மாற்றான்... புதிய ஃபோர்டு ஃபிகோ டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

கடந்த 5 ஆண்டுளில் இந்திய கார் வாடிக்கையாளர்களின் மனோபாவம் வெகுவாக மாறிவிட்டது. அதனை சரியாக புரிந்து கொண்டு தக்க சமயத்தில் புதிய தலைமுறை ஃபிகோ காரை ஃபோர்டு கார் நிறுவனம் சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பையும், இந்திய கார் மார்க்கெட்டின் வெற்றிகரமான ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையையும் பெற்ற முந்தைய ஃபிகோ பிராண்டை புதிய கோணத்தில் வாடிக்கையாளர்களிடத்தில் சேர்ப்பிக்க இந்த புதிய ஃபிகோ கார் மூலமாக ஃபோர்டு முனைந்திருக்கிறது.

டிசைன், வசதிகள், எஞ்சின், விலை என எல்லாவற்றிலும் மிகச்சிறப்பான மாடலாக வந்திருக்கும் இரண்டாம் தலைமுறை கண்டிருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் நிச்சயம் மாற்றத்தை விரும்புவோர்க்கான மாடலாக இருக்கும். இந்த புதிய காரை டெல்லியிலிருந்து ஆக்ரா வரையில் வைத்து சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், கிடைத்த அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

முன்பக்க டிசைன்

முன்பக்க டிசைன்

பழைய மாடல் அழகான ஹேட்ச்பேக் என்ற பெருமைக்குரியது. ஆனால், பழைய மாடலுக்கும், புதிய மாடலுக்கும் டிசைனில் துளி கூட சம்பந்தம் இல்லை. புதிய மாடல் எளிமையான, நாகரீகமான தோற்றத்தை கொண்டுள்ளது. ஃபோர்டு ஆஸ்பயர் செடான் காரின் ஹேட்ச்பேக் மாடல் என்பதால், தோற்றத்தில் வேறுபாடுகள் குறைவு. பின்புறத்தை தவிர்த்து. முகப்பில் அஸ்டன் மார்ட்டின் கார்களின் தோற்றத்தை க்ரில் அமைப்பு காருக்கு கூடுதல் வசீகரித்தை தருகிறது. ஹெட்லைட் கவர்ச்சி தருகிறது.

பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டுத் தோற்றம்

கச்சிதமான பக்கவாட்டு தோற்றம். கருப்பு நிற பி பில்லர். ஃபோர்டு கார்களுக்கே உரிய தனித்துவமான ஸ்போக் டிசைன் கொண்ட 14 இன்ச் அலாய் வீல்கள் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன. கைப்பிடிகள் பாடி லைனிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்புறத்தில் கூரை தாழ்வாகவும், சி பில்லர் முன்னோக்கி சரிவாகவும் டிசைன் செய்யப்பட்டிருப்பது பக்கவாட்டு அழகுக்கு அழகு சேர்க்கிறது.

 பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

ரூஃப் ஸ்பாய்லர், டெயில் லைட் க்ளஸ்ட்டர் பின்புறத் தோற்றத்தின் கவர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. ஆனால், பின்புற டிசைன் மிக எளிமையாக இருப்பதன் காரணமாக, அனைவரையும் கவர்ந்துவிடாது. ஒட்டுமொத்த டிசைனில் கச்சாமுச்சா என்றில்லாமல் எளிமையாகவும், நாகரீகமாகவும் இருக்கிறது.

உள்பக்க வடிவமைப்பு, அம்சங்கள்

உள்பக்க வடிவமைப்பு, அம்சங்கள்

புதிய ஃபோர்டு ஃபிகோ காருக்குள் நுழைந்தவுடன் ஆஸ்பயர் செடானை நினைவுப்படுத்தியது. ஆனால், ஃபோர்டு ஆஸ்பயர் இரட்டை வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ஃபிகோ காரில் கருப்பு நிற இன்டிரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அலுமினிய ஃபினிஷிங்குடன் கூடிய ஆஸ்பயர் சென்டர் கன்சோல் அமைப்பு அப்படியே இடம்பெற்றிருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றிருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூன்று டயல்களை கொண்டிருப்பதுடன், கார் ஓட்டும்போது எளிதாகவும், தெளிவாகவும் பார்க்க முடிகிறது. பிளாஸ்டிக் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கலாம். இதன் ஏசி மிக விரைவாக குளிர்ச்சியாகிறது. சென்னை போன்ற வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நகரங்களுக்கு இதுபோன்ற ஏசி அவசியம்.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

இந்த செக்மென்ட்டில் அதிக தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மாடலாக கூறலாம். டைட்டானியம் ப்ளஸ் டாப் வேரியண்ட்டில் 4.2 இன்ச் திரையுடன் கூடிய ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம் இணைந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, எலக்ட்ரானிக் பவர் அசிஸ்ட் ஸ்டீயரிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் ஃபோர்டு மைகீ என்ற ஸ்மார்ட் சாவி மூலமாக சீட் பெல்ட் எச்சரிக்கும் வசதி, ஆடியோ சிஸ்டத்தின் சப்த அளவு மற்றும் காரின் அதிகபட்ச வேகத்தை நிர்ணயம் செய்யும் வசதிகளை பெற முடிகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 87 பிஎச்பி பவர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 110 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வந்துள்ளது. பழைய 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மாற்றாக, புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்திருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் அளிக்கிறது. டர்போ- லேக் அதிக தெரியாமல், ஓர் பெட்ரோல் காரை ஓட்டுவதை போன்ற உணர்வை அளிக்கிறது. 1,600 ஆர்பிஎம்., தாண்டும்போது இந்த எஞ்சினின் பவர் டெலிவிரி மிக சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மிட் ரேஞ்ச், டாப் ரேஞ்ச் என இரண்டிலும் இந்த எஞ்சின் மிகச்சிறப்பான பவரை வெளிப்படுத்துவதை உணர முடிந்தது. 70 கிமீ வேகத்தில் ஐந்தாவது கியரில் செல்லும்போதுகூட வேகத்தை குறைத்து, கூட்டும்போது கியரை மாற்ற அவசியமில்லாத உணர்வை இந்த எஞ்சின் தருகிறது. நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிற்கும் சிறப்பாக டியூன் செய்துள்ளனர்.

ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடலில் கியர் நாப் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு, பிடிப்பதற்கு மிக சிறப்பாக இருக்கிறது. அத்துடன், கியர் ஷிஃப்ட் மிக மென்மையாக இருக்கிறது. ஆனால், 110 பிஎச்பி பவரை அளிக்கும் இதன் எஞ்சின், செயல்திறனில் எதிர்பார்த்த அளவு இல்லை. அதேநேரத்தில், அதன் அலாதியான புகைப்போக்கி குழாய் சப்தம் அருமை. இந்த மூன்று எஞ்சின் ஆப்ஷன்களில் 1.5 லிட்டர் கொண்ட டீசல் எஞ்சின் மாடல் மிகவும் கவர்ந்தது.

ஓட்டுதல் அனுபவம்

ஓட்டுதல் அனுபவம்

முன்புற இருக்கை, ஸ்டீயரிங் அமைப்பு, டேஷ்போர்டு, விண்ட்ஷீல்டு ஆகியவற்றின் டிசைன் போதிய பார்வையை வழங்குகிறது. முன் இருக்கை சற்று நெருக்கடியான உணர்வை தருவதே குறையாக இருக்கிறது. குறிப்பாக, க்ளட்ச் மிக துல்லியமாக இருப்பதும், கார் அடக்கமாக இருப்பது போன்ற உணர்வை தருவதும், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருப்பதுடன், கால்களுக்கும் அதிக சோர்வை தரவில்லை.

மைலேஜ்

மைலேஜ்

நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையில் ஏசி.,யுடன் பயணிக்கும்போது புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜை தந்தது. 1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 12.4 கிமீ மைலேஜை வழங்கியது.

 கேபின் நாய்ஸ்

கேபின் நாய்ஸ்

டீசல் மாடலில் 120 கிமீ வேகத்தை தாண்டும்போது, சிறிய அளவிலான சப்தம் காருக்குள் கேட்கிறது. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிக்கும்போது சில இடங்களில் மட்டும் இந்த சப்தத்தை கேட்க முடிந்தது.

 புதிய ஸ்டீயரிங் சிஸ்டம்

புதிய ஸ்டீயரிங் சிஸ்டம்

பழைய மாடலில் ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் இருந்த நிலையில், புதிய மாடலில் இருக்கும் எலக்ட்ரானிக் பவர் அசிஸ்ட் ஸ்டீயரிங் சற்று ஏமாற்றத்தை தருகிறது. அதிவேகத்தில் பயணிக்கும்போது, போதிய நம்பிக்கையை இந்த ஸ்டீயரிங் வழங்கவில்லை.

கையாளுமை

கையாளுமை

வழக்கமாக சில ஃபோர்டு கார்களில் இருக்கும் 'தி பெஸ்ட்' கையாளுமையை இந்த காரில் உணர முடியவில்லை. இருப்பினும், இதன் ரக கார்களில் நல்ல கையாளுமையை உணர வைக்கும் மாடல்களில் ஒன்றாகவே கூறலாம். இதன் சஸ்பென்ஷன் அமைப்பு மோசமான சாலைகளில் குலுங்கல்கள் மற்றும் அதிர்வுகள் குறைவாக, மிகச்சிறப்பான பயண அனுபவத்தை வழங்குகிறது.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

சஸ்பென்ஷன் அமைப்பு, ஸ்டீயரிங் மற்றும் க்ளட்ச் ஆகியவற்றின் செயல்பாடுகள் நகர்ப்புறத்தில் அதிகம் பயன்படுத்துவதற்கான காராகவே மனதில் வைத்து ஃபோர்டு எஞ்சினியர்கள் உருவாக்கியுள்ளனர். பழைய ஃபோர்டு ஃபிகோ காரை ஓட்டும்போது, வேகத்தடையை பார்த்தவுடன் அச்சம் பிடிக்கும். இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தரையிலிருந்து காரின் உயரம் அதிகம் இருப்பதும், கையாளுமையில் சிறிது குறைபாடு தெரிவதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புற சக்கரங்களில் டிரம் பிரேக்குளும் கொடுக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் இருக்கிறது. எனவே, அதிவேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தாலும் நம்பிக்கையான உணர்வை தருகிறது.

