில் முன்பு போல் பெரிதாக சேமிப்பது எல்லாம் சந்தேகம்தான்.

குறைந்த செலவில் எளிதாக சிஎன்ஜி-க்கு மாற்றி விடலாம்!
உங்கள் பெட்ரோல் காரை நீங்கள் சிஎன்ஜி-க்கு மாற்ற விரும்பினால், அதை எளிதாக செய்து விடலாம். ஏனெனில் பெட்ரோல் காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு பெரிய அளவிலான மாடிஃபிகேஷன்கள் எல்லாம் தேவைப்படாது. ஆனால் இதுவே டீசல் கார் என்றால் கொஞ்சம் சிரமம்தான். டீசல் காரை சிஎன்ஜி-க்கு மாற்ற அதிக மாடிஃபிகேஷன்களை செய்ய வேண்டியிருக்கும்.

அத்துடன் பெட்ரோல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு ஆகும் செலவை விட டீசல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு அதிகம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. விலை குறைவு என்பதும், சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாது என்பதும் சிஎன்ஜி-யின் முக்கியமான நன்மைகளாக உள்ளன.

டீசல் இன்ஜின்களின் இரைச்சல்!
டீசல் இன்ஜின்கள் எழுப்பும் அதிகப்படியான சத்தம், காரை ஓட்டும்போது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதிக கம்ப்ரஷன் ரேஷியோ காரணமாக, இக்னீஷன் சேம்பரில் டீசல் இன்ஜின்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்துகின்றன. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற உடல் நல பிரச்னைகளுக்கு ஒலி மாசுவும் ஒரு காரணமாக உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

டீசல் கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை கிடையாது!
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயுக்களை டீசல் இன்ஜின்கள் அதிகமாக உமிழ்கின்றன. பெட்ரோல் கார்களும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தவே செய்யும்தான். ஆனால் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது குறைவாக இருக்கும். பிஎஸ்-6 விதிகள் காரணமாக பெட்ரோல் இன்ஜின்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது இன்னும் குறைந்துள்ளது.

டீசல் இன்ஜின் கார்களை கைவிட்ட முன்னணி நிறுவனங்கள்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்தியுள்ளன. இதற்கு இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஒரு மிகச்சிறந்த உதாரணம். மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வது கிடையாது.

சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு அதிகம் செலவாகும். இந்த செலவு, டீசல் கார்களின் விலையில்தான் எதிரொலிக்கும். மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால், லாபம் ஈட்ட முடியாது என்பதால், பல்வேறு நிறுவனங்கள் டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளன.