140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

ஒற்றை முழுமையான சார்ஜில் 140 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இந்த மின்சார பைக் பற்றிய இன்னும் பல முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

விரைவில் அறிமுகமாக இருக்கும் எனிக்மா கஃபே ரேசர் இ-பைக் படம்

இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் எனிக்மா ஆட்டோமொபைல்ஸ் (Enigma Automobiles). இந்நிறுவனம் ஓர் ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்த நிலையில் தற்போது மிக விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

இதன் வருகையை முன்னிட்டு தற்போது அப்பைக்கிற்கான புக்கிங்கை தொடங்கியிருக்கின்றது. தீபாவளியை முன்னிட்டு இன்னும் ஒரு சில தினங்களில் 'கஃபே ரேசர்' (Cafe Racer) என பெயரிடப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் பைக்கையே நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் இன்னும் ஓரிரு தினங்களில் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ வலைதளம் பக்கத்தின் வாயிலாக எனிக்மா ஆட்டோமொபைல்ஸ், கஃபே ரேசர் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங்கை தொடங்கியிருக்கின்றது. இந்த மின்சார இருசக்கர வாகனம் முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. அண்மையில், பிரதமர் மோடி உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும்படி மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

ஆகையால், முழு உள்ளூர் தயாரிப்பாக உருவாகி இருக்கும் கஃபே ரேசர் பைக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேன் இந்தியா திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஐந்து விதமான நிற தேர்வில் இவ்வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும்.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

ஏர்ல் சாம்பல் (Earl Grey), மிலிட்டரி பச்சை (Military Green), தண்டர் வெள்ளை (Thunder White), ஆர்எம்எஸ் சிவப்பு (RMS Red) மற்றும் லாக் ஆரஞ்சு (Log Orange) ஆகிய நிற தேர்வுகளிலேயே கஃபே ரேசர் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

நியோ ரெட்ரோ ஸ்டைலில் கஃபே ரேசர் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த தோற்றத்தை மெருகேற்றும் விதமாக வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஃபோர்க் கெய்டர்ஸ், டியர் ட்ராப் வடிவ ப்யூவல் டேங்க் (வேறு பயன்பாட்டிற்கானது), ஒயர் ஸ்போக் வீல்கள் மற்றும் ஒற்றை துண்டு இருக்கை மற்றும் கஃபே ரேசர் வாகன ஸ்டைலிலான கவுல் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

இத்துடன், கிளிப்-ஆன்-ஹேண்டில்பார், குறுகிய முன்பக்க ஃபெண்டர் மற்றும் பின் பக்க டயரில் ஹக்கர் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. கவர்ச்சியான தோற்றத்திற்காக பைக்கின் ஸ்டைலில் மட்டுமல்ல வண்ண பூச்சு வேலையிலும் நிறுவனம் அதிகம் கவனம் செலுத்தி இருக்கின்றது. கான்ட்ராஸ்ட் நிற ஃபாக்ஸ் டேங்க், கருப்பு நிறத்திலான சென்ட்ரல் பேனல்கள் மற்றும் கண்ணாடி போன்று பளபளக்கும் ரிம்கள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

சென்ட்ரல் பேனலுக்கு உள்ளேயே எலெக்ட்ரிக் மோட்டார் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது 5.6 kW பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதற்கு தேவையான மின்சார திறனை வழங்க 72V 50 Ah LifePo4 பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பேட்டரியை 5000 முறை வரை சார்ஜ் செய்தாலும் எந்த பாதிப்பையும் பெறாது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

எலெக்ட்ரிக் பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 136கிமீ ஆகும். வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 3 மணி நேரங்கள் தேவைப்படும். அதுவே முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

140 கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது!

எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரிக்கு ஐந்து வருடங்கள் வாரண்டியும், இதன் ஸ்போக் வீல்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாரண்டியும், டயர்களுக்கு 3 ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களை தனது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தின் பக்கம் ஈர்க்கும் விதமாக பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்களை கஃபே ரேசரில் நிறுவனம் புகுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Enigma automobiles start booking for upcoming ev cafe racer motorcycle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X