Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு... ஐபிஎல் மைதானங்களில் நடக்கப்போகும் தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
2021 ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக புதிய சஃபாரி இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய சஃபாரி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய டாடா சஃபாரியின் விலை 14.69 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 21.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய டாடா சஃபாரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சூழலில், 2021ம் ஆண்டுக்கான விவோ ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக புதிய சஃபாரி கார் இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. இறுதி போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகியவைதான் அந்த 6 நகரங்கள். இந்த 6 நகரங்களிலும் போட்டிகள் நடைபெறக்கூடிய மைதானங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி காரை காட்சிக்கு வைக்கவுள்ளது. புதிய டாடா சஃபாரி இதன் மூலம் இன்னும் நன்கு பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா சஃபாரி காரில், 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

அதேபோல் புதிய டாடா சஃபாரி காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் முறையில் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆகிய வசதிகள் முக்கியமானவை.

இதுதவிர ஜேபிஎல் 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 7 இன்ச் டிஸ்ப்ளே, டிரைவிங் மோடுகள் பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் புதிய டாடா சஃபாரி பெற்றுள்ளது. இதன் காரணமாகவும், சஃபாரி என்ற பெயர் காரணமாகவும் இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அமோகமான வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் புதிய டாடா சஃபாரி போட்டியிட்டு வருகிறது. அத்துடன் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷனுக்கும் புதிய டாடா சஃபாரி விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையில்தான் புதிய டாடா சஃபாரி உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கிராவிட்டாஸ் என்ற பெயரில்தான் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பின்னர் இதன் பெயரை சஃபாரி என மாற்றியது.