ஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே ஒரு நாளில் 100 யூனிட்டுகள் டாடா சஃபாரி எஸ்யூவி காரை டெலிவரி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் டாடா சஃபாரி எஸ்யூவி ரக காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 26 அன்று இக்காரை நிறுவனம் வெளியீடு செய்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி அன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

இந்த காரின் ஆரம்பநிலை வேரியண்டிற்கு 14.69 லட்ச ரூபாய் என்ற விலையையும், உயர் நிலை வேரியண்டிற்கு ரூ. 21.45 லட்சம் என்ற விலையுயம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த காரை தனது புகழ்வாய்ந்த எஸ்யூவி ரக காரான ஹாரியர் மாடலை உருவாக்கிய அதே இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்திலேயே டாடா உருவாக்கியிருக்கின்றது.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

மிக தெளிவாக கூற வேண்டுமானால் ஒமெகா பிளாட்பாரத்தில் வைத்தே இக்காரையும் கட்டமைத்திருக்கின்றது டாடா. எனவேதான் இக்காரில் ஹாரியர் காருடைய அம்சங்கள் சிலவற்றை நம்மால் காண முடிகின்றது. இத்தகைய சிறப்புமிக்க காரையே டாடா மோட்டார்ஸ் ஒரே நாளில் 100 யூனிட்டுகளை டெலிவரி செய்திருக்கின்றது. அதுவும் ஒற்றை நகரத்தில் மட்டுமே இத்தகைய தரமான சம்பவத்தைச் செய்திருக்கின்றது.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

நாட்டின் தலைநகரான டெல்லியிலேயே இந்த வாயை பிளக்க வைக்கும் சம்பவத்தை டாடா நிகழ்த்தியிருக்கின்றது. இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான வாகனமாக வலம் வந்தவற்றில் டாடா சஃபாரியும் ஒன்று. இந்த காரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில காரணங்களுக்காக சந்தையில் (விற்பனையில்) இருந்து நீக்கியது.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

இந்த நிலையிலேயே மீண்டும் புது தோற்றம் மற்றும் ஸ்டைலில் சஃபாரி எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்கார் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

மேலும், 8.8 இன்சிலான தொடுதிரை, பனோரமிக் சன்ரூஃப், ஒய்ஸ்டர் வெள்ளை நிறத்திலான உட்பகுதி, 9 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், 7 இன்சிலான டிஎஃப்டி திரை என கூடுதல் சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்ற பல்வேறு சொகுசு மற்றும் சிறப்பு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ஒரே ஒரு நாளில் 100 யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய சஃபாரி காருக்கு கடந்த மாதம் 4ம் தேதியில் இருந்து புக்கிங்கை பெற்று வருகின்றது. ரூ. 30 ஆயிரம் என்ற முன் தொகையில் முன் பதிவு தொடங்கியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஒரே நாளில் தலை நகர் டெல்லியில் மட்டும் 100 யூனிட் சஃபாரி எஸ்யூவி டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Delivers 100 Units Of All-New Safari In Delhi In A Single Day. Read In Tamil.
Story first published: Tuesday, March 2, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X