2014 ஃபோர்டு ஃபியஸ்ட்டா செடான் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடும் போட்டி நிலவி வரும் மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் ஃபோர்டு ஃபியஸ்ட்டாவுக்கு குறிபிடத்தக்க இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், டிசைனில் பல மாற்றங்களுடன், கூடுதல் வசதிகள் கொண்ட புதிய ஃபியஸ்ட்டா காரை கடந்த ஜூன் மாதம் ஃபோர்டு கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஃபியஸ்ட்டா மாடலை சமீபத்தில் மும்பையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரில் இருக்கும் சாதக, பாதகங்களை ஸ்லைடரில் பகிர்ந்துகொள்கிறோம்.


 1. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

1. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் புதிய ஃபியஸ்ட்டா காரின் சிறப்பம்சங்கள், பாதகங்கள் உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 2. டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

2. டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

மாடல்: 2014 ஃபோர்டு ஃபியஸ்ட்டா

வேரியண்ட்: டைட்டானியம்

எரிபொருள் வகை: டீசல்

எஞ்சின்: 1.5 லிட்டர் டிடிசிஐ

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல்

இடம்: மும்பை

விலை: ரூ.11 லட்சம் (ஆன்ரோடு, மும்பை)

 3. தோற்றம்

3. தோற்றம்

அஸ்டன் மார்ட்டின் ஸ்டைலிலான முகப்பு கிரில், அதில் குரோம் பூச்சு சட்டங்கள், வைண்ட்ஷீல்டு நோக்கி சீறிச் செல்லும் பானட் லைன்கள் என கவர்கிறது. முகப்பு குறுகலாக தெரிவது காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

4. பக்கவாட்டுத் தோற்றம்

4. பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது, முன்னோக்கி சீறுவது போன்ற தோற்ற அமைப்பு கொண்டிருக்கிறது. கைனெடிக் 2.0 டிசைன் என்ற புதிய ஃபோர்டு டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முதல் மற்றும் ஒரே மாடல் ஃபியஸ்ட்டா மட்டும்தான். எதிர்காலத்தில் இந்த கைனெடிக் 2.0 வெர்ஷன் டிசைன் தாத்பரியத்தில்தான் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. டபுள் ஸ்போக் அலாய் வீல்களும் தோற்றத்தை கூட்டுகிறது.

5. பின்புறத் தோற்றம்

5. பின்புறத் தோற்றம்

ஃபியஸ்ட்டாவின் பின்புறம் டிசைன் வெகு அழகானதாக குறிப்பிடலாம். டெயில் லைட், பம்பர் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் எக்ஸ்சாஸ்ட் பைப் காருக்கு கீழே மறைந்துவிட்டது. வெளியில் தெரியாத அளவுக்கு கொடுத்துள்ளனர்.

6. எஞ்சின்

6. எஞ்சின்

பெட்ரோல் மாடல் விற்பனைக்கு இல்லை. டீசலில் மட்டுமே மூன்றுவிதமான வேரிண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த காரில் 90 பிஎச்பி பவரையும், 203 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த டீசல் எஞ்சினை வெகு சாமர்த்தியாக குறைவான டர்போலேக் கொண்டதாக டிசைன் செய்துள்ளனர். மேலும், எஞ்சின் அதிர்வுகளும் குறைவாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

7. டிரான்ஸ்மிஷன்

7. டிரான்ஸ்மிஷன்

பெட்ரோல் மட்டுமின்றி, டீசலிலும் தற்போது இதன் போட்டியாளர்கள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தரும் நிலையில், ஃபியஸ்ட்டா ஆட்டோமேட்டிக் மாடலில் இல்லை என்பது சிறிது ஏமாற்றம் தரலாம். கியர் ஷிப்ட் மென்மையாக இருப்பதுடன் வெகு லாவகமாக ஓட்டுவதற்கு துணை நிற்கிறது. அதேவேளை, கிளட்ச்சுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால், போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது சிரமமாக இருக்கிறது.

8.கையாளுமை

8.கையாளுமை

ஓட்டுனருக்கு குதூகலத்தை அளிக்கும் காராக ஃபியஸ்ட்டாவை குறிப்பிடலாம். இதன் ஸ்டீயரிங் லைட்டாக இருந்தாலும் ஃபீட்பேக் நன்றாக இருக்கிறது. இதனால், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து நெரிசலில் எளிதாக கையாள முடிகிறது. நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும்போது நம்பிக்கையாக இருக்கிறது ஸ்டீயரிங் ஃபீட்பேக். இந்த கார் கையாளுமையில் சிறப்பாக இருப்பதால், நகர்ப்புறம், நெடுஞ்சாலை என ரண்டிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவான மிட்சைஸ் கார். கியர் ஷிப்ட் வேகத்துக்கு ஏற்ப உடனடி பவர் வெளிப்பாடு இருப்பதும் நம்பிக்கையாக ஓவர்டேக் செய்ய முடிகிறது.

