இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்களை பற்றியும், அவை வழங்கும் மைலேஜ் விபரம் பற்றிய தகவலையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த 79 நாட்களாக மாற்றமின்றி விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. முன்னதாக செய்யப்பட்ட தொடர் விலை உயர்வின் காரணத்தினால் இவை தற்போதும் ரூ. 100 ஐ கடந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது தினசரி வாகன பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

ஆகையால், மக்கள் மாற்று வாகனங்களை தேர்வு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை சற்றே அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. மேலும், புதிய சிஎன்ஜி வாகனங்களின் அறிமுகமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. சமீபத்தில் கூட டாடா நிறுவனம் டியாகோ, டிகோர் கார்களில் சிஎன்ஜி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

இதன் விளைவாக நாட்டில் சிஎன்ஜி தேர்வில் கிடைக்கும் கார்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்தது. இந்த சிஎன்ஜி கார்களில் எது அதிக மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். சிஎன்ஜி மற்றும் அதிக மைலேஜை வழங்கும் கார் பிரியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பதிவை தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

மாருதி சுசுகி செலிரியோ சிஎன்ஜி (Maruti Celerio CNG)

மாருதி சுசுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே புதிய தலைமுறை செலிரியோ காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே நாட்டின் மிக அதிக மைலேஜை தரும் காராகவும் காட்சியளிக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.68 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த மைலேஜ் திறனையே தூக்கி சாப்பிடும் வகையில் புதிய செலிரியோ சிஎன்ஜி காரின் அறிமுகம் அமைந்திருக்கின்றது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.52 கிமீ வரை மைலேஜ் தரும். 1.0 லிட்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 57 பிஎஸ் பவரையும், 78 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். சிஎன்ஜி வசதிக் கொண்ட வேகன்ஆர் ரூ. 6.13 லட்சம் தொடங்கி ரூ. 6.19 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

மாருதி சுசுகி ஆல்டோ 800 சிஎன்ஜி (Maruti Alto 800 CNG)

மாருதி சுசுகி ஆல்டோ 800 காரிலும் சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது. இது இந்தியாவின் மிக மலிவு விலை சிஎன்ஜி காராக விளங்குகின்றது. எல்எக்ஸ்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ (ஓ) வேரியண்டுகளில் மட்டுமே சிஎன்ஜி தேர்வு வழங்கப்படுகின்றது. இந்த கார் ரூ. 4.89 லட்சம் தொடங்கி ரூ. 4.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அதிகபட்சமாக 31.59 கிமீ வரை மைலேஜ் தரும்.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ சிஎன்ஜி (Maruti S-Presso CNG)

மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு சிஎன்ஜி தேர்வுக் கொண்ட வாகனமாக எஸ்-ப்ரெஸ்ஸோ இருக்கின்றது. இதன் எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய வேரியண்டிலேயே சிஎன்ஜி தேர்வு வழங்கப்படுகின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு இந்த கார் 31.2 கிமீ வரை மைலேஜ் தரும். ரூ. 5.24 லட்சம் தொடங்கி ரூ. 5.56 லட்சம் வரை இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

ஹூண்டாய் சேன்ட்ரோ சிஎன்ஜி (Hyundai Santro CNG)

ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் சிஎன்ஜி வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் காராக சேன்ட்ரோ இருக்கின்றது. இதுவே ஹூண்டாய் விற்பனைக்கு வழங்கும் குறைந்த விலை சிஎன்ஜி காராகும். ரூ. 6.10 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிஎன்ஜி வசதிக் கொண்ட சேன்ட்ரோ 30.48 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த காரில் 1.1 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 60 பிஎஸ் மற்றும் 85 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி (Hyundai Grand i10 Nios CNG)

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு சிஎன்ஜி வசதிக் கொண்ட காராக கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி தேர்வு வழங்கப்படுகின்றது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலாய் வீல்கள், தானியங்கி ஏசி, பனி மின் விளக்கு மற்றும் ரியர் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட வசதிகள் இக்காரில் வழங்கப்படுகின்றன. இதன் விலை ரூ. 7.07 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது. இக்கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.5 கிமீ வரை மைலேஜ் தரும்.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

ஹூண்டாய் அவுரா சிஎன்ஜி (Hyundai Aura CNG)

இந்தியாவில் செடான் ரக காரில் சிஎன்ஜி தேர்வை வழங்கிய முதல் காராக ஹூண்டாய் அவுரா சிஎன்ஜி இருக்கின்றது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ வரை மைலேஜ் தரும். மிட்-ஸ்பெக் எஸ் வேரியண்டில் மட்டுமே சிஎன்ஜி வசதி வழங்கப்படுகின்றது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சமீபத்திலேயே இக்காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.49 கிமீ வரை மைலேஜ் தரும். டியாகோவின் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் ஆகிய வேரியண்டுகளில் சிஎன்ஜி தேர்வை டாடா வழங்குகின்றது.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

டாடா டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG)

டாடா நிறுவனத்தின் மற்றுமொரு சிஎன்ஜி வசதிக் கொண்ட காராக டிகோர் இருக்கின்றது. டியாகோ சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளிலேயே டிகோர் சிஎன்ஜியும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இக்காரில் தானியங்கி மழை வைப்பர் மற்றும் தானியங்கி ஹெட்லேம்ப் உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. டிகோர் சிஎன்ஜி அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.49 கிமீ வரை மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ரூ. 7.69 லட்சம் ஆகும்.

இந்தியாவில் எந்த சிஎன்ஜி கார் அதிக மைலேஜை தருகிறது?.. இதோ 10 கார்களின் பட்டியல்!

மாருதி சுசுகி எர்டிகா சிஎன்ஜி (Maruti Ertiga CNG)

மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் காராகும். இந்த காரிலும் மாருதி நிறுவனம் சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது. விஎக்ஸ்ஐ வேரியண்டில் மட்டுமே இந்த தேர்வு வழங்கப்படுகின்றது. இக்கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.08 கிமீ வரை மைலேஜ் தரும். மாருதி சுசுகி நிறுவனம் 1.5 லிட்டர் சிஎன்ஜி மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 91 பிஎஸ் பவரையும், 122 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

Most Read Articles
English summary
India s top 10 most fuel efficient cng cars
Story first published: Saturday, January 22, 2022, 14:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X