மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு வழியாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலின் தயாரிப்பு-வெர்சனை 'பஞ்ச்' என்கிற பெயரில் சமீபத்தில் வெளியீடு செய்திருந்தது. எஸ்யூவி கார்களுக்கு கடந்த சில வருடங்களாக நம் நாட்டு சந்தையில் தேவை அதிகரித்துவரும் நிலையில், மைக்ரோ-எஸ்யூவி காராக டாடா பஞ்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

இந்த புதிய டாடா கார் இன்னும் முழுவதுமாக அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலமாகவும், இணையத்தில் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கும் விபரங்களை வைத்தும் இந்த மைக்ரோ-எஸ்யூவி கார் இவ்வாறுதான் இருக்கும் என ஓரளவிற்கு கணித்து வைத்துள்ளோம்.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

இவற்றின் வாயிலாக, விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா பஞ்ச் காருக்கும், விற்பனையில் ஜொலித்துவரும் உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரான மாருதி வேகன்ஆருக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

வெளிப்புற ஸ்டைல் & பரிமாண அளவுகள்

டாடா பஞ்ச் காரின் வெளிப்பக்கம் பெரும்பாலும் எச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலின் தோற்றத்தையே ஒத்திருக்கும். இருப்பினும் டிசைன்களில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். மாருதி வேகன்-ஆரை பொறுத்தவரையில் இது பெட்டகம் போன்ற உடலமைப்பை கொண்டது. இதன் பின்பக்க கதவு 90 கோணத்தில் மிகவும் நிமிர்ந்த வடிவில் வழங்கப்படுகிறது.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

பரிமாண அளவுகளில், டாடா பஞ்ச் ஆனது வேகன்ஆர் காரை காட்டிலும் கூடுதல் நீளமானது மற்றும் அகலமானது. ஆனால் உயரத்திலும், வீல்பேஸை அதிக நீளத்தில் கொண்டிருப்பதிலும் மாருதி வேகன்ஆர் முன்னிலை வகிக்கிறது. கீழுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள டாடா பஞ்ச் காரின் பரிமாண அளவுகள் அனைத்தும், அதன் எச்பிஎக்ஸ் கான்செப்ட் உடையது ஆகும்.

Dimension Tata Punch* Maruti WagonR
Length 3840mm 3655mm
Width 1822mm 1620mm
Height 1635mm 1675mm
Wheelbase 2450mm 2435mm
மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

உட்புற டிசைன் & வசதிகள்

பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புற கேபினை தற்போதுவரையில் டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் இதற்குமுன் நமக்கு கிடைத்திருந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, இந்த டாடா கார் அதன் கான்செப்ட் மாடலில் வழங்கப்பட்ட அதே டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கரம் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையே பெற்று வரும் என எதிர்பார்க்கிறோம்.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

வேகன்ஆர் மிகவும் எளிமையான உட்புற கேபினை கருப்பு & பழுப்பு நிறங்களில் பெறுகிறது. இதன் டேஸ்போர்டின் மத்தியில் 7-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும், அதற்கு இரு பக்கங்களிலும் செங்குத்தான ஏசி துளைகளும் வழங்கப்படுகின்றன. இந்த உயரமான ஹேட்ச்பேக் காரில் மேனுவல் ஏசி முன்பக்கத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கு என்று தனியாக இல்லை.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

பவர்ட்ரெயின்

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் இதன் விலை குறைவான வேரியண்ட்களில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினும் (86 பிஎச்பி & 113 என்எம் டார்க் திறன் இருக்கலாம்), டாப் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினும் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன. மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படலாம்.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

வேகன்ஆர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் (69 பிஎஸ்/ 90 என்எம்) மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் (83 பிஎஸ்/ 113 என்எம்) என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின்களை தேர்வுகளாக மாருதி நிறுவனம் வழங்கி வருகிறது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும் வேகன்ஆரில் சிஎன்ஜி வெர்சனும் கிடைக்கிறது.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

விலை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரின் விலைகளை வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில் அதன் அறிமுகத்தின் போது வெளியிடவுள்ளது. மிடில் க்ளாஸ் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய வகையில் ரூ.5 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையுடன் டாடா பஞ்ச் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி வேகன்ஆரை சமாளிக்குமா புதிய டாடா பஞ்ச்? வேகன்ஆர் ஹேட்ச்பேக் Vs பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி

மாருதி வேகன்ஆரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4.80 லட்சத்தில் இருந்து ரூ.6.33 லட்சம் வரையில் உள்ளன. இதனால் மற்ற விஷயங்களை காட்டிலும் விலையில் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா பஞ்ச் காருக்கு மாருதி வேகன்ஆர் நிச்சயம் கடுமையான போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
Tata Punch Vs Maruti Wagon-R – Specifications Comparison Table Code.
Story first published: Wednesday, September 15, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X