புதிய டொயோட்டா இன்னோவா காரை பழைய மாடலிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள்!

By Saravana

நீண்ட தூர பயணங்களுக்கு சரியான கார் மாடலாக டொயோட்டா இன்னோவா இந்தியர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்னோவாவிற்கு சரியான போட்டி மாடல் இல்லை என்றே கூறலாம்.

தனிநபர் பயன்பாடு மற்றும் டாக்சி மார்க்கெட் என இரண்டிலும் வெற்றிகரமான இந்தியாவின் ஒரே மாடல் இன்னோவாதான் என்றால் மிகையில்லை. இந்த நிலையில், சொகுசான பயணங்களுக்கான சிறப்பான மாடலாக இருக்கும் இன்னோவாவில் பல மாற்றங்களையும், கூடுதல் வசதிகளை சேர்த்து புதிய தலைமுறை மாடலாக டொயோட்டா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது விற்பனையிலிருக்கும் மாடலிலிருந்து புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரை வேறுபடுத்தும் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

புதிய மாடல்- பழைய மாடல்

நீளம்:4,735மிமீ - 4,585மிமீ

அகலம்: 1,830மிமீ - 1,765மிமீ

உயரம்: 1,795மிமீ - 1,760மிமீ

வீல்பேஸ்:2,750மிமீ - 2,750மிமீ

டிசைன்

டிசைன்

தற்போதைய மாடலைவிட மிகவும் நேர்த்தியாக மாற்றப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் இரட்டை க்ரோம் க்ரில்களும், ஹெட்லைட்டுகளும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பம்பர், ஹெட்லைட்டுகளும் முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறியிருக்கின்றன. தற்போதைய மாடலைவிட காற்றியக்கவியல் தத்துவத்தை மிகுதியாக கொண்டதாக இருப்பதால், முக அமைப்பு பொலிவாக இருக்கிறது. அத்துடன், ஹாலஜன் பல்புகளுக்கு பதிலாக, புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் எல்இடி பகல்நேர விளக்குகளும் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சமாக கூறலாம்.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பழைய மாடலைவிட புதிய இன்னோவா சற்று நீளமாக இருக்கிறது. ஆனால், வீல் பேஸ் ஒன்றுதான். பாடி லைன் மென்மையாகவும், எளிமையாகவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், புதிய வீல் ஆர்ச்சுகளின் டிசைன் காரின் பக்கவாட்டுத் தோற்றத்திற்கு கம்பீரத்தை தருகிறது. தற்போதைய மாடலைவிட பக்கவாட்டில் முக்கிய மாற்றமாக, காரின் கடைசி ஜன்னல் பகுதியில் தலைகீழ் முக்கோண வடிவிலான கண்ணாடி கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய அலாய் வீல்களும் இன்னோவாவுக்கு கூடுதல் பொலிவு தந்துள்ளது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தை பார்த்தவுடனே குறிப்பிட்டு கூற வேண்டிய மாற்றம் டெயில் லைட் க்ளஸ்ட்டர்தான். தற்போதைய மாடலில் செங்குத்தாக இருக்கும் டெயில் லைட் க்ளஸ்ட்டரை எடுத்துவிட்டு, புதிதாக பக்கவாட்டில் நீளும் க்ளஸ்ட்டர் டிசைன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் சிறப்பாக இருப்பதாகவே கூறலாம். அதற்கு கீழே கூர்மையான கத்தி போன்று, இண்டிகேட்டர் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஒரு வலிமையான தோற்றம் கொண்ட புதிய பம்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எப்போதுமே, பார்த்து ரசித்து வழக்கப்பட்ட ஒரு மாடலில் மாற்றங்கள் செய்திருக்கும்போது, முதல்முறை பார்க்கும்போது டிசைனை கெடுத்துவிட்டார்கள் என்றே சொல்லத் தோன்றும். ஆனால், அதுவே பார்க்க பார்க்க பிடித்துபோய்விடும். அது இந்த இன்னோவாவுக்கும் பொருந்தும்.

புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

தற்போது நம் நாட்டில் 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கக்கூடிய 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய மாடலில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 342 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல சக்திவாய்ந்த டீசல் எஞ்சினுடன் வருகிறது. இதுவே ஆட்டோமேட்டிக் மாடல் 360 என்எம் டார்க்கை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

 இன்டீரியர்

இன்டீரியர்

டேஷ்போர்டு அமைப்பு முற்றிலும் புதியதாக மாற்றப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீல் மற்றும் இருக்கைகளும் புதியது. அத்துடன், மூன்றாவது வரிசை கூடுதல் இடவசதி கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. புதிய லெதர் அப்ஹோல்ஸ்டரியும், மர வேலைப்பாடுகளும் புதிய இன்னோவாவை ஓர் முழுமையான பிரிமியம் மாடலாக மாற்றியிருக்கின்றன.

வசதிகள்

வசதிகள்

தற்போதைய மாடலைவிட பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. புதிய இன்னோவா காரின் பேஸ் மாடலிலும், நடுத்தர வகை மாடலிலும் 7 இன்ச் தொடுதிரையும், டாப் வேரியண்ட்டில் 8 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புற வெப்ப நிலைக்கு தகுந்தவாறு உட்புறத்தில் வெப்பநிலையை தக்க வைக்கும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பாக்கெட்டில் சாவியை வைத்து பட்டனை அழுத்தி காரை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் சாவியுடன் அருகில் வரும்போது கார் கதவுகள் தானாக திறக்கும் கீ லெஸ் என்ட்ரி வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து கண்ணாடிகளும் தானியங்கி முறையில் ஏறி, இறங்கும் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. வாய்மொழி உத்தரவுகள் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது. மனதுக்கு ரம்மியமான பயண அனுபவத்தை வழங்கும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் உண்டு. மொத்தத்தில் வசதிகளை பார்க்கும்போதே, மனதுக்குள் புதிய மாடல் எப்போது வரும் என்ற உத்வேகத்தையும், உந்துதலையும் ஏற்படுத்துகிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

கதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் வசதி, திருடு போவதை தடுக்கும் ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், பின்புறம் காரை நகர்த்தும்போது, பொருட்கள் இருப்பது குறித்து எச்சரிக்கும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி தொழில்நுட்பம், பிரேக் பிடிக்கும்போது காரின் சக்கரங்களின் சுழற்சியில் ஏற்படும் திடீர் தடையால் காரின் பேலன்ஸ் குறையவும், சக்கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரேக் ஷூக்கள் சிக்கிக் கொள்வதையும் தடுக்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இவை ஏற்கனவே இருந்தாலும், புதிய மாடலில் ஓட்டுனர் ஏர்பேக் தவிர்த்து, விபத்துக்களின்போது ஓட்டுனர் முழங்கால் பகுதியை பாதுகாக்கும் ஏர்பேக், பக்கவாட்டு மோதல்களின்போது பயணிகளை பாதுகாக்கும் கர்ட்டெயின் ஏற்பேக் மற்றும் வாகனத்தை நிலைத்தன்மை மாறாமல் செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. மலைப்பாதைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் வசதியும் உள்ளது.

டயர்கள்

டயர்கள்

தற்போதைய மாடலில் 205/65R15 என்ற 15 இன்ச் ரிம் சைஸ் கொண்ட சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், புதிய மாடலில் 215/65-R17 அல்லது 215/65-R16 ஆகிய அளவுகளில் 16 இன்ச் அல்லது 17 இன்ச் ரிம் சைஸ் கொண்ட சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அறிமுகம்

அறிமுகம்

வரும் 23ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

தற்போதைய மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்படும் நிலையில், புதிய இன்னோவா காரின் டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

Most Read Articles
English summary
Let's take a closer look at the difference between the Toyota Innova 2016 model vs 2015 model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X