விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு இன்னும் 2 நாட்களில் புக்கிங் தொடங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV). டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான், இந்த புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்தது.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

இந்த சூழலில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் அக்டோபர் 10ம் தேதியில் (October 10) இருந்து தொடங்கப்படவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை 2 வழிகளில் முன்பதிவு செய்ய முடியும். இந்தியா முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொகை 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களில் உள்ள முன்னணி ஷாப்பிங் மால்களில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் நடப்பு அக்டோபர் மாதத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

அதை தொடர்ந்து டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக வழங்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் எனவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும்.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். அவை XE, XT, XZ+ மற்றும் XZ+ Tech LUX ஆகும். இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும். இதில், 19.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 24 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

இதில், 24 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட மாடல்களின் உற்பத்திக்குதான் அதிக முன்னுரிமை வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் தேதி மற்றும் நேரம், தேர்வு செய்யும் வேரியண்ட் மற்றும் கலர் ஆப்ஷன் ஆகியவற்றை பொறுத்து, டெலிவரி செய்யப்படும் தேதி அமையும்.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் கொடி கட்டி பறந்து வருகிறது. டிகோர் எலெக்ட்ரிக் கார் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகியவை இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி வாங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களாக இருந்து வருகின்றன.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

இந்த வரிசையில் தற்போது டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மிகவும் குறைவு என்பதால், இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் போட்டி போடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தன்வசம் வைத்துள்ளது.

விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க

இந்த பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிடம் இருந்து, டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் தட்டி பறித்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. டியாகோ எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் ஆகிய புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Tata tiago ev booking test drive delivery details
Story first published: Friday, October 7, 2022, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X