இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

உங்க கார் இந்த ஐந்து சமிக்ஞைகளை காண்பித்தா உடனே மெக்கானிக் கிட்ட கொண்டு போங்க இல்லனா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக அதிகம் வாய்ப்பு உள்ளது. என்ன அந்த ஐந்து சமிக்ஞைகள் வாருங்கள் பார்க்கலாம்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

வாயில்லா ஜீவன்களை (விலங்குகள்) போலவே நாம் பயன்படுத்தும் வாகனங்களும் சமிக்ஞைகளின் வாயிலாகவே அது சந்திக்கும் பிரச்னைகளை நமக்கு தெரிவிக்கின்றன. ஆனால், நாம் அதனை பெரும்பாலும் கண்டுக் கொள்வதில்லை. ஒரு சிலர் கார்கள் எச்சரிக்கையை பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதும் இல்லை. மிக தெளிவாக கூற வேண்டுமானால், ஏன் இந்த சமிக்ஞை என்று கூட அவர்கள் ஆராய்வதில்லை.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

இதன் விளைவாக, வெகு விரைவிலேயே எஞ்ஜின் தோல்வி (ஃபெய்லியர்) காரணமாக நடுரோட்டில் காரை தள்ளும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இதன் பின்னர்தான், "அடடே அன்னைக்கே நம்ம கார் எச்சரிக்கைக் கொடுத்துச்சே நாமதான் அதை கண்டுக்காம விட்டுட்டோம்" என அந்த நேரத்தில் புலம்புவோம்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

இத்தகைய புலம்பலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகதான், சின்ன சின்ன பிரச்னைகளாக இருந்தாலும் அதுகுறித்த தகவலை வாகனங்களின் டாக்டரான மெக்கானிக்குகளிடத்தில் கூறி அதற்கான தீர்வை வெகு விரைவிலேயே காண வேண்டும் என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

அந்தவகையில், எஞ்ஜின் தோல்வி அடைவதற்கு முன்னர் எழுப்பக்கூடிய ஐந்து சமிக்ஞைகள் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் காண இருக்கின்றோம். இந்த ஐந்து அறிகுறிகளை நாம் கவனிக்க தவறினால் எதிர்பார்த்திராத சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

எஞ்ஜின் விளக்கை சரிபார்க்கவும்

அனைத்து காரின் டேஷ்போர்டிலும் எஞ்ஜின் லைட் எனும் சிறிய மின் விளக்கு கொடுக்கப்பட்டிருக்கும். எஞ்ஜினில் சிறு சிறு பிரச்னை ஏற்பட்டாலும் இந்த மின் விளக்கு எச்சரிக்கை வழங்கும். எஞ்ஜின் கூறு அல்லது வழக்கமான இயக்கத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இந்த மின் விளக்கு உடனடியாக ஒளிர்ந்து சமிக்ஞை எழுப்பும்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

அவ்வாறு, சமிக்ஞை அது எழுப்பும்போது உடனடியாக என்ன கோளாறு என்பதை ஆராய வேண்டும். இல்லையெனில், ஆரம்பத்தில் சிறிய பிரச்னையாக இருக்கும் கோளாறுகள், நாம் கண்டுக்காமல் விடப்படுவதால் அது மிகப்பெரிய கோளாறுகளை உருவாக்க வழி வகுக்கும். ஆகையால், நிச்சயம் எஞ்ஜின் மின் விளக்கு மீது அவ்வப்போது கண் இருப்பது நல்லது.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

அதிகப்படியான புகை

வெளியேற்றும் (எக்சாஸ்ட்) குழாயில் இருந்து வழக்கத்திற்கு மாறாக புகை வருமானால் நிச்சயம் அதை கவனித்தே ஆக வேண்டும். அது கருப்பு, நீலம் அல்லது அடர் வெள்ளை என எந்த நிறத்தில் புகை வெளி வந்தாலும் உடனடியாக வாகன மெக்கானிக்குகளை அணுக வேண்டும்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

கருப்பு நிற புகை அதிகளவில் வெளி வருமானால், எரிபொருளில் அதிகம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது அல்லது எரிபொருள் செல்லும் பாதையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அதேசமயம், சாம்பள் நிற புகை அதிகளவில் வெளிவருமானால் எரிபொருள் (பெட்ரோல்/டீசல்) எரிப்பு (combustion) அறைக்குள் நுழைவதாக அர்த்தம்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

