புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

முன்னணி தெலுங்கு நடிகர் பிரபாஸ் லம்போர்கினி அவெண்டடோர் காரை புதியதாக வாங்கியுள்ளார். பிரபாஸின் இந்த புதிய லம்போர்கினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

பாகுபலி படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் பிரபாஸ். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் இவருக்கு தமிழ் நாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

இப்படிப்பட்ட நடிகர் மிக சமீபத்தில் லம்போர்கினி அவெண்டடோர் ரோட்ஸ்டர் புதியதாக வாங்கி வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். இன்றைய அளவில் இந்த லம்போரிகினி காரின் எக்ஸ்க்ஷோரூம் விலை ரூ.5.6 கோடியாக உள்ளது.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

ஆர்டிஒ, இன்ஸ்சூரன்ஸ் தொகை எல்லாம் சேர்த்தால் 6 கோடி ரூபாயில் இந்த காரை வாங்கிவிடலாம். இந்த விலையில் தான் பிரபாஸும் லம்போர்கினி அவெண்டடோர் ரோட்ஸ்டர் காரை வாங்கி இருக்க வேண்டும்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

உலகளவில் தற்சமயம் மிகவும் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களுள் ஒன்றான விளங்கும் இதில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிட முடியும். பிரபாஸ் இந்த லம்போர்கினி காரை ஆரஞ்ச் நிறத்தில் டெலிவிரி எடுத்துள்ளார்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

லம்போர்கினி அவெண்டடோர் ரோட்ஸ்டர் காருடன் பிரபாஸ் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மறைந்த தந்தையின் பிறந்தநாளை இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பிரபாஸ் பகிர்ந்து கொண்டிருந்தார்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தை கடைசியாக தங்களுடன் கொண்டாடிய பிறந்த நாளில் தான் அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக கூறியிருந்தார். இதனால் இந்த லம்போர்கினி காரை தந்தையின் நினைவாக பிரபாஸ் வாங்கி இருக்கலாம் என பிரபாஸ் ட்ரெண்ட்ஸ் என்ற டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

2019ல் பிரபல ஃபார்ப்ஸ் செய்திதளம் வெளியிட்ட பிரபலங்களின் சொந்து மதிப்புபடி, பிரபாஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி ஆகும். இதனால் இவருக்கு இத்தகைய லம்போர்கினி வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

லம்போர்கினி அவெண்டடோர் ரோட்ஸ்டர் காரை பற்றி கூற வேண்டுமென்றால், இது தற்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் இல்லை. லம்போர்கினி அவெண்டடோர் வரிசையில் ஏகப்பட்ட ரோட்ஸ்டர் மாடல்கள் உள்ளன.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

இதில் எத்தகைய மாடலை பிரபாஸ் வாங்கியுள்ளார் என்பது சரியாக தெரியவில்லை. இவற்றில் 6.5 லிட்டர் வி12 மல்டி-பாயிண்ட் ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் அதிகப்பட்சமாக 770 பிஎச்பி மற்றும் 720 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!! செம்ம குஷியான ரசிகர்கள்!

இந்த என்ஜின் உடன் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டம் மற்றும் 7-ஸ்பீடு சுதேசியான ஷிஃப்ட்டிங் ராட்ஸ் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prabhas New Car Lamborghini Aventadors. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X