மஹிந்திராவை பகிரங்கமாக கிண்டல் அடித்த டாடா! 2 நிறுவனங்களும் இப்படி சண்டை போட்டுக்குவாங்கனு யாருமே எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

அவை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) ஆகும். இதில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். இதன் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதம்தான் தொடங்கப்படவுள்ளது. மறுபக்கம் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

மஹிந்திராவை பகிரங்கமாக கிண்டல் அடித்த டாடா! 2 நிறுவனங்களும் இப்படி சண்டை போட்டுக்குவாங்கனு யாருமே எதிர்பாக்கல!

ப்ரைம் (Prime) மற்றும் மேக்ஸ் (Max) ஆகிய வேரியண்ட்களில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தற்போது புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 35 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இந்திய சந்தையில் 35 ஆயிரம் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

இந்த சாதனை சமூக வலை தளங்கள் மூலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தனது முக்கியமான போட்டியாளராக உருவாகி வரும் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தையும், டாடா மோட்டார்ஸ் கிண்டல் அடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ''35,000 > 00'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ''00'' என்பது மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) காரை குறிப்பதாக கூறப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 என்பது வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ஆனால் இதன் விலைகள் (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் கூடிய விரைவில் இந்த காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் ஜனவரி மாதம் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாகதான் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவேதான் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் படைத்துள்ள சாதனையை, மஹிந்திரா எக்யூவி400 எலெக்ட்ரிக் காரை கிண்டல் அடிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை விட, நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பெரியது என்பதை குறிக்கும் வகையில், ''35,000 > 00'' என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேக்ஸ் வெர்ஷனில், 40.5 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 437 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ப்ரைம் வெர்ஷனில், 30.2KWH பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்தபடியாக பன்ச் மற்றும் அல்ட்ராஸ் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா பன்ச் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய 2 கார்களும் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. எனவே இவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Tata nexon ev trolls mahindra xuv400
Story first published: Monday, December 5, 2022, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X