இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் கவர்ந்து வரும் புதுமுக காரின் பெயர் பற்றிய தகவலை Tata நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

இந்தியர்களின் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் பெரிதும் கவர்ந்து வரும் கார் மாடல்களில் ஒன்றாக Tata HBX. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். அதாவது மிக சிறிய உருவம் கொண்ட எஸ்யூவி கார் ஆகும். இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு என தனி கிராக்கி நிலவுகின்றது. அதிலும், சிறிய மற்றும் மலிவு விலை எஸ்யூவி கார்களுக்கு சற்று அதிகளவில் டிமாண்ட் நிலவுகின்றது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

எனவேதான் இந்த சந்தையைக் குறி வைத்து தனது புதுமுக காரை Tata களமிறக்குகிறது. இதற்காக உருவாக்கப்பட்டதே HBX மைக்ரோ எஸ்யூவி. இந்த காரின் அறிமுகம் இன்னும் சில நாட்களில் அரங்கேற இருக்கின்றது. இந்த நிலையில்தான் ஓர் டீசர் வீடியோவை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

இவ்வீடியோவின் வாயிலாக காரின் பெயர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருப்பதை Tata உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, முன்னதாக Tata நிறுவனம் இந்த மைக்ரோ எஸ்யூவி காரினை H2X, HBX மற்றும் Hornbill இவ்வாறு குறிப்பிட்டு வந்த நிலையில் அதன் பெயர் யாரும் எதிர்பார்க்காத வகையில் PUNCH என வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இப்பெயரிலேயே அக்கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

ஒவ்வொரு முறையும் வெளியாகிய தகவல்கள் அனைத்தும் இந்த கார் என்ன பெயரில் விற்பனைக்கு வரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையிலேயே டாடாவின் புதிய டீசர் படம், புதுமுக மைக்ரோ எஸ்யூவி கார் PUNCH எனும் பெயரில் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்துடன் மிக விரைவில் விற்பனைக்கு வருவிருப்பதையும் என்பதையும் படம் உறுதிப்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

Tata-வின் நிறுவனத்தின் தற்போதையே எஸ்யூவி ரக கார் தயாரிப்புகளிலேயே மிகக் குறைந்த விலைக் கொண்ட காராக PUNCH வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை தனது புகழ்மிக்க கார் தயாரிப்பு தளமான ALFA-வில் வைத்தே Tata உருவாக்கி வருகின்றது. இதனை தனது இம்பேக்ட் டிசைன் 2.0 யுக்தியை கட்டமைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் Tata Altroz மற்றும் Harrier ஆகிய கார் மாடல்களைப் போன்று அதிக கவர்ச்சியான ஓர் தயாரிப்பாக Tata PUNCH விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதிக சிறப்பு மிக்க வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் PUNCH இல் எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

இது விற்பனைக்கு வந்த பின்னர் நிறுவனத்தின் சப் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான Nexon-க்கு கீழ் இடத்தில் நிலை நிறுத்தப்படும். ஏற்கனவே இந்த காரின் உற்பத்தி மற்றும் சிறப்பு வசதிகள் குறித்த தகவலை 90 சதவீதம் வரை Tata இறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

ஆகையால், என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் மற்றும் அலங்காரங்களை Tata PUNCH பெறும் என்பது கணிசமாக தெரிய வந்திருக்கின்றது. இதனடிப்படையில், எல்இடி டிஆர்எல்-களுடன் கூடிய தனி தனியான முகப்பு மின் விளக்கு, புத்தம் புதிய முக்கொம்பு ஸ்டைலிலான மெஷ் க்ரில் ஆகியவை அக்காரில் இடம் பிடிக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

இத்துடன், எலெக்ட்ரிக்கல் வாயிலாக கட்டுப்படுத்தக் கூடிய ஓஆர்விஎம்-கள், வட்ட வடிவ பனி மின் விளக்கு, அலாய் வீல், ரூஃப் ரயில், ரூஃபில் ஸ்பாய்லர் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய Tata PUNCH இல் இடம் பெற இருக்கின்றன. காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற உள்ளன.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

அந்தவகையில், உட்பகுதி முழுவதையும் Tata நிறுவனம் கருப்பு நிறத்தால் அலங்கரிக்க இருக்கின்றது. தொடர்ந்து, பல வித கன்ட்ரோல் பொத்தான்கள் அடங்கிய தட்டையான அடிப்பக்கம் கொண்ட ஸ்டியரிங் வீல், பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் Nexon கார் மாடலில் இருப்பதைப் போல சிறிய ஸ்டிக்-அவுட் திரை உள்ளிட்டவையும் PUNCH இல் இடம் பெற இருக்கின்றன.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

எஞ்ஜினைப் பொருத்தவரை PUNCH இல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டாரே Altorz பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார்களில் இடம் பெற்று வருகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இப்படி ஒரு பெயரா?.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக காரின் பெயரை வெளியிட்டது Tata! ஸ்டைலுக்கு ஏற்ற பெயர்!

இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி தேர்வு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலே பார்த்த இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடனேயே Tata PUNCH விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் இன்னும் ஓரிரு மாதங்களில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த தகவலை நிறுவனம் இப்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata revealed hbx officail name here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X