9. மைலேஜ்

9. மைலேஜ்

அராய் அளித்த சான்றின்படி லிட்டருக்கு 25.01 கிமீ தூரம் செல்லும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புற சாலைகள், நெடுஞ்சாலை மற்றும் மலைப்பாங்கான சாலை என அனைத்திலும் வைத்து சோதனை செய்தததில் லிட்டருக்கு சராசரியாக 12.5 கிமீ மைலேஜ் தருகிறது. டெஸட் டிரைவ் முழுவதும் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் இந்த மைலேஜ் கிடைத்தது.

10. கேபின்

10. கேபின்

முந்தைய மாடலில் இருந்த அதே மாதிரியான டேஷ்போர்டுதான். ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் டேஷ்போர்டுக்கும், இதற்கும் வித்தியாசமில்லை. சாம்பல் மற்றும் பீஜ் வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் அதிக இடவசதி இருப்பது போன்ற உணர்வை டேஷ்போர்டு டிசைன் தருகிறது. ஸ்பீடோமீட்டரில் எண்கள் பெரிதாக இருப்பதால் எளிதாகவும், தெளிவாகவும் பார்க்க முடிகிறது. மேலும், கண்களுக்கு கூச்சம் தராத வண்ணத்திலான பேக்லிட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 11. பின்புற இருக்கைகள்

11. பின்புற இருக்கைகள்

பின்புற இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. ஆனால், ஃபியஸ்ட்டாவை வாடிக்கையாளர்கள் விரும்பாததற்கு முக்கிய காரணம், ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் பிரச்னை. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது பின்புறத்தில் நெருக்கடியான உணர்வை தருகிறது. அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஹெட்ரெஸ்ட் மற்றும் இரண்டு சிறிய பாட்டில் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றுமொரு குறையையும் பின்புறத்தில் கூற வேண்டும். இந்த காரின் பின்புற வடிவமைப்பால், உள்பக்கத்தில் ரியர் வியூ மிரரில் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க இயலவில்லை.

 12. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

12. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

ஃபோர்டு கார்களில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயங்களில் ஒன்று என்பதில் ஃபியஸ்ட்டாவும் விலக்கல்ல. எளிமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது. ஸ்பீடோமீட்டர் பெரிய டயலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீல நிற முள் மூலம் வேகத்தை காட்டுவதால் இரவிலும் எளிதாக பார்க்க முடியும். டைட்டானியம் வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.

பிடித்த விஷயம்- 1

பிடித்த விஷயம்- 1

செடான் காரை விரும்புவதற்கு லக்கேஜ் இடவசதியும் ஒரு காரணம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தோற்றத்தில் சிறியதாக தெரிந்தாலும், சிறப்பான லக்கேஜ் இடவசதியை கொண்டுள்ளது. 430 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் ஒரு குடும்பத்தினருக்கு தேவையான லக்கேஜ்களை எளிதாக வைத்து எடுத்துச் செல்லலாம். இரண்டு நடுத்தர அளவு கொண்ட டிராலி சூட்கேஸ்கள் மற்றும் சில இதர பைகளையும் வைத்து எடுத்துச் செல்லமுடியும்.

பிடித்த விஷயம் - 2

பிடித்த விஷயம் - 2

இது ஓட்டுனருக்கு உன்னதமான மாடல் என்று ஏற்கனவே குறிப்பிட்டோம் அல்லவா. அதற்கு மற்றொரு காரணம் சிறப்பான இருக்கை வசதி. இருக்கையில் அமர்ந்தவுடன் சிறப்பான இருக்கை அமைப்பு உணர்வை தருகிறது.

 பிடித்த விஷயம் - 3

பிடித்த விஷயம் - 3

ஃபியஸ்ட்டா காரின் 15 இஞ்ச் அலாய் வீல் டிசைன் மிக கவர்ச்சியாக இருக்கிறது. காரின் தோற்றத்திற்கு இந்த அலாய் வீல்கள் நிச்சயம் கூடுதல் மதிப்பாக கூறலாம். மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 195/60 R15 குட்இயர் டயர்கள் காரை ஓட்டும்போது மிகச்சிறந்த பிடிமானம் கொண்டதாக உணர்த்துகிறது. இந்த டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 பிடிக்காத விஷயம் - 1

பிடிக்காத விஷயம் - 1

பல பிடித்த விஷயங்கள் இருந்தாலும், சில பிடிக்காத விஷயங்களை பகிர்ந்துகொள்வது அவசியம். அந்த வகையில், இந்த காரின் ஸ்டீயரிங் வீல் பிடிக்காத விஷயங்களி்ல ஒன்று. ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாக இருந்தாலும், குறைந்த விட்டமுடைய இந்த சிறிய ஸ்டீயரிங் வீல் பிடிக்காத விஷயமாக இருக்கிறது.

பிடிக்காத விஷயம் - 2

பிடிக்காத விஷயம் - 2

பானட்டை திறப்பதற்கான லேட்ச் லிவரை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. இதனை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன், பிடியை திறப்பதும் கடினமாக தெரிகிறது.

பிடிக்காத விஷயம் - 3

பிடிக்காத விஷயம் - 3

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு உள்பக்கத்தில் இருக்கும் ரியர் வியூ கண்ணாடியின் பங்கு மிக அதிகம். ஆனால், இந்த காரின் பின்புற இருக்கை மற்றும் வைன்ட்ஷீல்டு அமைப்பு தெளிவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத வகையில் இருக்கிறது. மூன்று பேர் அமர்ந்தால் நிச்சயம் மிக கடினமாக இருக்கும்.

பிடிக்காத விஷயம் - 4

பிடிக்காத விஷயம் - 4

புதிய ஃபியஸ்ட்டா மாடலின் பிரேக் செயல்திறன் திருப்திகரமாக இல்லை. அவசரமாக நிறுத்த வேண்டிய சமயத்தில் காலை வாரிவிடுகிறது. இதனால், வேகமாக செல்லும்போது பிரேக் மனதில் வந்து நின்று கொள்வதால் நம்பிக்கையுடன் செலுத்துவதற்கு கடினமாக இருக்கிறது. இந்த குறையை ஃபோர்டு உடனடியாக செய்தால் நன்றாக இருக்கும்.

ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம்

ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம்

ஈக்கோஸ்போர்ட் போன்று இந்த புதிய ஃபியஸ்ட்டா மாடலிலும் ஃபோர்டு Sync தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல்போன் அழைப்புகளை பெறுவது, மியூசிக் சிஸ்ட்டத்தை வாய்மொழி உத்தரவுகள் மூலம் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தரும். அவசர சமயத்திலும் இந்த புதிய சிங்க் தொழில்நுட்பம் உதவும்.

20. போட்டியாளர்கள்

20. போட்டியாளர்கள்

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது விலை குறைவான மாடல். சிறப்பான டிசைன், எஞ்சின், வசதிகள் போன்றவை ஃபியஸ்ட்டாவின் ப்ளஸ்களாக கூறலாம். ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிறது. தோற்றத்தில் சிறியதாக தெரிவதும், உட்புற இடவசதியும் வாடிக்கையாளர்களை கவராத அம்சங்களாக இருக்கின்றன.

21. சுவாரஸ்ய உண்மை

21. சுவாரஸ்ய உண்மை

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்திலிருந்து வந்து ஃபோர்டு நிறுவனத்தின் புதிய தலைமை டிசைனர் பொறுப்பேற்றிருக்கும் எகாப் கவுத் தலைமையில் உருவான இந்த புதிய மாடல் நிச்சயம் டிசைனில் குறை சொல்ல முடியாத மாடல்தான். அதன் தாக்கமாகவே அஸ்டன் மார்ட்டின் ஸ்டைலிலான கிரில் இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது. ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டிசைனிலும் எகாப் கவுத் முக்கிய பங்காற்றியுள்ளார். புதிய ஃபிகோ மற்றும் ஃபிகோ செடான் ஆகியவையும் புதிய டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு வர இருக்கின்றன.

22. இது இருந்தால்...

22. இது இருந்தால்...

ஒட்டுமொத்த மிட்சைஸ் செடான் செக்மென்ட்டில் சிறப்பான எஞ்சின் கொண்ட மாடல் ஃபியஸ்ட்டா. சாதகங்களும், பாதகங்களும் கலந்து நிற்கும் இந்த காரில் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடலையும், ஆட்டோமேட்டிக் மாடலையும் கொண்டு வந்தால் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்களாக தெரியும்.

முற்றும்.

Most Read Articles
English summary
Ford Fiesta diesel sedan review: Analysis of the Ford Fiesta sedan diesel, prices, mileage, features, & more via DriveSpark Expert review section.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X