போர்ஷே மசான் காரை டூப்ளிகேட் செய்த சீனர்கள்... இந்த காரையும் அவங்க விட்டு வைக்கலையா!!

போர்ஷே நிறுவனத்தின் மசான் சூப்பர் காரை சீனர்கள் டூப்ளிகேட் செய்து ஓர் காரை உருவாக்கி இருக்கின்றனர். இக்கார்குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

போர்ஷே நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளில் ஒன்றாக மசான் (Porsche Macan) இருக்கின்றது. இந்த கார் மாடலையே சீன நிறுவனம் தற்போது டூப்ளிகேட் செய்து புதிய கார் மாடலை உருவாக்கியிருக்கின்றது. பிரபல சீன நிறுவனமான ஹூவாய் நிறுவனமே போர்ஷே மசான் கார் மாடலை டூப்ளிகேட் செய்த நிறுவனம் ஆகும்.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

நிறுவனம் அய்டோ எம்5 (Huawei Aito M5) எஸ்யூவி எனும் கார் மாடலை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த காரே போர்ஷே மசான் தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இது ஓர் ஹைபிரிட் ர வாகனமாகும். மின்சாரம் மற்றும் எரிபொருள் என இரண்டிலும் இயங்கும். இக்கார் டெஸ்லா மாடல் எக்ஸ் காருக்கு இணையான ரேஞ்ஜை வழங்கும்.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

காரின் டிசைன்

இக்காரின் தோற்றம் ஏற்கனவே கூறியதைப் போல போர்ஷே மசான் காரை தழுவிய உருவமாக காட்சியளிக்கின்றது. இவ்வாறு கூறப்படுவதற்கு முக்கிய காரணமாக காரின் முன்பக்க க்ரில் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. மெல்லிய தோற்றத்திலான ஹெட்லைட் மற்றும் ஷார்ப்பான முகப்பு பகுதி உள்ளிட்ட பல அம்சங்கள் போர்ஷே மசான் காரில் இடம் பெற்றிருப்பதைப் போலவே காட்சிளிக்கின்றன.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

அதேநேரத்தில் ஏர் இன்டேக்கர் சற்றே வித்தியாசமானதாக காட்சியளிக்கின்றது. இதுவே இரு கார்களுக்கும் இடையில் மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. இந்த இடத்திலேயே மெல்லிய பனி மின் விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. செங்குத்தாக நிற்க வைத்த தோற்றத்தில் அது காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, பன்முக ஸ்போக் அமைப்புக் கொண்ட டைமண்ட் கட் வீல்கள் பெரிய தோற்றத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

ஆனால், இதன் கேபின் தோற்றம் மிகவும் சுலபமானதாக காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில் மிக சீரான அமைப்பையும் கொண்டிருக்கின்றது. இரட்டை நிற வசதி மற்றும் 15.6 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மோனிஸ் வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், 10.4 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் காக்பிட் மற்றும் ஆம்பிசியன்டம் மின் விளக்குகளும் காரின் உட்புறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

பெர்ஃபார்மன்ஸ்

அய்டோ எம்5 எஸ்யூவி காரில் எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஐசி திறன் கொண்ட எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு அல்லது ஒற்றை மோட்டார் தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன. பின் வீல் இயக்க தேர்வில் கிடைக்கும் அய்டோ எம்5 அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், நான்கு வீல் இயக்க தேர்வில் கிடைக்கும் அய்டோ எம்5 224 எச்பி பவரையும் வெளியேற்றும்.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

இந்த காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் நான்கு சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 40 kWh பேட்டரி பேக்கும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த பேட்டரி மற்றும் ஐசி எஞ்ஜின் என இரண்டும் சேர்ந்து 1,195 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இத்துடன் வெறும் 4.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும்.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

ஹூவாய் நிறுவனம் இந்த காரை ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இதற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து இக்காரை டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. போர்ஷே மசான் காரை போல் இது காட்சியளித்தாலும், சில தனித்துவமான அம்சங்களையும் அய்டோ எம்5 பெற்றிருக்கின்றது.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

போர்ஷே நிறுவனம் மிக சமீபத்திலேயே மசான் சொகுசு எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மசான், மசான் எஸ் மற்றும் மசான் ஜிடிஎஸ் ஆகிய மூன்று விதமான தேர்வுகளே நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பிரத்யேகமாக 14 விதமான நிற தேர்வுகளும் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

மசான் 195 கிலோவாட் திறனை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை 6.2 செகண்டுகளிலேயே தொட்டு விடும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 232 கிமீ ஆகும். இதன் உயர்நிலை வேரியண்டான மசான் ஜிடிஎஸ் அதிகபட்சமாக 440 பிஎஸ் பவரை வெளியேற்றும்.

போர்ஷே மசான் காருக்கு டூப்ளிகேட் அடித்த சீனர்கள்... இந்த காரைகூட அவங்க விட்டு வைக்கல!

இத்தகைய திறன் வெளிப்பாட்டை வழங்கக் கூடிய 2.9 லிட்டர் வி6 பைடர்போ எஞ்ஜினே போர்ஷே மசானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மாசன் எஸ் தேர்வும் அதிக திறனை வெளிப்படுத்தும் தேர்வாக இருக்கின்றது. அது, 380 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. ரூ. 83.21 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இக்கார் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Chinese brand huawei launches aito m5 inspired from porsche macan
Story first published: Thursday, December 30, 2021, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X