புதிய மஹிந்திரா தார் [CRDe] மாடலின் 15 முக்கிய விஷயங்கள்!

By Saravana

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஃப் ரோடு பிரியர்களின் ஆஸ்தான மாடலாக விளங்கும் மஹிந்திரா தார் எஸ்யூவியில் சேர்க்கப்பட்டிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.

சிஆர்டிஇ எஞ்சின் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி மட்டுமே, மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடலில் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் மாறுதல்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும். இந்த புதிய மாடலில் இருக்கும் 15 முக்கிய சிறப்பம்சங்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

01. புதிய பம்பர்

01. புதிய பம்பர்

மஹிந்திரா தார் எஸ்யூவியின் அந்த கம்பீரத்தை கூட்டும் விதத்தில் புதிய முன்பக்க பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புற வீல் ஆர்ச்சுடன் இணைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை அது வழங்குகிறது.

02. புதிய வீல் ஆர்ச்

02. புதிய வீல் ஆர்ச்

மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடலில் வீல் ஆர்ச்சுகளில் புதிய பிளாஸ்டிக் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது கூடுதல் பொலிவுடையதாக காட்டுகிறது. மேலும், சக்கரத்திற்கும், வீல் ஆர்ச்சுக்குமான இடைவெளி போதிய அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஆஃப் ரோடு சாகசங்களுக்கு உதவும்.

03. புதிய சைடு ஃபுட் ஸ்டெப்

03. புதிய சைடு ஃபுட் ஸ்டெப்

குழாய் போன்ற அமைப்புடன் புதிய ஃபுட் ஸ்டெப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிக வலுவானதாக இருக்கிறது.

04. கெனாப்பி கூரை

04. கெனாப்பி கூரை

கெனாப்பி எனப்படும் தற்காலிக கூரையின் வடிவமைப்பு மாற்றப்பட்டு இருக்கிறது. பழைய தார் எஸ்யூவியின் கூரை அமைப்பு அட்டைப் பெட்டி போன்று இருக்கும். ஆனால், புதிய மாடலில் கூரை அமைப்பில் செய்யப்பட்டிருக்கும் மாறுதல்கள் அந்த உணர்வை போக்கியிருக்கிறது.

05. கிளியர் லென்ஸ் ஹெட்லைட்ஸ

05. கிளியர் லென்ஸ் ஹெட்லைட்ஸ

இப்போது கிளியர் லென்ஸ் கொண்ட ஹெட்லைட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. பழைய தார் எஸ்யூவியில் இருந்த ஹெட்லைட், அந்த கால மாடல்களை போன்று தோற்றமளிக்கும். ஆனால், இப்போது கொஞ்சம் நவீன யுகத்துக்கு தகுந்தவாறு இந்த மாற்றம் தெரிகிறது.

06. சக்திவாய்ந்த எஞ்சின்

06. சக்திவாய்ந்த எஞ்சின்

மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடலில் இருக்கும் 2,498சிசி டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் முறுக்கை விசையையும் வழங்கும். தாரின் முக்கிய சிறப்பம்சங்களில் இந்த சக்திவாய்ந்த எஞ்சினும் முக்கியமானது.

07. 4 வீல் டிரைவ் சிஸ்டம்

07. 4 வீல் டிரைவ் சிஸ்டம்

மோசமான தகவமைப்பு கொண்ட சாலைகளிலும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடலின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மிகுந்த உறுதுணையாக இருக்கும். மேலும், 44 டிகிரி சரிவான சாலையில் மேல்நோக்கியும், 27 டிகிரி சரிவான நிலையில் கீழ்நோக்கியும் செல்ல முடியும். மேலும், இதன் 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரை இடைவெளியும், தங்கு, தடையற்ற ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும்.

08. டேஷ்போர்டு

08. டேஷ்போர்டு

பீஜ் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலான இரட்டை வண்ண டேஷ்போர்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மஹிந்திரா தார் எஸ்யூவியின் உள்பக்கத்தை கொஞ்சம் பிரிமியமாக காட்டுகிறது.

09. மீட்டர் கன்சோல்

09. மீட்டர் கன்சோல்

மூன்று டயல்களை கொண்ட புதிய இன்ஸ்ட்ரூமென்ட் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நடுவில் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஓடோமீட்டர் கொண்ட டயல் உள்ளது. இடதுபுறத்தில் எரிபொருள் அளவு மானி, வெப்பமானி உள்ளிட்ட எச்சரிக்கை தகவல்களை பெறும் டயல் உள்ளது. வலது புறத்தில் எஞ்சின் சுழல் வேகத்தை காட்டும் ஆர்பிஎம் மீட்டர் அமைந்துள்ளது.

10. புதிய ஏசி வென்ட்

10. புதிய ஏசி வென்ட்

புதிய மஹிந்திரா தார் சிஆர்டிஇ மாடலில் புதிய வடிவமைப்பிலான ஏசி வென்ட்டுகள் சென்டர் கன்சோலில் இடம்பெற்றிருக்கின்றன. ஏசி வென்ட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியை பிரிமியம் மாடலாக காட்டுகிறது.

11. புதிய ஸ்டீயரிங் வீல்

11. புதிய ஸ்டீயரிங் வீல்

பழைய ஸ்டீயரிங் வீலை பிடுங்கிவிட்டு, பொலிரோவில் உள்ளது போன்ற புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கைகளுக்கு அதிக பிடிப்பை தருவதாக அமைந்துள்ளது.

12. ஃப்ளோர் கன்சோல்

12. ஃப்ளோர் கன்சோல்

முன் இருக்கைகளுக்கு நடுவில் அமையப் பெற்றிருக்கும் ஃப்ளோர் கன்சோலில் இப்போது 2 கப் ஹோல்டர்கள் இடம்பெற்றுள்ளன. முந்தைய மாடலில் இது கிடையாது.

13. 2 டின் மியூசிக் சிஸ்டம் ஸ்லாட்

13. 2 டின் மியூசிக் சிஸ்டம் ஸ்லாட்

இப்போது மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2 டின் மியூசிக் சிஸ்டத்தை பொருத்திக் கொள்வதற்கான ஸ்லாட் சென்டர் கன்சோலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

14. சொகுசான இருக்கைகள்

14. சொகுசான இருக்கைகள்

தற்போது சற்று கூடுதல் அகலம் மற்றும் அதிக சொகுசான பயணத்தை வழங்கும் புதிய இருக்கைகள் உள்ளன. எனவே, இப்போது நீண்ட தூரம் பயணிப்பவருக்குமான மாடலாக தார் மாறியிருக்கிறது.

15. மெக்கானிக்கல் லாக்கிங் ரியர் டிஃபரன்ஷியல்

15. மெக்கானிக்கல் லாக்கிங் ரியர் டிஃபரன்ஷியல்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடலில் இப்போது பின்புற வீல்களுக்கு மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல் சிஸ்டம் உள்ளது. ஆஃப்ரோடின்போது பின் சக்கரங்களில் ஒன்று சிக்கி சுழன்றாலும், மற்றொன்றுக்கு அதிகப்படியான பவரை செலுத்தும் இந்த புதிய டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம் ஆஃப்ரோடு செல்வோர்க்கு தடையில்லா பயணத்தை வழங்க உத்தரவாதம் தரும்.

Most Read Articles
English summary
Here are 15 stand out features of the 2015 Mahindra Thar CRDe:
Story first published: Thursday, July 23, 2015, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X