மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

Written By:

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மார்ச் 8-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது. மாருதி நிறுவனம், இந்த காம்பேக்ட் எஸ்யூவி தடத்தில் தாமதமாக பிரவேசம் செய்திருக்கலாம். ஆனால், இந்த தடத்தில் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி காரை நீங்கள் சரியான தேர்வாக நினைக்கிறீர்களா?

வாருங்கள், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அனுகூலங்கள், குறைபாடுகள் குறித்த முழுமையான விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தான், மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபடும் 4-மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட முதல் எஸ்யூவி ஆகும்.

குறைபாடுகள் - இஞ்ஜின்;

குறைபாடுகள் - இஞ்ஜின்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டீசல் இஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது, பெட்ரோல் இஞ்ஜின் தேர்வில் கிடைப்பதில்லை. இதனால், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் வழங்கபடும் வாய்ப்புகள் இல்லை.

பெட்ரோல் மாடல்கள் வருங்காலத்தில் அறிமுகம் செய்யபடும் என அறிவிக்கபட்டாலும், ஆட்டோமேட்டிக் எஸ்யூவி மட்டுமே நாடும் வாடிக்கையாளர்கள், தற்போது கிடைக்கும் மாடலை விரும்புவார்களா என கூற முடியாது.

டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டும்...

டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டும்...

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியில் வழங்கபடும் அனைத்து அம்சங்களும் டாப் எண்ட் வேரியண்ட்களில் (இசட்டிஐ மற்றும் இசட்டிஐ+) மட்டுமே வழங்கபடுகிறது. நுழைவு நிலை வேரியண்ட்களில் நிறைய அம்சங்கள் வழங்கபடுவதில்லை.

விலை குறைவான மாடலான மாருதி பலேனோவில் வழங்கபடும் அம்சங்கள் கூட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வழங்கபடுவதில்லை.

இல்லாதவை;

இல்லாதவை;

குறிப்பாக கூற வேண்டும் என்றால், பலேனோ மாடலில் காணப்படும் பை-க்ஸெனான் விளக்குகள், விட்டாரா பிரெஸ்ஸாவில் வழங்கபடவில்லை.

மேலும், விலை குறைவான பலேனோ மாடலில் வழங்கபட்டுள்ள டெலஸ்கோப்பிக் ஸ்டியரிங் வீல், ஆட்டோ டிம்மிங் ஸ்டியரிங் ஐவிஆர்எம், லெதர் ஸ்டியரிங் ஆகிய அம்சங்கள், விட்டாரா பிரெஸ்ஸாவில் வழங்கபடவில்லை.

பிற குறைகள்;

பிற குறைகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் மிக முக்கியமான அம்சமாக விளங்கும் ட்யூவல் டோன் வண்ணங்களின் தேர்வு, பிரெஸ்ஸாவின் டாப் எண்ட் வேரியண்ட்டான இசட்டிஐ+ மாடலுக்கு மட்டுமே வழங்கபட்டுள்ளது.

எஸ்-கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா, ஒரே விதமான இஞ்ஜின் விவரகுறிப்புகளை பகிர்ந்து கொள்கிறது. ஆனால், எஸ்-கிராஸ் மாடலுக்கு வழங்கபட்டுள்ள 4 டிஸ்க் பிரேக்குகள், விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வழங்கபடவில்லை.

கேபின் அமைப்பு;

கேபின் அமைப்பு;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் கேபின் அமைப்பு, பயனருக்கு இணக்கமான வகையில் நன்கு வடிவமைக்கபட்டுள்ளது.

ஆனால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலுடன் ஓப்பிடுகையில், இது அவ்வளவு சிறப்பானதாக விளங்குகிறது என கூறுவதற்கு இல்லை.

லெதர் சீட்கள்;

லெதர் சீட்கள்;

மற்றொரு குறைபாடான விஷயம் லெதர் சீட்கள் ஆகும். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களில் லெதர் சீட்கள் வழங்கபட்டுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் எந்த வேரியண்ட்களிலுமே லெதர் சீட்கள் வழங்கபடவில்லை.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, 328 லிட்டர் என்ற அளவிலான பூட் ஸ்பேஸ் மட்டுமே கொண்டுள்ளது. இதன் செக்மண்ட்டிலேயே, விட்டாரா பிரெஸ்ஸா தான் மிக குறைந்த பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

குறைந்த அளவிலான பூட் ஸ்பேஸ் உங்களின் பயண தேவைகளுக்கு பிரச்னையாக இருக்கலாம்.

அனுகூலங்கள் - தோற்றம்;

அனுகூலங்கள் - தோற்றம்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி முக்கியமான அனுகூலமே, இதன் வெளிப்புற தோற்றமாக உள்ளது. இதன் வெளிப்புற தோற்றம் அற்புதமாக உள்ளது. இதன் வடிவமைப்பு மொழி, சரியான அளவு விகிதம் கொண்டதாக உள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஊதிப் பெருத்த காம்பேக்ட் கார் போல் அல்லாமல், எஸ்யூவி போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

விலை;

விலை;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, இதன் செக்மண்ட்டிலேயே சிறந்த முறையில் விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

ட்யூவல் டோன்;

ட்யூவல் டோன்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிரத்யேகமான ட்யூவல் டோன் நிற தேர்வுகள் கொண்டுள்ளது. இதனால், இது காம்பேக்ட் காரை காட்டிலும் எஸ்யூவி போன்றே காட்சி அளிக்கிறது.

