எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

எதிர்பார்க்காத மிக மிக மலிவான விலையில் 2021 Tata Tigor EV எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் இன்னும் பல முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

Tata Motors (டாடா மோட்டார்ஸ்) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 Tigor EV (2021 டிகோர் இவி) எலெக்ட்ரிக் காரை இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு மிக மிக குறைவான விலையை நிறுவனம் நிர்ணயித்திருப்பது ஒட்டுமொத்த இந்திய மின் வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

புதிய 2021 Tata Tigor EV (2021 டாடா டிகோர் இவி) ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. XE (எக்ஸ்இ), XM (எக்ஸ்எம்), XZ+ (எக்ஸ்இசட் ப்ளஸ்) மற்றும் XZ+ (O) (எக்ஸ்இசட் ப்ளஸ் [ஓ]) ஆகிய தேர்வுகளிலேயே டிகோர் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இதில், ஆரம்ப நிலை மாடலாக எக்ஸ்இ காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். இந்த குறைவான விலையில் வேறெந்த எலக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியாவின் மிக மிக மலிவு விலை எலெக்ட்ரிக் காராக 2021 டாடா டிகோர் இவி-இன் அறிமுகம் அமைந்துள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இதன் உயர்நிலை தேர்வாக எக்ஸ்இசட் ப்ளஸ் (ஓ) தேர்வு காட்சியளிக்கின்றது. இத்தேர்விற்கு ரூ. 12.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான, அதாவது, ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் ரூ. 1 லட்சம் மட்டுமே அதிகமான விலையில் விற்பனைக்கு வந்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ், 2021 டிகோர் இவி காரை புதிய ஜிப்ட்ரான் (ZipTron) Powertrain-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த தொழில்நுட்பத்தின்கீழ் உருவாக்கப்படும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். Nexon EV எலெக்ட்ரிக் காரே ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மின்சார காராகும்.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த கார் புதிய 2021 டிகோர் இவி அறிமுகத்திற்கு முன்னர் வரை நாட்டின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இருந்தது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.13.99 லட்சம் ஆகும். இதைக் காட்டிலும் ரூ. 2 லட்சம் குறைவான விலையைக் கொண்டதாக புதிய 2021 டிகோர் இவி இருக்கின்றது. எனவேதான் தற்போது நாட்டின் மிக மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இது மாறியிருக்கின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

புதிய 2021 டிகோர் இவி எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட் வாரியான விலை விபரம்:

Tigor EV Price
XE ₹11,99,000
XM ₹12,49,000
XZ+ ₹12,99,000
எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இக்காரில் 26kWh லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய நிரந்தர மேக்னட் சிங்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் 55 kW அல்லது 74 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் லித்தியன் அயன் பேட்டரி IP67 தர சான்று பெற்றது. இதற்கு எட்டு ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

2021 டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டாரானது சூப்பர் வேகம் திறன் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வெறும் 5.7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தில் இயங்கும் திறனை இக்கார் பெற்றிருக்கின்றது. இதேபோல் அதிக சார்ஜ் திறனும் இக்காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்கையில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 60 நிமிடங்களே போதும் என கூறப்படுகின்றது. அதேவேலையில், ஃபாஸ்ட் சார்ஜ் அல்லாத பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 8.5 மணி நேரங்கள் முழுமையாக சார்ஜ் செய்ய தேவைப்படுகிறது. அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 306 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இது ARAI வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும். இக்காருக்கு 8 வருடங்கள் அல்லது 1.6 லட்சம் கிமீ வாரண்டியை பேட்டரி மற்றும் மின் மோட்டாருக்கு டாடா மோட்டார்ஸ் வழங்குகின்றது. இத்துடன் புதுப்பித்தலின் அடிப்படையில் சில சிறப்பு வசதிகளை 2021 டிகோர் இவி-யில் டாடா சேர்த்துள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் புதிய கண்ணாடி போன்ற பலபலப்பான நிறத்திலான க்ரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை கூடுதல் கவர்ச்சியாக காட்டும் வகையில் திரிசூல வடிவ அம்புகளின் அச்சுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் இவி எனும் பேட்ஜுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இத்துடன், புரஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய கிடைமட்ட வடிவிலான பனி மின் விளக்குகள், இதிலேயே எல்இடி டிஆர்எல்கள், புதிய அலாய் வீல் மற்றும் நீல நிற அக்செண்டுகள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட வால் பகுதி மின் விளக்குகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இவற்றைப் போலவே காரின் உட்பகுதியிலும் பல்வேறு சிறப்பு அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மோன் சோர்ஸ்ட் 4 ஸ்பீக்கர்கள் சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் அடங்கிய ஸ்டியரிங் வீல் மற்றும் சிறப்பு இருக்கைகள் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

இதுமட்டுமின்றி ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம் (இதன் வாயிலாக காருக்குள் இருக்கும் 30க்கும் மேற்பட்ட அம்சங்ககளை ரிமோட் வாயிலாக கன்ட்ரோல் செய்ய முடியும்), இன்ட்ரூஸன் அலர்ட், ரிமோட் கூளிங், சார்ஜிங் ஸ்டேட்டஸ் என சிறப்பு வசதிகளும் 2021 டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்க்கவே இல்ல... மிக மிக குறைவான விலையில் 2021 Tata Tigor EV அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே வாங்க ஆசைப்படுவீங்க!

மேலும், பாதுகாப்பு வசதிகளாக இரு ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பின் பக்கத்தில் பார்க்கிங் கேமிரா (தேர்வாக மட்டுமே வழங்கப்படும்) மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இது வழக்கமான எரிபொருளால் இயங்கும் டிகோர் மாடலைப் போல பாதுகாப்பு தரத்தில் 4 ஸ்டார் பெற்றிருக்கும் என நம்பப்படுகின்றது.

Most Read Articles

English summary
Tata motors launched 2021 tigor ev in india at rs 11 99 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X