சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

Tata Motors ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லாதவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும் என கூறியிருந்தது. இந்த அறிவிப்பை இன்று நிறுவனம் நிறைவேற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

டோக்யோ ஒலிம்பிக்ஸ் 2021 போட்டியில் வெண்கலத்தை தவற விட்டவர்களுக்கும் கார் பரிசாக அளிக்கப்படும் என கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதியை Tata Motors இன்று நிறைவேற்றியிருக்கின்றது. கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

அண்மையில் ஜப்பான் தலைநகரமான டோக்யோவில் 2021ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். இந்தியா சார்பிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றனர்.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

இப்போட்டியில் ஒரே ஒரு தங்க பதக்கமே இந்தியாவிற்கு கிடைத்தது. இதனை பெற்றுக் கொடுத்த நீரஜ் சோப்ராவிற்கு ரொக்கம் தொடங்கி கார் வரை பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இன்னும் விற்பனைக்கே வராத (மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது) XUV700 எஸ்யூவி ரக காரை பரிசாக வழங்க இருப்பதாக Mahindra நிறுவனம் அறிவத்தது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

இதேபோல் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றவர்களுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இவ்வாறு பெரும்பாலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், மாற்று நடவடிக்கையாக நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான Tata Motors, தாமாக முன் வந்து பதக்கத்தை நூலிழையில் தவற விட்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

தனது நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான Tata Altroz ஹேட்ச்பேக் ரக காரை அது பரிசாக அளிக்க இருப்பதாக அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பையே இன்றைய (ஆகஸ்டு 26) தினம் நிறுவனம் நிறைவேற்றியிருக்கின்றது. அதாவது, வெண்கல பதக்கத்தை தவறவிட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு Tata நிறுவனம் Altroz ஹேட்ச்பேக் காரை பரிசாக வழங்கியது. ஒட்டுமொத்தமாக 24 தடகள போட்டியாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

அனைவருக்கும் தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட Tata Altroz காரே வழங்கப்பட்டிருக்கின்றது. கார் பரிசளிப்பு பற்றிய படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. Tata - வின் இந்த ஊக்குவிப்பு செயல் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அனைவரும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடி வரும் வேலையில் Tata நிறுவனம் சற்று விநோதமாக செயல்பட்டிருப்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

Tata Altroz ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த கார் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்திய சந்தையில் விற்பனையாகும் பிரீமியம் தர கார்களில் இதுவும் ஒன்றாகும்.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

பெட்ரோல், டீசல் மற்றும் ஐ-டர்போ என மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 5.84 லட்சம் ஆகும். அதேசமயம், இதன் உச்சபட்ச மாடல் ரூ. 9.59 லட்சம் என்ற அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே Tata Altroz விற்பனைக்குக் கிடைக்கிறது. அனைத்து எஞ்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுபல் கியர்பாக்ஸ் வசதி வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது. இதில், 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் 85 பிஎச்பியையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

இதேபோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பியையும், 140 என்எம் டார்க்கையும், 1.5 லிட்டர் டர்போ டீசல் 89 பிஎச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றன. இது ஓர் பிரீமியம் தர வாகனம் என்பதால் பல அட்டகாசமான அம்சங்களைத் தாங்கி நிற்கின்றது.

சொன்னதை செய்த Tata... 24 ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கார் பரிசளிப்பு... இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பான கார்!

அந்தவகையில், Tata Altroz ஹேட்ச்பேக் காரில் நடுநிலை டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏழு அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), தட்டையான அடிப்பகுதியுடன் பல்வேறு கன்ட்ரோல்களைக் கொண்ட ஸ்டியரிங் வீல் என பல்வேறு கவர்ச்சிகரமான அம்சஹ்கள் இடம் பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
Tata gifted altroz car to 24 indian tokyo olympic athletes who missed bronze medal in competition
Story first published: Thursday, August 26, 2021, 17:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X