டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்! புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?.. நல்ல பாருங்க

டாடா சஃபாரி காரை திரையுலகைச் சார்ந்த ஒருவர் புதிதாக வாங்கியிருக்கின்றார். அவர் யார், எந்த வேரியண்ட் காரை அவர் வாங்கியிருக்கின்றார் என்பது குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுமுக வரவுகளில் ஒன்றாக சஃபாரி எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த காரை தற்காலத்திற்கு ஏற்ற டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் மீண்டும் களமிறக்கியிருக்கின்றது டாடா.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

இந்த புதுமுக காரையே பிரபல நடிகர் ஒருவரின் மனைவி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரித்வி ராஜின் மனைவி சுப்ரியா மேனனே டாடா சஃபாரி காரை வாங்கியவர் ஆவார். இதுகுறித்த தகவலை சிங்க்ரோமெஷ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

மலையாளம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி திரையுலகிலும் தனது நடிப்பு புரட்சியைச் செய்துக் கொண்டிருக்கின்றார் பிரித்விராஜ். இவரின் மனைவியே புதுமையான தோற்றம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மீண்டும் இந்திய சந்தையைக் கலக்க களமிறங்கியிருக்கும் டாடா சஃபாரி எஸ்யூவி காரை வாங்கியிருக்கின்றார்.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

சுப்ரியா மேனன் வாங்கியிருப்பது டாடா சஃபாரி எஸ்யூவியின் அட்வென்சர் பெர்சனா வேரியண்ட் ஆகும். இது வழக்கமான சஃபாரி மாடலைக் காட்டிலும் மாறுபட்ட அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் உயர்நிலை தேர்வு என்பதால் தனித்துவமான அம்சங்கள் சிலவற்றையும் கொண்டிருக்கின்றது.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

அதாவது, கூடுதல் சொகுசு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இது தாங்கியிருக்கின்றது. ஆகையால், வழக்கமான சஃபாரி காரைக் காட்டிலும் இந்த வேரியண்ட் சற்று முரட்டுத்தனமான மற்றும் கவர்ச்சியான மாடலாக உள்ளது. இதற்கு கூடுதல் அணிகலன் சேர்ப்பும் ஓர் காரணமாகும்.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

உதாரணமாக இக்காரின் உடல்பகுதியில் குரோம்பூச்சு கொண்ட அணிகலன்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனை வழக்கமான சஃபாரி வேரியண்டில் காண முடியாது. இதுபோன்ற எக்கசக்கமான சிறப்பு வசதிகளையே அட்வென்சர் பெர்சோனா தேர்வு பெற்றிருக்கின்றது.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

டாடா சஃபாரி ஓர் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரக காராகும். அதேசமயம், இக்கார் ஆறு இருக்கை தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுபோன்று பன்முக வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது, டாடா சஃபாரி.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

குறிப்பாக திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் கூடுதலாகவே வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. அண்மையில் ஜோத்பூர் மஹாராணி மஹேந்திரா குமாரி கூட இக்காரை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

டாடா சஃபாரி கார் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எஞ்ஜினை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் டாடா வழங்கி வருகின்றது.

டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்... புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?... நல்ல பாருங்க!!

புதிய சஃபாரி கார் ரூ. 14.69 தொடங்கி ரூ. 21.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும ஆகும். டாடா நிறுவனம் இந்த காரை அதன் புகழ்வாய்ந்த ஹாரியர் எஸ்யூவி காரை தழுவியே உருவாக்கியிருக்கின்றது.

இருப்பினும், ஹாரியர் எஸ்யூவியைக் காட்டிலும் அதிக நீளம், அதிக உயரம் மற்றும் அதிக இடவசதி ஆகியவற்றுடன் உருவாகியிருக்கின்றது. எனவேதான், ஹாரியர் எஸ்யூவியைக் காட்டிலும் அதிகளவில் சஃபாரி காருக்கு வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Malayalam Actor PrithviRaj’s Wife Buys All-New Tata Safari SUV. Read In Tamil.
Story first published: Thursday, April 15, 2021, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X