பிரபலமான டாடா காரில் இந்த வசதிகளையும் குடுக்க போறாங்களா! என்ன பண்றதுனு தெரியாம திருதிருன்னு முழிக்கும் மாருதி!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள டாடா எலெக்ட்ரிக் காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் புதிய வசதிகள் வெகு விரைவில் வழங்கப்படவுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தன் கைக்குள் வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுதான் இதற்கு முக்கியமான காரணம் ஆகும்.

Tata Tigor EV

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV), டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) ஆகிய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்தவையாக உள்ளன. இதில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புதிய டிகோர் எலெக்ட்ரிக் காரின் டீசர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசர் நேற்று (நவம்பர் 21) வெளியிடப்பட்டது. இந்த டீசரில் 2 days to go! என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே வெகு விரைவிலேயே புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, வரும் நாட்களிலேயே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் டேடோனா க்ரோ மற்றும் டீல் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ள டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் புதிய சிகப்பு கலர் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது.இது கூடுதல் கலரை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும். தற்போது டாடா மோட்டார்ஸ் வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலமாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) மற்றும் லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி (Leatherette Upholstery) போன்ற வசதிகளும் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் கூடுதலாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 306 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆவலை எகிற வைத்துள்ளது.

புதிய கலர் ஆப்ஷன் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டாலும், பேட்டரி மற்றும் ரேஞ்ச் ஆகிய அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என 2 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. இந்த டிரைவிங் மோடுகளும் புதிய மாடலில் அப்படியே வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், புதிய அப்டேட்டுகள் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் எல்லாம் தொடர்ந்து வழங்கப்படலாம். சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டால் கூடுதல் மதிப்பை வழங்கும் என்று நம்பலாம்.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி, க்ரூஸ் கண்ட்ரோல், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகள் புதிதாக வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் புதிதாக விற்பனைக்கு வரவுள்ள டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் புதிய அப்டேட்கள் காரணமாக விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கலாம்.

அடுத்தபடியாக அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV) மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) ஆகிய புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார்களும், இன்னும் ஒரு சில மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரலாம். இந்த விஷயங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் ஆவலை அதிகப்படுத்தி உள்ளது.

இப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரிசையாக எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட அறிமுகம் செய்யவில்லை. எலெக்ட்ரிக் கார்களை குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த பந்தயத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata tigor ev to get new features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X