அடர் வெள்ளை, எஞ்ஜின் ஆயிலும் எரிபொருளுடன் சேர்ந்து எரிவதையே இது உணர்த்துகின்றது. ஆமாங்க, உங்க காரின் எக்சாஸ்டில் இருந்து அதிகளவில் வெள்ளை நிற புகை வெளியில் வருமானால் அதற்கு எரிபொருளுடன் சேர்ந்து எஞ்ஜின் ஆயிலும் எரிவதே அர்த்தமாகும். எனவேதான் அதிகப்படியான புகையை உங்கள் வாகனம் கக்குகின்றது என்றால் இதனை உடனடியாக கவனித்தாக வேண்டும் என்கின்றனர்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

கார் ஓட்டும் போது ஏற்படும் பிரச்னை

ஓர் கார் ஸ்டார்டிங்கின் அதிக கோளாறுகளை வழங்குகின்றது என்றால் அதன் எஞ்ஜினில் ஏதோ சிக்கல் இருக்கின்றது என்பதே அதற்கு அர்த்தம் ஆகும். குறிப்பாக, எரிபொருள் செல்லும் பாதையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஸ்பார்க் பிளக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது இக்னிஷன் காயில்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் இதுபோன்ற காரணங்களினால் மட்டுமே ஸ்டார்ட்டிங் டிரபிள் அதிகம் ஏற்படுகின்றது.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

அதேசமயம், ஏர் ஃபில்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும் வாகனத்தின் எஞ்ஜின் திறனில் கோளாறு ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், நாம் பார்த்த எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அவசியம் ஆகும். இல்லையெனில், இந்த சிறு சிறு பிரச்னை நாளடைவில் காரை டோவ் செய்ய வைத்து விடும்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

மைலேஜ் குறைதல் மற்றும் எஞ்ஜின் திறன் கோளாறு ஏற்படுதல்

மைலேஜ் அடி வாங்கினாலே உங்களின் எஞ்ஜின் அதிக எரிபொருளை உட்கொள்கின்றது என்பதே மட்டுமே அர்த்தம். அதிக எரிபொருளை குடிப்பதோடு மட்டுமில்லாமல் எஞ்ஜின் திறனும் குறைந்து காணப்படும். இந்த சமிக்ஞையானது விரைவில் எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகின்றது என்பதற்கான ஆரம்பம் ஆகும். இதனைக் கண்டுக்காமல் விட்டால் மிகப்பெரிய பிரச்னைகளை வழங்கும் என்கின்றனர் வாகன வல்லுநர்கள்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

எஞ்ஜின் தட்டும் சத்தம்

கதவுகளை தட்டுவதுபோன்று எஞ்ஜினில் இருந்து இதுமாதிரியான சத்தம் வெளி வரும். இது காற்றுடன் சேர்ந்து எரிபொருள் எரிப்பை அடைவதனால் ஏற்படுகின்றது. இது அடிக்கடி ஏற்படுமானால் எஞ்ஜினில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்பட அதிக வாய்ப்பு உருவாகின்றது. ஆகையால் இதனையும் உடனடியாக கவனிப்பது மிக மிக அவசியம் ஆகும்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

மேலே பார்த்த ஐந்து எச்சரிக்கைகள் மட்டுமின்றி மற்றும் சில காரணங்களும் எஞ்ஜின் செயலிழப்பு காரணமாக உள்ளன. அதிகப்படியான துர்நாற்றம், ஆயில் வழிதல், அதிக வெப்பம், அதிக சத்தம் மற்றும் அதிக அதிர்வு ஆகியவையும் எஞ்ஜினில் கோளாறு இருப்பதை உணர்த்தக் கூடியவை ஆகும்.

இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!

இதுபோன்று எந்த பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தாலும் நேரம் தாழ்த்தாமல் சரி செய்ய வேண்டும். மாறாக, இப்போதைக்கு நம் கார் நன்றாக செயல்படுகின்றது என நினைத்து வாகனத்தை தொடர்ச்சியாக இயக்கினால் திடீரென அது நம் காலை வாரிவிட நேரிடும். அந்த நேரத்தில் நிலைமை மிக மோசமானதாக மாறிவிடும். இத்தகைய சூழ்நிலை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவை நாங்கள் வழங்கியுள்ளோம்.

Most Read Articles
English summary
Please Do Not Ignore These Five Warnings-This Signs For Engine Failure. Read In Tamil.
Story first published: Tuesday, April 13, 2021, 19:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X