இப்போதைய ஸ்விஃப்ட்டுக்கும், புதிய ஸ்விஃப்ட்டுக்கும் உள்ள வேறுபாடுகள்

By Meena

சாலை ஓரத்தில் சாவகசமாக நின்று, போகிற காரையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் எந்த மாடல் கார்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன? என்பது குறித்த ஒரு முடிவுக்கு வரலாம். கடுமையான வேலைப் பளுவிலும் (!) அப்படி ஒரு ஆய்வை நாம் நடத்தியபோது பல உண்மைகளைக் கண்டறிய முடிந்தது. எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக் கூடிய ஆய்வு முடிவாகக் கூட அது இருக்க வாய்ப்புள்ளது. பாஸ் சும்மா மொக்கை போடாதீங்க... விஷயத்துக்கு வாங்க என்கிறீர்களா? சரி வந்து விடுகிறோம்.

சாலையில் போகிற கார்களில் அதிகமானது சந்தேகமே இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட்தான். கடந்த 2004-ஆம் ஆண்டில் அந்த மாடல் அறிமுகப்படுத்திய நாள் முதல் இன்று வரை பாகுபலி ரேஞ்சுக்கு பிரம்மாண்ட ஹிட்டடித்துள்ளது அந்த கார். பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றான்? என்ற கேள்விக்கு விடை தேட எல்லோரும் அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் எனக் காத்திருப்பதைப் போலவே, ஸ்விஃப்ட் நான்காம் தலைமுறை மாடலுக்காக ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ அந்த மாடல் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட அந்த மாடலில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை அறிய அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. வாருங்கள் தற்போது உள்ள ஸ்விஃப்ட்டுக்கும், அடுத்த தலைமுறை மாடலுக்கும் இடையேயான ஒப்பீடைப் பார்க்கலாம்....

தற்போதைய ஸ்விஃப்ட் மற்றும் புதிய ஸ்விஃப்ட்: ஒப்பீடு

முகப்பு டிசைனைப் பொருத்தவரை 2017 மாடல் ஸ்விஃப்ட், சிறிதளவும் கம்பீரம் குறையாமல் இருக்கிறது. ஸ்டைலான லுக், மாடர்னான வடிவமைப்பு ஆகியவை சிறப்பம்சம்.

தற்போதைய ஸ்விஃப்ட் மற்றும் புதிய ஸ்விஃப்ட்: ஒப்பீடு

முகப்பு கிரில் மற்றும் ஏர் டேம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. இதைத் தவிர கிரில்லைச் சுற்றி அறுங்கோண வடிவமைப்பிலான ஸ்ட்ரக்சர் அமைக்கப்பட்டுள்ளது.

முகப்பு விளக்குகளை எடுத்துக் கொண்டால், தற்போது உள்ள மாடலில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு ஆங்குலர் ஷேப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேல் டாப், அதாவது கூரையைப் பொருத்தவரை மேலிருந்து கீழாக சரியும் படி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஸ்விஃப்ட் மற்றும் புதிய ஸ்விஃப்ட்: ஒப்பீடு

சைடில் இருந்து புதிய ஸ்விஃப்ட் காரைப் பார்த்தால் அட்டகாசமான ஸ்போர்ட் மாடல் லுக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்புற வடிவமைப்பு கிட்டத்தட்ட இரு மாடல்களிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

தற்போதைய ஸ்விஃப்ட் மற்றும் புதிய ஸ்விஃப்ட்: ஒப்பீடு

இன்டீரியரை எடுத்துக் கொண்டால், பக்கா ஸ்போர்டிவ் மாடல் வடிவமைப்பு புதிய ஸ்விஃப்ட்டில் கொடுக்ககப்பட்டுள்ளது. ஏசி காற்று வரும் பகுதி தற்போதைய மாடலில் செவ்வக வடிவில் உள்ளது. புதிய மாடலில் வட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஸ்விஃப்ட் மற்றும் புதிய ஸ்விஃப்ட்: ஒப்பீடு

ஸ்டியரிங், கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை 2017 மாடலில் மாடர்னாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர டூயல் கலரில் இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. போலோ கார் போன்றே தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் இருக்கிறது.

 எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்

எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்

எஞ்சின் திறனைப் பொருத்தவரை தற்போதைய ஸ்விஃப்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

இதே அம்சங்களுடன்தான் புதிய ஸ்விஃப்ட் மாடலும் வரப்போகிறது. கூடுதலாக ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் அதில் இடம்பெற்றுள்ளது.

 சிறப்பம்சஙகள்...

சிறப்பம்சஙகள்...

புதிய ஸ்விஃப்ட் மாடலில் பின்புற இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட் உள்ளது. இதைத் தவிர, தொடுதிரை இன்போயின்மெண்ட் சிஸ்டம் நேவிகேசன் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. தற்போதைய மாடலைப் போலவே 2 ஏர் பேக்-கள், யுஎஸ்பி, புளூடூத், பவர் விண்டோ, ஆட்டோமேடிக் டெம்பரேச்சர் கன்ட்ரோல், போன், ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

 விலை...

விலை...

2017 மாடலின் விலை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலுக்கும், புதிய ஸ்விஃப்டுக்கும் இடையேயான விலை வேறுபாடு ரூ.50,000-ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.

தற்போதைய ஸ்விஃப்ட் மற்றும் புதிய ஸ்விஃப்ட்: ஒப்பீடு

மொத்தத்தில் அனைவரது உள்ளங்கவர்ந்த மாடலாக தற்போதைய ஸ்விஃப்ட் உள்ளது. அதை அடித்து நொறுக்கிவிட்டு புதிய விற்பனை உச்சத்தைத் தொட வியூகம் வகுத்துக் காத்திருக்கிறது 2017 மாடல்.

வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு வரும் புதிய மாடல் மக்களின் மனதைக் கொள்ளையடிக்கப் போகிறதா? இல்லையா? என்பதை அறிய நமக்கும் ஆவலாக உள்ளது.

Most Read Articles
English summary
2017 Swift vs The Current Model - Is The Old Ready To Make Way For The New?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X