10லட்ச ரூபா காருக்கு ரூ.21 லட்சம் பில் தீட்டிய டீலர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!!

சார் நீங்க எந்த ஊரு என் கேட்குமளவிற்கு பில்லை தீட்டியிருக்கின்றனர் நிஸான் மேக்னைட் சர்வீஸ் சென்டர் ஊழியர்கள். இணையத்தில் வைரலாகும் ஷாக் பில்குறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிக குறைந்த விலை கார்களில் நிஸான் மேக்னைட் கார் மாடலும் ஒன்று. தற்போது இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறைந்த விலை, பராமரிப்பு செலவு குறைவு என பல்வேறு சிறப்புகளை மேக்னைட் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான டிமாண்டை பெற்று வருகின்றது.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

இந்நிலையில், அனைத்து மேக்னைட் கார் பயனர்கள் மற்றும் புதிதாக மேக்னைட் காரை வாங்க இருப்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்திர ஹர்ஷா. வெளி மாநிலத்தில் பணி புரியும் இவர் மிக சமீபத்தில் சொந்த ஊர் சென்றிருக்கின்றார்.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

அப்போது, ஏபிஎஸ்ஆர்டிசி-க்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று இந்திர ஹர்ஷாவின் கார் மீது மோதியிருக்கின்றது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இவ்விபத்தில் மேக்னைட் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்திருக்கின்றது. இது மேக்னைட் கார்தானா என்பதைக் கண்டறியா முடியாத வகையில் முகப்பு பகுதி மிகக் கடுமையான சேதத்திற்கு ஆளானது.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

விபத்தின்போது கடுமையான காயங்களைச் சந்தித்த காரணத்தினால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நிலைக்கு இந்திர ஹர்ஷா தள்ளப்பட்டார். ஆகையால், கார்குறித்த எந்தவொரு தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இவரின் சகோதரர் ஒருவரே காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றது, இன்சூரன்ஸை க்ளைம் செய்வது அனைத்து வேலைகளையும் பார்த்திருக்கின்றார்.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

இந்த நிலையில் இந்திர ஹர்ஷா மிக சமீபத்தில் வீடு திரும்பியிருக்கின்றார். அப்போது, விபத்தானதுபோது கிடைத்ததைவிட பல மடங்கு ஷாக்கை வழங்கும் வகையில் சர்வீஸ் சென்டர் கொடுத்த பில் எஸ்டிமேட் இருந்திருக்கின்றது. விபத்தான நிஸான் மேக்னைட் காரை சீரமைக்க ரூ. 20,75,640க்கான பில்லை சர்வீஸ் சென்டர் கொடுத்திருக்கின்றது.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

இந்திர ஹர்ஷா பயன்படுத்தி வந்தது நிஸான் மேக்னைட் காரின் டர்போ எக்ஸ்வி பிரீமியம் சிவிடி வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட் இந்தியாவில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்கப்பட்டு வருகின்றது. இந்த விலைக் கொண்ட காரை சீரமைக்கவே சர்வீஸ் சென்டர் ரூ. 21 லட்சம் வரை பில் போட்டு கொடுத்திருக்கின்றது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மேக்னைட் கார் பயனர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கின்றது.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

"பலர் பராமரிப்பு செலவு மிக குறைவு என்கிற காரணத்தினாலேயே நிஸான் மேக்னைட் காரை வாங்கி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் காரின் விலையை விட கூடுதலாக 100 மடங்கு கட்டணத்தை சர்வீஸ் மையம் கேட்டிருப்பது மிக கொடியது" என இந்திர ஹர்ஷா வேதனை தெரிவித்துள்ளார்.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

சர்வீஸ் பில்லில் காரை பார்க் செய்தது தொடங்கி ரெக்கவரி செய்தது வரை அனைத்திற்கும் தனி தனியாக கட்டணத்தைப் போட்டு ரூ. 21 லட்சம் வரை சர்வீஸ் மையம் கொண்டு வந்திருக்கின்றது. இதுதவிர, சேதமடைந்த பாகம் மற்றும் பணியாளர் கூலி போன்றவற்றிற்கான கட்டணத்தையும் நிறுவனம் அதில் சேர்த்துள்ளது.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

எனவேதான், ஒட்டுமொத்தமாக காரை சரி செய்ய இந்த உச்சபட்ச தொகை வந்திருக்கின்றது. நிஸான் மேக்னைட் கார் ரூ. 5.59 லட்சம் தொடங்கி 9.90 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. நிஸான் மேக்னைட் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவுவதற்கு அதன் விலை மட்டுமே காரணமல்ல.

10 லட்ச ரூபா காருக்கு ரூ. 21 லட்சம் பில் தீட்டிய சர்வீஸ் சென்டர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!

கவர்ச்சியான டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகள், திறன் வாய்ந்த எஞ்ஜின் ஆகிய சிறப்பு வசதிகளையும் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பெற்றிருக்கின்றது. எனவேதான் இக்காருக்கு புக்கிங் கூரை பிய்த்துக் கொண்ட வருகின்றது. நிஸான் மேக்னைட் காருக்கு கிடைத்து வரும் புக்கிங் பற்றிய தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Source: Team BHP

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nissan Dealership Sends Rs. 21 Lakh Estimate For Accident Magnite Repair. Read In Tamil.
Story first published: Friday, April 23, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X