பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

டாடா மோட்டார்ஸின் சிறந்த தயாரிப்புகளுள் ஒன்று என்றால் நிச்சயம் ஹெரியரின் பெயரை கூறாமல் இருக்க முடியாது. 2019ல் முதல்முறையாக இந்த நடுத்தர அளவு எஸ்யூவி கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்டவற்றுடன் விற்பனையில் போட்டியிட்டுவரும் இந்த டாடா எஸ்யூவி கார் டீசல் என்ஜின் தேர்வில் மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. ஹெரியரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

காம்பஸ் மாடலிலும் இதே டர்போ-டீசல் என்ஜினை தான் ஜீப் நிறுவனம் பொருத்துகிறது. ஜீப் காம்பஸின் 2021ஆம் ஆண்டிற்கான வெர்சனும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. சரி செய்திக்குள் போவோம். 2021 டாடா ஹெரியர் கார் ஒன்றிற்கும், 2021 ஜீப் காம்பஸ் கார் ஒன்றிற்கும் இடையே நடத்தப்பட்ட பந்தயம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Image Courtesy: Fuel Injected

ஃப்யுல் இன்ஜெக்டட் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். தோற்றம் மட்டுமே வேறு, ஆனால் என்ஜின் ஒன்றே. ஏற்கனவே கூறியதுதான், இரண்டிலும் ஒரே மாதிரியான 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினே வழங்கப்படுகிறது. இதனால் தான் இந்த போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

கட்டமைப்பு பணியில் இருக்கும் காலி விமான ஓடுதளத்தில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது. பொது சாலையில் இவ்வாறான போட்டிகளை மேற்கொள்வது சட்ட விரோதமானது ஆகும். ஏனெனில் இதில் உங்களது உயிர் மட்டுமல்ல எதிரில் வருபவரின் உயிரும் சம்பந்தப்பட்டுள்ளது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் முதலாவதாக ஜீப் காம்பஸில் அமருகிறார். போட்டி துவங்கியவுடன் ஆரம்பத்தில் காம்பஸ் தான் முன்னிலை வகிக்கிறது. ஹெரியர் எவ்வளவு தான் முயன்றும் காம்பஸை நெருங்க முடியவில்லை. இதனால் முதல் சுற்றில் ஜீப் காம்பஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இரண்டாவது சுற்றில் விலாகர் ஹெரியரில் சென்று அமருகிறார். ஆனால் இம்முறை ஹெரியர் முன்னிலை பெறுகிறது. காம்பஸ் ஸ்டார்ட் ஆகும்போதே சற்று கோட்டைவிட்டது. இம்முறை காம்பஸை முந்தவே விடாமல் வேகம் காட்டிய ஹெரியர் இரண்டாவது சுற்றை வென்றது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

பரபரப்பான இறுதிசுற்றில் காம்பஸ் ஓட்டுனர் மாற்றப்படுகிறார். ஆனால் ஹெரியரில் அதே ஓட்டுனர் தான். ஓட்டுனர் மாற்றப்பட்டதால் காம்பஸ் முன்னிலையில் இருக்கும் என்று உங்களை போல் நானும் தான் நினைத்தேன். ஆனால் இம்முறையும் டாடா மோட்டார்ஸின் தயாரிப்பே லீடிங்கில் உள்ளது. கடைசியில் மூன்றாவது சுற்றையும் வென்றது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ட்ராக் ரேஸ் எனப்படும் இந்த போட்டியில் டாடா ஹெரியர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் ஈடுப்படுத்தப்பட்ட இந்த இரு எஸ்யூவி கார்களும் 4x2 மாடல்களாகும். டாடா ஹெரியர் இந்த போட்டி முழுவதுமே ஸ்போர்ட் மோடில் இயக்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸில் இவ்வாறான ட்ரைவிங் மோட்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இந்த இரு எஸ்யூவி கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆற்றல்/எடை விகிதத்தினை கொண்டிருந்தாலும், ஹெரியர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஸ்டார்டிங்கின்போது ஹெரியரில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் பாகங்கள் காரின் இயக்கத்திற்கு தடையாக இல்லாததே என இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் இறுதியில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

காம்பஸிற்கு அதன் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் தொழிற்நுட்பமே சரியான துவக்கத்திற்கு தடையாக உள்ளது. ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் தான் தடை என இந்த வீடியோவை எடுத்தவர்கள் எதுவும் சொல்லவில்லை. ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் ஆஃப் செய்துவிட்டு தான் இவ்வாறான பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டும் என கார் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இவ்வாறு செய்திருந்தால் இந்த போட்டி இன்னும் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும். டாடா ஹெரியர் மற்றும் ஜீப் காம்பஸில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பரபரப்பாக நடந்த டாடா ஹெரியர் vs ஜீப் காம்பஸ் பந்தயம்!! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இவை இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஜீப் காம்பஸில் மட்டுமே 4x4 ட்ரைவிங் தேர்வு வழங்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17.19 லட்சத்தில் இருந்து ரூ.28.49 லட்சம் வரையிலும், டாடா ஹெரியரின் விலை ரூ.14.30 லட்சத்தில் இருந்து ரூ.21.11 லட்சம் வரையிலும் உள்ளன.

Most Read Articles

English summary
Tata Harrier vs Jeep Compass Facelift in a classic drag race.
Story first published: Wednesday, August 18, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X