கேபின்;

கேபின்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கேபின் அமைப்பு நன்கு வடிவமைக்கபட்டுள்ளது. இது ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவில் கச்சிதமாக உள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏராளமான பாதுக்காப்பு வசதிகள் உள்ளது. இதில் டிரைவர் ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாகவும், பயணியர் ஏர்பேக்குகள் தேர்வு முறையிலும் வழங்கபடுகிறது.

மேலும் இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிப்யூஷன் உடைய ஏபிஎஸ் எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிப்யூஷன் ஆகிய வசதிகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கபட்டுள்ளது. இதன் செக்மண்ட்டிலேயே, இது சிறந்த விஷயமாக கருதப்படுகிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்;

தொழில்நுட்ப அம்சங்கள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அனைத்து வேரியண்ட்களிலும், எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ர் செய்யகூடிய ஓஅர்விஎம்கள் வழங்கபட்டுள்ளது.

மேலும், இது புளுடூத் இணைப்பு மட்டும் 4 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் பேஸ் வேரியண்ட்களில் இருந்தே வழங்கபடுகிறது.

ஹெட்லேம்ப்கள்;

ஹெட்லேம்ப்கள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டாப் எண்ட் வேரியண்ட்டில், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளன. இந்த புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பிரெஸ்ஸாவின் போட்டி மாடல்களான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி 300 ஆகிய எந்த மாடல்களிலுமே இல்லை.

முக்கிய அம்சங்கள், விவர குறிப்புகள் - அம்சங்களின் குவியல்;

முக்கிய அம்சங்கள், விவர குறிப்புகள் - அம்சங்களின் குவியல்;

சப்-4 காம்பேக்ட் எஸ்யூவியான மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டாப் எண்ட் வேரியண்ட் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டாப் எண்ட் வேரியண்ட்டில், ட்யூவல் டோன் நிறங்கள், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாக டிரைவர் ஏர்பேக்குகள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளன.

இவை எல்லாவற்றையும் தாண்டி, எஸ்யூவியின் டிசைன் கொண்டுள்ளது. இது, இதன் செக்மண்ட்டிலேயே சிறந்த விஷயமாக உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் பிரத்யேக அம்சங்களை தாண்டி, இது ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை உணரும் வைப்பர்கள் (ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்), கீ லெஸ் எண்ட்ரி (சாவி இல்லாத நுழைவு) வசதிகள் உள்ளது.

மேலும், இதில் புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆப்பிள் கார் பிளே உடைய இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வெரும் டீசல் இஞ்ஜின் மட்டுமே கொண்டுள்ளது. இதில், 4-சிலிண்டர்கள் உடைய 1.3 லிட்டர் டிடிஐஎஸ் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 4000 ஆர்பிஎம்களில் 89 பிஹெச்பியையும், 1750 ஆர்பிஎம்களில் 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, 48 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்பு வழங்கிய ஒப்புதல் படி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஒரு லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு இணக்கமாக உள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா குறைகளை மறைத்துவிடும் அளவிற்கு, இது ஏராளமான அனுகூலங்களை கொண்டுள்ளது.

இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, ஏராளமான பாதுகாப்பு வசதி மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி 300 ஆகிய மாடல்கள் முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

வேரியண்ட் - விட்டாரா பிரெஸ்ஸா எல்டிஐ

மெட்டால்லிக் - 6,99,000 ரூபாய்

ட்யூவல் டோன் - பொருந்தாத தேர்வு

வேரியண்ட் - விட்டாரா பிரெஸ்ஸா எல்டிஐ (ஓ)

மெட்டால்லிக் - 7,12,000 ரூபாய்

ட்யூவல் டோன் - பொருந்தாத தேர்வு

வேரியண்ட் - விட்டாரா பிரெஸ்ஸா விடிஐ

மெட்டால்லிக் - 7,62,000 ரூபாய்

ட்யூவல் டோன் - பொருந்தாத தேர்வு

குறிப்பு ; அனைத்து விலை விவரங்கள் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

வேரியண்ட் - விட்டாரா பிரெஸ்ஸா விடிஐ (ஓ)

மெட்டால்லிக் - 7,75,001 ரூபாய்

ட்யூவல் டோன் - பொருந்தாத தேர்வு

வேரியண்ட் - விட்டாரா பிரெஸ்ஸா இசட்டிஐ

மெட்டால்லிக் - 8,55,001 ரூபாய்

ட்யூவல் டோன் - பொருந்தாத தேர்வு

வேரியண்ட் - விட்டாரா பிரெஸ்ஸா இசட்டிஐ+

மெட்டால்லிக் - 9,54,000 ரூபாய்

ட்யூவல் டோன் - 9,68,000 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்கள் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது- முழு விபரம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலம், 6 மாதங்களாக உயர்வு

விட்டாரா பிரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Maruti Vitara Brezza was launched on 8th March. Vitara Brezza comes only with diesel engine. There are no petrol engine options and hence, there is no automatic transmission option. This has lots of advantages and disadvantages. As per ARAI, Maruti Vitara Brezza gives mileage of 24.3 km/l. To know more about Maruti Vitara Brezza compact SUV, check here...
Story first published: Tuesday, April 19, 2016, 16:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark