Just In
- 52 min ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
''அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
- Sports
கண் அசைவிற்காக காத்திருக்கும் 3 பேர்.. "தமிழர்களை" புறக்கணிக்கும் தோனி.. நேற்று நடந்த பரபர சம்பவம்
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Finance
சிறு தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோவை நிறுவனத்தின் உண்மை நிலை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா சஃபாரி பெர்சோனா கார்களின் டெலிவிரிகள் துவங்கின!! மற்ற வேரியண்ட்களை விட ஏன் இது சிறப்பானது?
டாடா சஃபாரி பெர்சோனா காரின் டெலிவிரிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சஃபாரி பெயர்பலகையை சமீபத்தில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக கொண்டுவரப்பட்ட புதிய சஃபாரி காருக்கு ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரூ.14.49 லட்சத்தில் இருந்து ரூ.21.45 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த 7-இருக்கை எஸ்யூவி கார் கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் 1,700 யூனிட்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது.

எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி+, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ என்ற வேரியண்ட்களை தொடர்ந்து அட்வென்ச்சர் பெர்சோனா வேரியண்ட் 2021 டாடா சஃபாரியின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சஃபாரியை முன்பதிவு செய்பவர்களில் பெரும்பான்மையானோர் அட்வென்ச்சர் பெர்சோனா உள்பட டாப் வேரியண்ட்களையே தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக சில டாப் வேரியண்ட்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர் காத்திருப்பதற்கான கால அளவை 2 மாதங்கள் வரையில் டாடா நிறுவனம் கொண்டுவந்தது.

எக்ஸ்இசட்+ வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் அட்வென்ச்சர் பெர்சோனாவின் விலை ரூ.20,000 வரையில் அதிகமாக உள்ள நிலையில் இந்த டாப் வேரியண்ட்டை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளது.

இந்த வகையில் சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா காரை டெலிவிரி எடுத்த நவீன் சயானி என்பவர், இது தொடர்பான படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது தான் தெரிகிறது, ஏன் வாடிக்கையாளர்கள் அட்வென்ச்சர் பெர்சோனா வேரியண்ட்டையே தேர்வு செய்கின்றனர் என்பது.

ஏனென்றால், மற்ற வேரியண்ட்களை காட்டிலும் அட்வென்ச்சர் பெர்சோனா வேர்டியண்ட்டில் பளப்பளக்கும் நீல நிறத்தில் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.20.20 லட்சத்தில் இருந்து ரூ.21.45 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சஃபாரி பெர்சோனா கார்கள், டாப் வேரியண்ட் என்பதால் சவுகரியத்திற்கு, பாதுகாப்பிற்கு என ஏகப்பட்ட அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளன.

வெளிப்புறத்தில் மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் கருப்பு நிற அலாய் சக்கரங்களை பெறும் சஃபாரி பெர்சோனா காரின் உட்புறம் பழுப்பு- கருப்பு என்ற இரட்டை நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் மற்ற டாப் வேரியண்ட்களான எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ ட்ரிம்களில் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2021 டாடா சஃபாரி பெர்சோனா கார் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் பெறலாம்.