முன் இருக்கைகள்

முன் இருக்கைகள்

ஃபோர்டு ஆஸ்பயர் போன்றே புதிய ஃபிகோவும் 2,491மிமீ வீல் பேஸ் கொண்டது. மாருதி ஸ்விஃப்ட் 2,430மிமீ வீல் பேஸும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 2,425மிமீ வீல் பேஸ் கொண்டவை. ஆனால், 2,491மிமீ வீல் பேஸ் கொண்ட புதிதய ஃபிகோ மிக சிறப்பான இடவசதியை அளிக்கிறது. அதேவேளை, முன் இருக்கைகள் சற்று நெருக்கடியான உணர்வை தருகிறது. முன்பக்கம் சக பயணி இருகக்கை சற்று உயரமாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.

பின் இருக்கைகள்

பின் இருக்கைகள்

பின்புற இருக்கைகள் அதிக சாய்மானம் கொண்டதாக சொகுசாக இருக்கின்றன. சராசரி உயரமானவர்கள் கூரையில் தலை இடிக்காமல் வசதியாக அமர முடிகிறது. முழங்கால் இடித்துக் கொண்டு அமர வேண்டியதில்லை.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பேஸ் மாடலில் டிரைவருக்கான ஏர்பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த வேரியண்ட்டிலிருந்து டியூவல் ஏர்பேக்குகள் உள்ளன. டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரேக் ஆற்றலை நான்கு வீல்களுக்கும் சீராக அனுப்பும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பம், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் டாப் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன. விபத்து ஏற்பட்டால், அவசர உதவி மையத்திற்கு தகவல் தரும் தொழில்நுட்பம், காரின் வேகத்தையும், ஆடியோ சிஸ்டத்தின் சப்த அளவையும் கூட்டிக் குறைக்கும் வசதிகளும் உள்ளன.

பராமரிப்பு திட்டம்

பராமரிப்பு திட்டம்

புதிய ஃபிகோ காருக்கு, மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் பேக்கேஜ் திட்டத்தையும் ஃபோர்டு அளிக்கிறது. இதன்மூலம், போட்டியாளர்களைவிட 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்ட காராக ஃபோர்டு தெரிவிக்கிறது. போட்டி மாடல்கள் 5,000 கிமீ தூரத்துக்கு ஒருமுறை சர்வீஸ் இடைவெளி கொண்டிருக்கையில், புதிய ஃபோர்டு ஃபிகோ காருக்கு 10,000 கிமீ தூரத்துக்கு ஒருமுறை சர்வீஸ் இடைவெளி கொடுக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப விபரங்களின் சாரம்சம்

தொழில்நுட்ப விபரங்களின் சாரம்சம்

புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காரின் தொழில்நுட்ப விபரங்களின் சாரம்சம்!

தர மதிப்பீடு

தர மதிப்பீடு

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் தர மதிப்பீடு!

பரிந்துரை

பரிந்துரை

மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்களுக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ஃபிகோ வந்துள்ளது. செயல்திறன் மிக்க சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள், அதிக பாதுகாப்பு வசதிகளில் போட்டியாளர்களிலிருந்து வித்தியாசப்பட்டு மாற்றானாக வந்துள்ளது. விலையிலும் வாடிக்கையாளர்களை கவர்வதாக உள்ளது. பிளாஸ்டிக் தரம், சொகுசு குறைவான முன் இருக்கை போன்ற சில குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தத்தில் ஓர் சிறப்பான பேக்கேஜ் கொண்ட ஹேட்ச்பேக். எனவே, உங்களது புதிய கார் பட்டியலில் நிச்சயம் புதிய ஃபோர்டு ஃபிகோவையும் சேர்த்துக் கொள்ளலாம். ஷோரூம் சென்று டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தால் நீங்களும் நிச்சயமாக ஃபிகோவுக்கு மாற வாய்ப்புகள் அதிகம்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ் அனுபவம்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ் அனுபவம்!

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா

ஜோபோ ஃபேஸ்புக் பக்கம்

ஜோபோ டுவிட்டர் பக்கம்

தமிழில் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: சரவணராஜன்

 
English summary
Everyone knows the Maruti Suzuki Swift is a dominant player in this segment. However, the first time we saw the new Figo it was enticing and gave us a feeling that Maruti might be in trouble. The 2015 Ford Figo has had considerable changes when compared to the first generation, but does it offer more than what is expected in the segment?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark