ஆரம்ப நிலை வேரியண்டா? இல்ல உயர்நிலை வேரியண்டா? எதை வாங்குவது சிறந்தது? இத உங்களுக்கு யாரும் சொல்லிதர மாட்டாங்க

இந்தியாவில் பட்ஜெட் வாகன பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான கார் மாடலின் அடி நிலை (பேஸ்) வேரியண்டை வாங்கி பின்னர் தங்களுக்கு பிடித்தவாறு அக்ஸசெரீஸ்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்கின்றனர்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

சந்தையில புதுசா வந்திருக்கும் காரை வாங்கலாம்னும் போனாலே பெரும் சிக்கல் தாங்க. நம்ம கூட இருக்க நண்பர்கள் பட்டாளம் ஒன்னு சொல்லுவாங்க, விற்பனையகத்தில் இருக்கக் கூடிய சேல்ஸ்மேனுங்க வேறுமாதிரியான தகவல்களை சொல்லுவாங்க. இதுலேயே நமக்கு எந்த காரை தேர்வு செய்யுறதுனே குழப்பமாயிடும்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

இதுல ஒரு சிலர் சொல்லுவாங்க பாருங்க, பட்ஜெட் விலை (ஆரம்ப நிலை) காரை வாங்கி, அதுக்கப்புறம் அக்ஸெசரீஸ்களை பயன்படுத்தி காரை கவர்ச்சியா மாத்திக்க'ன்பாங்க. இதுல வரும் பாருங்க குழப்பம், அத வெளிய சொல்லவே முடியாது. கூடுதல் குழப்பத்தை ஷோரூம்லயும் சிலர் தருவாங்க.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

கம்பெனி தரக்கூடிய இந்த அம்சங்கள்தான் பெஸ்ட். அதனால உங்களுக்கு அதிக சிறப்பம்சங்கள் மீது ஆச இருந்த, நீங்க உயர் நிலை வேரியண்டை பாருங்க. இதுதான் சிறப்பானதுனு சொல்லிடுவாங்க. இதுமாதிரியான குழப்பங்களை தவிர்க்க உதவும் வகையிலேயே இந்த பதிவை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

அதாவது, ஆரம்ப நிலை வேரியண்டா? அல்லது உயர்நிலை வேரியண்டா? இதில் எதை தேர்வு செய்யலாம் என்பதற்கான தேடுதலை விளக்கும் வகையிலேயே இப்பதிவை வெளியிட்டிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

செலவு:

நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் உங்களை ஆரம்ப நிலை வேரியண்டை தேர்வு செய்ய கூறிவதற்கு முக்கிய காரணமே அதன் விலை மட்டுமே ஆகும். ஆரம்ப நிலை வேரியண்ட்டுகள் பட்ஜெட் விலையில் கிடைக்கும். ஆனால் உயர்நிலை வேரியண்ட்டுகள் ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையைக் கொண்டிருக்கும். உதாரணமாக ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) காரை எடுத்துக் கொள்வோம்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்டான வென்யூ-இ (VENUE-E) ரூ. 6,99,200 என்ற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதுவே இதன் உச்ச நிலை வேரியண்டான வென்யூ எஸ்எக்ஸ்-ஓ (VENUE SX-O) - சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட தேர்வு ரூ. 11,79,900 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

இத்தகைய உச்சபட்ச விலையைக் குறைக்கும் பொருட்டே ஆரம்ப நிலை தேர்வை வாங்கும்படி பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த விலை குறைவான தேர்வை வாங்கி, பின்னர், சந்தையில் அல்லது அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் கிடைக்கும் கூடுதல் அக்ஸெசரீஸ்களைக் கொண்டு அக்காரை உயர்நிலை வேரியண்டுகளுக்கு இணையாக மாற்றிக் கொள்ள முடியும்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புறத்தை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். தேவைக்கேற்ப இவற்றை மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் இதன் வாயிலாக கணிசமான தொகையை மிச்சப்படுத்தவும் முடியும்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

எஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்

அதிகபட்சம் வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு விதமான எஞ்ஜின் தேர்வையே ஓர் கார் மாடலில் வழங்குகின்றனர். சில நிறுவனங்கள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எஞ்ஜின் தேர்வுகளை வழங்குவது உண்டு. இதில், பெரும்பாலும் ஆரம்ப நிலை தேர்வுகளில் மிதமான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட எஞ்ஜினே வழங்கப்படுகின்றது.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

சக்திவாய்ந்த எஞ்ஜின்கள் உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. கியா நிறுவனம் அதன் சக்திவாய்ந்த எஞ்ஜினை 'ஜிடி' என்ற பெயரிலும், ஹூண்டாய் 'என் லைன்' என்ற பெயரிலும் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், டிரான்ஸ்மிஷனைப் பொருத்தவரையிலும் ஆரம்ப நிலை தேர்வுகளில் மேனுவல் டிரான்ஸ்மின்ஷன் வசதி மட்டுமே வழங்கப்படுகின்றது.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

அதேநேரத்தில் உயர்நிலை தேர்வுகளில் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் எது வேண்டும் என்பதை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை கூடுதல் அக்ஸசெரீஸ் வாயிலாக நம்மால் மாற்றிக் கொள்ள முடியாது. ஆகையால், இந்த வசதிகள் வேண்டும் என்றால் உயர்நிலை தேர்வை நோக்கியோ நாம் போக வேண்டும்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய பாதுகாப்பு விதிகளின்படி அனைத்து வாகனங்களிலும் குறைந்த பட்ச பாதுகாப்பாவது இடம் பெற வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், பெரும்பாலான வாகனங்களில் முன் பக்கத்தில் இரு ஏர் பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம் பெற்றுவிடுகின்றன.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

இதைப் போன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. பக்கவாட்டு பகுதி ஏர் பேக், இபிடி, இஎஸ்பி, பின் புறத்திற்கான பார்க்கிங் சென்சார் மற்றும் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை உயர்நிலை வேரியண்டுகள் மட்டுமே நமக்கு வழங்கும். இதில் பெரும்பாலானவை கூடுதல் அக்ஸசெரீஸாக கிடைக்காது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

கம்ஃபோர்ட் மற்றும் சிறப்பம்சங்கள்

பாதுகாப்பு அம்சத்தைப் போலவே அதிக சௌகரியமான அம்சங்கள் ஆரம்ப நிலை வேரியண்டுகளில் மிகவும் குறைவாகவே வழங்கப்படும். க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பொத்தான் ஸ்டார்/ஸ்டாப் வசதி, சாவியில்லா நுழைவு, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிமோட் லாக்கிங் வசதிகள் போன்றவை உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆகையால், இந்த மாதிரியான அம்சங்களைப் பெற வேண்டுமானால் உங்களின் உயர்நிலை தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஆரம்பநிலை தேர்வை வாங்கி அக்ஸெசரீஸால் அலங்கரிச்சிக்கலாமா? இல்ல... உயர்நிலை தேர்வையே வாங்கலாமா? எது நல்லது?

காரின் மறு விற்பனை

ஓர் காரை நீங்கள் வாங்கிய அடுத்த கனமே அதன் பெரும் மதிப்பை இழக்கின்றது. அதிலும், அந்த வாகனம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தப்படுமானால் 20 முதல் 30 சதவீதம் வரை அதன் மதிப்பை இழக்கும். ஆரம்ப நிலை வேரியண்டோ அல்லது உயர்நிலை வேரியண்டோ இரண்டிற்கும் இந்த தத்துவம் பொருந்தும். உயர்நிலை வேரியண்ட் என்றால் அது பல மடங்கு அதிக விலைக்குப் போகும் என எண்ண வேண்டாம்.

Most Read Articles
English summary
Base spec or top spec which one is most sense here is full details
Story first published: Saturday, December 11, 2021, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X