மார்க்கெட்டில் கிடைக்கும் நம்பகமான டாப்- 10 யூஸ்டு கார்கள்!

Posted By:

கார் என்பது ஆடம்பரம் என்பது போய், இன்று கார் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. குடும்பத்தினர் ஒன்றாக, பாதுகாப்பாக செல்வதற்கு மட்டுமின்றி, நேரத்தையும் வெகுவாக மிச்சப்படும் போக்குவரத்து சாதனமாக கார்கள் இருப்பதால், ஒவ்வொருவரும் கார் வாங்கும் திட்டத்தை நிறைவேற்றிவிடுவதற்கு அதிக முனைப்புக் காட்டுகின்றனர்.

பட்ஜெட்டை கருதி குறைவான விலையில் தனது தேவைக்கேற்ப இடவசதி கொண்ட அல்லது பயன்பாட்டிற்கு தக்க கார் மாடலை விரும்புபவர்களுக்கு பழைய கார்கள் சிறந்த சாய்ஸ். புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களும் முதலில் பழைய காரை வாங்கி பழகிய பின் புதிய கார் வாங்குவதும் உத்தமம். அவ்வாறு, மார்க்கெட்டில் கிடைக்கும் நம்பகமானதாக டீலர்கள் கருதும், 10 பழைய கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. மாருதி வேகன் ஆர்

01. மாருதி வேகன் ஆர்

அதிக ஹெட்ரூம், போதிய வசதிகள், அடக்கமான வடிவம் என்று நகர்ப்புறத்தில் பயன்பாட்டிற்கு ஏற்ற கார் மாடல். பார்க்கிங் பிரச்னை இருப்பவர்கள் இந்த காரை வாங்குவது நல்லது. சிறந்த மைலேஜ் மற்றும் செயல்திறன் கொண்ட எஞ்சினுடன் வரும் மாருதி வேகன் ஆர் காருக்கு பழைய மார்க்கெட்டில் நல்ல மதிப்பு இருக்கிறது. தவிர, குறைவான பராமரிப்பு செலவும், மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்கும் பலம் சேர்க்கிறது. 5 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ ஓடிய பழைய வேகன் ஆர் கார் ரூ.2.70 லட்சம் விலையில் கிடைக்கிறது.

 02. ஹூண்டாய் சான்ட்ரோ

02. ஹூண்டாய் சான்ட்ரோ

விற்பனை நிறுத்தப்பட்டாலும், ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு பழைய கார் மார்க்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. மேலும், இப்போது சரியான விலையில் ஓர் சிறந்த சிறிய கார் மாடலை விரும்புபவர்களுக்கு ஏற்ற மாடல். இடவசதி, சிறப்பான எஞ்சின், தரமான பாகங்கள் போன்றவை இந்த காரின் மதிப்புக்கு வலு சேர்க்கும் காரணங்கள். ஓரிரு ஆண்டுகள் ஓட்டி பழகிவிட்டு, புதிய கார் மாடல் வாங்குவோர்க்கு இந்த காரை வாங்குவதே சாலச்சிறந்தது. 5 ஆண்டுகள் ஓடிய மாடல் அல்லது 40,000 கிமீ ஓடிய மாடலை ரூ.2.25 லட்சம் விலையில் வாங்க முடியும்.

03. ஹோண்டா சிட்டி

03. ஹோண்டா சிட்டி

தரமான பாகங்கள், ஃபிட் அண்ட் ஃபினிஷ், டிசைன் என்று ஹோண்டா சிட்டிக்கு பல சாதகங்கள் உண்டு. மேலும், இதன் பழைய பெட்ரோல் மாடலுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தஸ்தான பழைய காரை விரும்புபவர்களுக்கு சரியான சாய்ஸாக இருக்கும். பழைய மார்க்கெட்டில் 2011ம் ஆண்டு முதல் 2014 வரை விற்பனையில் இருந்த பெட்ரோல் மாடல் காரை ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் வாங்கலாம்.

 04. மாருதி 800

04. மாருதி 800

முதல்முறையாக கார் ஓட்ட பயிலும் பெண்களுக்கு இந்த காரை முதலில் வாங்கி ஓட்டிப் பழகலாம். மிக குறைவான விலையில் கிடைக்கும் இந்த கார் குறைவான பராமரிப்பு செலவு கொண்டதுடன், அதிக மைலேஜையும் தரும். கையாள்வதற்கு எளிதாக இருக்கும். ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் ஓடிய ஏசி வசதி கொண்ட பிஎஸ்-3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட காரை ரூ.75,000 விலையில் வாங்கலாம். நீண்ட நாள் வைத்து ஓட்ட விரும்புபவர்கள் இந்த காரை தவிர்க்கவும்.

 05. டொயோட்டா குவாலிஸ்

05. டொயோட்டா குவாலிஸ்

இடவசதி, நம்பகத்தன்மை வாய்ந்த டீசல் எஞ்சின், குறைவான பராமரிப்பு போன்றவை இந்த காருக்கு வலுசேர்க்கும் அம்சங்கள். உற்பத்தி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், சிறந்த ஓட்டுதல் தரத்தையும், இடவசதியையும் வழங்குவதால், அதிக நபர்கள் கொண்ட குடும்பத்தினருக்கு ஏற்றது. 2000 முதல் 2004ம் ஆண்டு வரை இருந்த மாடலை ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலையில் கண்டிஷனை பொறுத்து வாங்கலாம்.

