டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

டாடா டியாகோ கார் எவ்வளவு மைலேஜ் தருகின்றது என்கிற தகவலை இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மற்றும் விலைக் குறைந்த ஹேட்ச்பேக் காராக டியாகோ இருக்கின்றது. இது அதிக பாதுகாப்பு திறன்மிக்க காரும்கூட. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்புகுறித்த மோதல் பரிசோதனையில் இக்கார் ஐந்திற்கு 4 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரையே இளைஞர் ஒருவர் மைலேஜ் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் டாடா டியாகோ காரையே இளைஞர் மைலேஜ் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றார்.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்விரு எஞ்ஜின் தேர்வு கொண்ட காரையே இளைஞர் பரிசோத்திருக்கின்றார். இரண்டுமே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.84 லிட்டர் மைலேஜை வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறுகின்றது.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

ஆனால், உண்மையில் என்ன மைலேஜ் இக்கார் வழங்குகின்றது என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இந்த காரை இளைஞர் நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இரு விதமான சாலைகளிலும் வைத்து பயன்படுத்தியிருக்கின்றார்.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

அவ்வாறு இயக்கியபோது லிட்டர் ஒன்றிற்கு 18.13 கிமீட்டரை மட்டுமே இக்கார் மைலேஜாக வழங்கியிருக்கின்றது. பயணத்தின்போது அனைத்து நிலைகளிலும் வாகனத்தை அவர் இயக்கியிருக்கின்றார். குறிப்பாக, முழுவதுமாக ஏசி போட்ட அவர் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே நிறுவனம் கூறியதைக் காட்டிலும் மிக குறைவான மைலேஜை கார் வழங்கியிருக்கின்றது.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

இதனால் டாடா டியாகோ கார் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். முன்னதாக, டாடா நெக்ஸான் மின்சார கார் கூறியதைக்காட்டிலும் மிக குறைவான ரேஞ்ஜை வழங்குவதாக பலர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், யுட்யூபர் ஒருவர் டாடா டியாகோவின் குறைந்த மைலேஜ் பற்றிய தகவலை வெளியிட்டிருப்பது மேலும் ஷாக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

டாடா டியாகோ கார் எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட்ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ப்ளஸ் இரட்டை நிறம் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், உயர்நிலை மாடலில் விற்பனைக்குக் கிடைக்கும் டியாக பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வாகனமாக விற்பனைக்கு வருகின்றது.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

அந்தவகையில், 5.0 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், அட்ஜெஸ்டபிள் முன்பக்க ஹெட்ரெஸ்ட், பொத்தான் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கண்ணாடிகள் என பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

டாடா டியாகோ எவ்வளவு மைலேஜ் தருகிறது?.. உண்மையை வெளிப்படையாக யுட்யூபில் போட்டுடைத்த இளைஞர்!!

இதுதவிர, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிக் கொண்ட திரை, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமிரா, கூலட் க்ளோவ் பாக்ஸ், குரல் கட்டளை வசதி போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

Image Courtesy: Amar Drayan

தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் டிஸ்பிளே, சீட் பெல்ட் ரிமைண்டர், பின்தொடர் மின் விளக்குகள் ஆகிய அம்சங்களும் டாடா டியாகோவில் உள்ளன. இத்தகைய பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட இக்கார் இந்தியாவில் ரூ. 4,85,500 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles

English summary
Tata Tiago Manual Gearbox Varient Real World Mileage Details. Read In Tamil.
Story first published: Friday, March 19, 2021, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X