Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிய இளைஞர்... சிசிடிவி கேமிராவில் பதிவான ஷாக் வீடியோ! இனியாவது உசார இருங்க!
காருக்குள் இருந்த கேமிராவை இளைஞர் ஒருவர் லாவமாக திருடிச் செல்லும் வீடியோக் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காரில் இருந்த பையை மர்ம நபர் ஒருவர் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் ஓர் திருட்டு நடக்குமா என்ற கேள்வியையே இந்த சம்பவம் அநேகரின் மத்தியில் எழுப்பியிருக்கின்றது.

காரை பார்க் செய்த பின்னர் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டுவிட்டதாக நம்பி காரின் உரிமையாளர் புறப்படுகின்றார். ஆனால், கார் நிறுத்தப்படுவதற்கு முன்னரே, காரின் பின் பக்க கதவை உரிமையாளருக்கே தெரியாமல் அந்த நபர் லாவகமாக திறக்கின்றார். பின்னர், காரின் உரிமையாளர் நகர்ந்ததும், காருக்குள் சென்று அதிலிருந்த பையை திருடிக் கொண்டு அவர் வெளியேறுகின்றார்.

இதுகுறித்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் ஓர் பாடமாகவே அமைந்துள்ளது. காருக்குள் இருக்கும் அனைத்தும் பத்திரமாக இருக்கும் என நம்பி வெளியேறுவோர்க்கு இந்த சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதுவரை எந்த வாகன உரிமையாளரும் கண்டிராத வகையில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பதால் பலர் இந்த வீடியோவை பார்த்து உறைந்து நிற்கின்றனர். அப்பகுதியில் சிசிடிவி இருந்த காரணத்தினாலேயே திருடப்பட்ட மர்ம நபர் இனம் காண்டறியப்பட்டிருக்கின்றார். இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல் துள்ளியமாக தெரியவில்லை.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இப்பதிவை பிரத்யேகமாக வழங்கியிருக்கின்றோம். வாகனத்தை விட்டு வெளியேறும் முன் நாம் எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காண்பிக்கின்றது. அதாவது, காரை விட்டு வெளியேறிய பின் அனைத்து கதவுகளும் லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அங்கிருந்து நகர வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது.
சிசிடிவி கேமிரா பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து குற்ற சம்பவங்கள் சற்றே குறைந்திருக்கின்றன. இருப்பினும், ஏதேனும் ஓர் மூலையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த விநோத சம்பவமும் உள்ளது. தான் சிசிடிவி கேமிரா முன் இருக்கின்றோம் என்பதைக் கூட அறியாமல் மர்ம நபர் காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிச் சென்றிருக்கின்றார்.