Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொகுசு காருக்கு போலி பதிவெண்ணை பயன்படுத்திய இளம்பெண்... இது இந்தியாவின் முக்கியமான நபருக்கு சொந்தமானது!
இந்தியாவின் முக்கியமான நபருக்கு சொந்தமான கார் பதிவெண்ணைப் டூப்ளிகேட் செய்து தனது சொகுசு காரில் பயன்படுத்திய இளம்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். யார் அந்த முக்கிய நபர், இளம்பெண்ணை எப்படி கைது செய்தனர் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இணையம் முழுவதும் டாடா நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றான டாடா சஃபாரி காரின் மறு வருகை பற்றிய தகவலே ஆக்கிரமிப்பு செய்த வண்ணம் இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் டாடா நிறுவனத்தின் உரிமையாளரான ரத்தன் டாடாவின் கார் பதிவெண்ணை வேறொருவர் பயன்படுத்தி வந்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முழு அர்பணிப்புடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் ரத்தன் டாடா. இவர் கார் மற்றும் பிற வாகனங்கள்மீது பெருத்த ஆர்வம் கொண்டவர் ஆவார். ஆமாங்க, மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். எனவேதான் இவரிடத்தில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமின்றி பிற நிறுவனங்களின் புகழ்பெற்ற தயாரிப்புகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.

அந்தவகையில், அவர் பயன்படுத்தி வரும் ஓர் காரின் பேன்சி எண்ணையே இளம்பெண் ஒருவர் முறைகேடாக பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த விதிமீறல் செயலுக்காக அவர் பயன்படுத்தி வந்த காரை மஹாராஷ்டிரா போக்குவரத்துப் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றது. மேலும், அப்பெண்ணையும் அவர் கைது செய்திருக்கின்றார்.

போலி பதிவெண்ணைப் பயன்படுத்தியதற்கு அந்த பெண் கூறிய காரணம் போலீஸாரையே திடுக்கிட செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. தன்னுடைய ராசி பலனிற்கு ஏற்ற எண் என்ற காரணத்தினாலயே தனது பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு எம்எச் 01 டிகே 111 (MH01 DK 111) என்ற பதிவெண்ணைப் பயன்படுத்தியதாக அவர் கூறியிருக்கின்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட போலி பதிவெண் கொண்ட பிஎம்டபிள்யூ சொகுசு கார்.
இது ரத்தன் டாடாவின் பதிவெண் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். சொகுசு காரைப் பயன்படுத்தி வந்த இளம்பெண்ணின் இந்த பதில் போலீஸாரையே திடுக்கிட செய்திருக்கின்றது. இந்த எண்ணுக்கு உரியவர் ரத்தன் டாடா ஆவார். கோர்வெட்டே சூப்பர் காருக்கே இந்த பதிவெண் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கார்வெட்டே ஓர் செவ்ரோலே நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறிவிட்டது. இது நாட்டில் மிகவும் துடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த வேலையிலேயே சூப்பர் திறன் கொண்ட காரான கோர்வெட்டே காரை ரத்தன் டாடா பயன்பாட்டிற்கு வாங்கினார். இக்காரின் தற்போதையே விலை 58,900 யூரோக்கள் ஆகும்.

தற்போதைய நிலவரப்படி ஒரு யூரோவின் இந்திய மதிப்பு 90.20 ரூபாயாகும். அப்படி என்றால் தோராயமாக 53 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இக்கார் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய அதிக விலைக் கொண்ட சூப்பர் காரையே ரத்த டாடா பயன்படுத்தி வருகின்றார். இக்காரின் பதிவெண்ணையே ராசி பலனுக்காக போலியாக தனது பிஎம்டபிள்யூ சொகுசு காரில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண் பயன்படுத்தி இருக்கின்றார்.

பல முறை விதிமீறலில் ஈடுபட்டததைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ கார் பற்றி போலீஸார் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது இது ஓர் போலியான எண் என்றும் உண்மையான பதிவெண்ணைக் காரின் உரிமையாளர் பயன்படுத்தவில்லை என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்தே தீவிர வேட்டைச் செய்யப்பட்டு தற்போது காரையும், அதன் உரிமையாளரையும் போலீஸார் பிடித்திருக்கின்றனர்.

இந்த விதிமீறல்களுக்காக பல்வேறு பிரிவுகளின்கீழ் அப்பெண் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து சம்பவம்குறித்து தீவிர விசாரணையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போலி பதிவெண் கொண்ட காரைக் கொண்டு வேறு ஏதேனும் சட்ட விரோத செயலில் அவர் ஈடுபட்டிருக்கின்றாரா, என விசாரனையைப் போலீஸார் தொடங்கியிருக்கின்றனர்.

இதுபோன்ற போலி பதிவெண் சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலேயே உயர்பாதுகாப்பு வசதிக் கொண்ட பதிவெண் செயல்முறை நாடுமுழுவதும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. ஏற்கனவே இந்த நடவடிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டெல்லியில் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் போலி பதிவெண் மற்றும் வாகனம் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களை அடியோடு ஒழிக்க முடியும் என நம்பப்படுகின்றது. இதனடிப்படையிலேயே வாகனம் சார்ந்து பல்வேறு சட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்திய வண்ணம் இருக்கின்றன.