Just In
- 54 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 3 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் இந்த 5 வாகன மாடிஃபிகேஷன்களுக்கு மட்டும் அனுமதி உண்டு... என்ன மாடிஃபிகேஷன்கள் தெரியுமா?...
டாப் ஐந்து அனுமதியுள்ள வாகன மாடிஃபிகேஷன் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம். இவையனைத்திற்கும் இந்தியாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாகனங்களை கவர்ச்சியானதாக மாற்றும் விதமாகவும், அதிக சொகுசு வசதிகள் நிரம்பியதாகவும் மாற்ற வேண்டும் என்பதற்காகவும் சிலர் வாகனங்களை மாடிஃபேகேஷன் செய்வதுண்டு. இவ்வாறு, விருப்பத்திற்கேற்ப வாகனங்களை மாடிஃபை செய்வதன் மூலம் வாகனத்தின் உண்மைத் தோற்றம் மாற்றமடைந்துவிடுகின்றன என்பது அதிகாரிகளின் புகாராக இருக்கின்றது.

இந்த காரணத்திற்காகவே வாகன மாடிஃபிகேஷனை இந்திய மோட்டார் வாகன சட்டம் மிகப்பெரிய குற்றமாக கருதுகின்றது. அதேசமயம், குறிப்பிட்ட சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு மோட்டார் வாகன சட்டம் அனுமதியளிக்கின்றது. அது என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

1. உடல்பகுதியை மறைத்தல்:
அண்மைக் காலங்களாக இந்திய வாகன உரிமையாளர்கள் மத்தியில் வாகனத்தின் உடற்பகுதியை விநோத நிற ஸ்டிக்கர்களால் மறைக்கும் வழக்கம் அதிகம் தென்படுகின்றது. இதனை வாகனத்தின் உருவ தன்மையை மாற்றாத வண்ணம் பயன்படுத்திக் கொள்ளலாம் என விதிகள் கூறுகின்றது.

குறிப்பாக, பான்னெட், ரூஃப் போன்ற குறிப்பிட்ட பாகங்களை விராப் செய்து கொள்ள விதிகள் உள்ளன. ஆனால், வாகனத்தின் உண்மை நிறத்தை மாற்றும் வகையில் புதிய பெயிண்டிங் வேலை செய்வீர்களானால் இதுகுறித்த மாற்றத்தை ஆர்சி புத்தகத்தில் செய்துவிட வேண்டும். இல்லையெனில் போலீஸின் நடவடிக்ககையில் சிக்கக்கூடும்.

2. டயர் மற்றும் அலாய் வீல்:
வாகனத்தின் உயரத்தை அதிகரிக்கச் செய்கின்ற வகையில் டயர்கள் மற்றும் அலாய் வீல்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் விதிகள் கூறுகின்றன. ஆனால், இந்த மாற்றத்திற்கு முன்னதாக விதிகள் தடை விதித்து வந்தன. மிக சமீபத்தில் இதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, வாகனத்தின் உயரத்தை மாற்றியமைக்கும் வகையில் டயரை மாற்றும் அதிக கவனம் தேவை என்கின்றனர், வாகன ஆர்வலர்கள். இதுபோன்று மாற்றப்படும் டயர் மற்றும் அலாய் வீல்கள் சில நேரங்களில் வாகனத்தின் இயக்கத்திற்கு சிக்கலை வழங்க நேரிடலாம். எனவேதான் இதில் கவனம் தேவை என்கின்றனர்.

3. கூடுதல் உடல் அணிகலன்கள்:
வாகன உற்பத்தியாளர்களே இப்போது இந்த அணிகலன்களை கூடுதல் கட்டணத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றனர். தங்களின் வாகனத்தை கூடுதல் ஸ்போர்ட்டியான மாற்றும் முரட்டுத்தனமானதாக மாற்றும் வகையில் எக்ஸ்ட்ரா பாடி கிட்களை உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சைட் பேனல், முன்பக்க ஸ்பிளிட்டர், டிஃப்யூஸர், பாடி கிளாடிங் உள்ளிட்டவற்றை கூடுதலாக பொருத்திக் கொள்ளலாம்.

4. ஆஃப்டர் மார்க்கெட் சிஎன்ஜி எந்திரம்:
ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் எந்தவொரு கருவியைப் பயன்படுத்தினாலும் அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாகக் கூடும் என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் இருக்கின்றது. எனவேதான் பலர் இத்தகைய அணிகலன்களைத் தவிர்க்கின்றனர். ஆனால், சந்தைக்குபிறகான சிஎன்ஜி கிட்களுக்கு விதிகள் அனுமதியளிக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு சிக்கலையும் சந்திக்க முடியாது.

5. எல்இடி டிஆர்எல்கள்:
பழைய ஹாலோஜன் மின் விளக்குகளுக்கு பதிலாக குறைந்தளவு வெளிச்சத்தை வழங்கக் கூடிய எல்இடி மின்விளக்குகள் மற்றும் டிஆர்எல்களை பயன்படுத்திக்கலாம் என விதிகள் கூறுகின்றன. இவை மழை மற்றும் அதிக பனி பொழிவுகளில்கூட நல்ல பார்வை திறனை வழங்கும் என்கின்ற காரணத்திற்காக இதற்கான அனுமதியை வழங்கி வருகின்றது.

மேலே கூறப்பட்ட ஐந்து விதமான மாடிஃபிகேஷன்களுக்கு மட்டுமே மோட்டார் வாகன விதிகள் அனுமதியளிக்கின்றது. இதுகுறித்த தகவலை டைம்ஸ்நவ் தளமும் உறுதி செய்திருக்கின்றது.