 06. மாருதி எஸ்டீம்

06. மாருதி எஸ்டீம்

உற்பத்தி நிறுத்தி 8 ஆண்டுகள் முடிந்தாலும், மாருதி எஸ்டீம் காருக்கு பழைய கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறைவான பராமரிப்பு, மைலேஜ், சிறப்பான இடவசதி கொண்ட இந்த கார் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றது. காரில் சிறிய ஆல்டரேஷன் செய்து பயன்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கும் சிறப்பான சாய்ஸ். 10 ஆண்டுகள் ஓடிய அல்லது 80,000 கிமீ ஓடிய எஸ்டீம் காரை ரூ.75,000 விலையில் வாங்க முடியும்.

 07. டொயோட்டா இன்னோவா

07. டொயோட்டா இன்னோவா

பழைய கார் மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவாவுக்கு சிறந்த மதிப்பு இருக்கிறது. 8 பேர் வசதியாகவும், சொகுசாகவும் பயணம் செய்ய ஏற்ற கார் மாடல். செயல்திறன் மிக்க நம்பகமான டீசல் எஞ்சின் இதற்கு பக்கபலம். அதேநேரத்தில், பழைய மார்க்கெட்டில் இன்னோவா பெட்ரோல் மாடலை தவிர்ப்பது நலம். ஆறு முதல் ஏழு ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ ஓடிய டொயோட்டா இன்னோவா காரை ரூ.5.25 லட்சம் விலையில் வாங்க முடியும்.

08. மாருதி ஆல்ட்டோ

08. மாருதி ஆல்ட்டோ

நம் நாட்டு மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் சிறிய கார் மாடல். குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ், அடக்கமான வடிவம் போன்றவை இந்த காரை நம்பர்-1 ஆக வைத்திருக்கிறது. பழைய கார் மார்க்கெட்டிலும் இந்த காருக்கு நல்ல மதிப்பு இருப்பதையும், இதன் நம்பகத்தன்மையையும் டீலர்கள் பொதுவான பரிந்துரை மாடலாக கூறுகின்றனர். 5 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ ஓடிய மாருதி ஆல்ட்டோ காரை ரூ.2 லட்சத்தையொட்டிய விலையில் வாங்க முடியும்.

09. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

09. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

சக்திவாய்ந்த டீசல் எஞ்சின், அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்ற மாடல். டிசைன், இடவசதி என்று அனைத்திலும் சிறப்பான மாடல். அரசியல்வாதிகளுக்கும், அந்தஸ்தை விரும்புபவர்களுக்கும் ஏற்ற எஸ்யூவி மாடல். ஏழு ஆண்டுகள் அல்லது 80000 கிமீ ஓடிய மாடலை ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் வாங்கலாம்.

10. மாருதி ஸ்விஃப்ட்

10. மாருதி ஸ்விஃப்ட்

பல இந்தியர்களின் விருப்பமான கார் பிராண்டு. அதிக எரிபொருள் சிக்கனம், செயல்திறன், டிசைன், இடவசதி என அனைத்திலும் திருப்தியை தரும் மாடல். மாருதியின் நெருக்கமான சர்வீஸ் நெட்வார்க்கும் இந்த காரை வாங்குவதற்கு கூடுதல் காரணமாக இருக்கிறது. 5 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ ஓடிய பெட்ரோல் மாடலை ரூ.3 லட்சம் விலையிலும், 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ ஓடிய டீசல் மாடலை ரூ.3.75 லட்சம் விலையிலும் வாங்கலாம். டீசல் மாடலை வாங்கும்போது, அந்த காரில் இருக்கும் பராமரிப்பு விஷயங்களை மெக்கானிக் மூலமாக தெரிந்துகொண்டு மதிப்பிடவும்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

பழைய கார் வாங்கும்போது, கார் கண்டிஷன், எவ்வளவு கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளது, உரிமையாளர்களின் எண்ணிக்கை, அதில் இருக்கும் வசதிகள், வேரியண்ட் ஆகியவற்றை பொறுத்து விலை மதிப்பிட வேண்டும். எனவே, பழைய கார் வாங்கும்போது அனுபவமிக்க நண்பர்கள் அல்லது மெக்கானிக்குகளை உடன் அழைத்துச் சென்று ஆய்வு செய்து வாங்கவும். அவசரப்படாதீர்கள்.

பழைய கார் வாங்கும்போது...

பழைய கார் வாங்கும்போது...

01.பழைய கார் வாங்கும்போது...

02. யூஸ்டு நானோ கார் வாங்கலாமா...

03. யூஸ்டு மார்க்கெட்டில் 5 சிறந்த செடான்கள்...

04. யூஸ்டு வேகன் ஆர் சாதக, பாதகங்கள்...

 
English summary
If you are out there and looking for a good, reliable used car, which one would it be? This is a list of 10 most reliable used cars from a car dealer’s point of view, that will go easy on your pockets as well.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark